பாலைவனத்தின்பன்னீர் பூக்கள் -17

  • பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் – 17

 

  • தேடல் க்கான பட முடிவு

 

அத்தியாயம் -17

 

அத்தியாயம் -17

 

மாலினியோ ஜீவாவிடம் பேசி கொண்டு இருக்க அவனோ   கண்களாலே ஜமுனாவை  மனதில் நிரப்பி கொண்டிருந்தான். பார்த்த முகம் தான் என்றாலும் ஏனோ மனதில் காதல் வந்த பிறகு அவளின் சிறு அசைவும் அவனுக்கு புதிதாக  தோன்றியது. தோழிகள் இருவரும் சென்ற பிறகு அவள் முகத்தை சுளித்தபடி சுற்றும் பார்த்தவள் பின்னர் ஏதோ முனுமுனுத்தபடி அருகில் இருக்கும் நாற்காலியை  இழுத்து போட்டு அமர்ந்த வரை அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து பார்த்து  கொண்டிருந்தான்.

 

அப்போது மாலினியின் வகுப்பு தோழி வர அவளிடம் பேசியபடி அவள் சற்று தூரம் தள்ளி போக அவனது கவனம் முழுவதும் ஜமுனாவே நோக்கியே இருந்தது. அப்போதுதான் அவனின்  பக்கம் திரும்பினாள் அவள்

 

இரு விழிகள் கலக்க அப்போது அவனின் விழிகள் சொல்லும் செய்தி புரியாமல் அவள் மிரண்டு விழிக்க ….அவளின் தடுமாற்றத்தை சிறிது நேரம் ரசித்தவன் பின்னர் என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தி கேட்கவும் ……..அந்த செயலில் அவளின் முகம் சிவக்க  …பின்னர்  அவனின் பார்வை வீச்சு தாங்காமல் அவள் இமைகள் தரை நோக்க…….சில நொடிகளில் அவளுக்குள் நடந்த மாற்றத்தை கண்டு கொண்ட அவன் மனம் உற்சாகத்தில் துள்ளி குதித்தது.

 

..

 

உடனே அவள் அருகில் வந்தவன் நாற்காலியை இழுத்து போட்டு   நெருங்கி அமரவும் ஜமுனாவோ அங்கிருந்து  வேகமாக எழ முயற்ச்சிக்க அதில்  கால்கள் தடுமாற  .

 

“ஹே பார்த்து  பார்த்து…” என அவள் கைகளை பிடித்து நேராக  நிறுத்தியவன்   … “இப்போ எதுக்கு இப்படி அவசரமா எழுந்த…கீழ விழுந்திருந்தா என்னாகிறது” என சொல்லவும்

 

“இல்லை அது வந்து வந்து …எனக்கு கொஞ்சம்…” என வார்த்தை தடுமாற  அந்த நிலையிலும்  அவன் கைளில் இருந்து தனது கையை விடுவிக்க முயற்சித்தாள்.

 

 

“ரிலாக்ஸ் ஜானு….இப்போ என்னாச்சு…ஏன் உனக்கு இப்படி வேர்க்குது…முதல்ல உட்கார்”….என அவளை அதே நாற்காலியில் அமரவைத்தவன் அருகில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுக்க .

 

ஆனால் அவளோ அதை வாங்காமல் அதிர்ச்சியுடன் அவனையே  பார்த்து கொண்டு இருந்தாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்து கொண்டு இருந்தது.

 

அதை கண்டதும் அவன் பதட்டத்துடன்  என்னாச்சுமா ? எதுக்கு இப்போ அழுகிற…. ஏதாவது அடிபட்டுடுச்சா?,,”  என கேட்க

 

அதற்குள் “ஹே ஜம்மு உனக்கும் சேர்த்து தான் சமோசா  வாங்கிட்டு வந்திருக்கேன்” என சொல்லிகொண்டே அவளின் அருகில் வந்து அமர்ந்த  மாலினி அவள் கண்களில் கண்ணீரை பார்த்ததும்

 

“என்னாச்சு மாலினி” என பதறியவள்  அருகில் ஜீவா நிற்பதை பார்த்ததும் இவன் தான் ஏதோ பேசி இருக்கிறான் என நினைத்து   “என்ன ஜீவா நீங்க…..உங்ககிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்…ஜம்மு மனசு கஷ்டப்டற மாதிரி ஏதும் பேசாதீங்கன்னு …..ஏன் இப்படி பண்றீங்க?…நீங்க முதல்ல இங்கிருந்து கிளம்புங்க…” என சொல்ல

 

“இல்லை மாலினி நான் ஏதும்…” என ஆரம்பித்தவன் ஜம்முவின் முகத்தை  பார்க்க அவளின் பார்வையோ வேறு பக்கம் இருக்க  பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

 

ஜெஸியின் ஊடல் புதிதல்ல என்றாலும் ஏனோ இன்று அவளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்க அவளை விடாமல் துரத்தி கொண்டே பின்னால் சென்றான் நந்து.

 

“ஹே ஜெசி உன் நந்து மாமா பாவம்ல….கொஞ்சம் என்னை பாரேன்…என் கூட பேசு…..நான் செஞ்சது தப்புனா நீ செஞ்சதும் தப்புதானே” …..என அவனை நியாயபடுத்திகொள்ள அவன் பேச

 

திரும்பி அவனை பார்த்து முறைத்தவள் பின்னர் முகத்தை திருப்பி கொண்டு நடந்தாள்.

 

சட்டென்று அவள் கைகளை பிடித்து இழுத்து கொண்டு  அருகில் இருக்கும் மரத்தின் பின்புறம் சென்றவன் அவளை மரத்தோடு சாய்த்து இருபுறமும் கைகளை கொடுத்து அவளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தான். அவனது இந்த செயலில் அதிர்ந்த ஜெசி “டேய் லூசு என்னடா பண்ற…” என கத்த

 

அவனோ அதை கண்டு கொள்ளாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

 

சில நொடிகள் அங்கு  அமைதி நிலவ

 

அவன் பார்வைக்கு எதிர்பாரவை பார்க்க முடியாமல் தலை குனிந்தவள் பின்னர் மெதுவாக “இப்போ என்ன வேணும் உனக்கு” என வாய்க்குள் முனகினாள்.

 

“இப்போ எதுக்கு முனகற… நான் தான் எதா இருந்தாலும் பேசி தீர்த்துகலாம்னு சொல்றேன்ல” என அவன் கொஞ்சம் அதட்டும் குரலில் சொல்லவும்

 

“போடா …நீதான என்கிட்டே பேசாம போன…என்னை பார்த்து பார்த்து முறைச்சுகிட்டு இருந்த….இப்போ மட்டும் எதுக்கு வந்து பேசற” என அவள் கோபபட

 

“ஏய் நீ பண்ண காரியத்துக்கு உன்னை அடிச்சு துவச்சிருக்கணும்…..ஏதோ போனா போகுதுன்னு உன்கிட்ட இப்போ பேசிட்டு இருக்கேன்…..உன் தோழி சொன்னானா உனக்கு புத்தி எங்க போச்சு….உங்கிட்ட எத்தனை முறை ஏதாவது பிரச்சனையான்னு கேட்டு இருப்பேன்….ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லலை நீ …….இப்போ வந்து என்னையே குறை சொல்றியா” என அவனும் பதிலுக்கு கோபபட  ….

 

அவனது கோபத்தில் உள்ள நியாயம் புரிந்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் “எனக்கு வேற வழி தெரியலை நந்து….மாலினி எனக்கு தோழி ….அவளோட பெர்சனல நான் எப்படி வெளிய சொல்ல முடியும்” என சொல்லும்போதே என்னை நம்பு என அவள் கணகள் இறைஞ்சி நிற்க

 

ஹே என்ன இது என அவளை இழுத்து தன் தோளோடு அனைத்து கொண்டவன் “எனக்கும் புரிது ஜெசி…ஆனா மாலினி விஷயம் எவ்ளோ சிக்கலானது தெரியுமா? அதில உனக்கு ஏதாவது பிரச்சனை வந்திருந்தா என்னால அதை நினைச்சு கூட பார்க்க முடியல” என சொல்லும்போதே அவன் குரலில் ஒரு நடுக்கம் தெரிய

 

“ம்ம் இப்போதான் புரியுது நந்து…..மாலினி எல்லா விஷியமும் சொன்னா…அவன் இவ்ளோ பெரிய தில்லாலங்கடியா இருப்பான்னு எங்களுக்கு தெரியலை. இனி இந்த மாதிரி ஏதும் நடக்காது..ஆனா நீயும் இப்படி என்மேல கோவிச்சுகிட்டு பேசாம இருக்காத …என்னால முடியலடா…. நீ பேசாம இருந்தப்ப அழுகை அழுகையா வந்தது தெரியுமா ?” என அவள் சிறுபிள்ளை

போல் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

 

“ஹே இது என்ன ஜெசியோட புது அவதாரம் போல….நீ மத்தவங்கள அழுக வச்சுதான் பார்த்திருக்கேன்….நோ நோ என் ஜெசி எப்பொதும் சிரிச்சுகிட்டே தான் இருக்கணும்….இப்படி எல்லாம் அழகூடாது….நீ என் உயிர் ஜெசி….உன்னை விட்டு நான் எங்க போக முடியும்  என்றவன்.உன்னை சிரிக்க வைக்க நான் இப்போ ஒரு கவிதை சொல்லட்டுமா…” என பேச்சை மாற்ற

என்னது கவிதையா என  அவனிடம் இருந்து விலகி சற்று தள்ளி நின்றவள் “வேண்டாம் நந்து வேண்டாம்….நீ அன்னைக்கு சொன்ன கவிதையில என் காதில வந்த ரத்தம் இப்போ தான் நின்னுச்சு ..மறுபடியுமா” என அதிர்ந்தவள்

அதற்குள்

என் விழிவழியே இதயம் நுழைந்தவளே  

உயிர் வரை ஊடுருவி உந்தன்

பிம்பம் என்னில் கரைந்திட

உன்னை அறிந்து கொள்ள

வார்த்தைகள் தேவையா?

என் முகம் கண்டதும் உன்

முகத்தில் தோன்றும் ஒளியில்

அந்த வெண்ணிலவும் வெட்கம்

கொண்டு மறைந்து கொள்ளுமே!   

    .

அவனின் மனதை கவிதையாக சொல்ல கேட்டவளின் மனம் அவனது காதலில் கரைந்து முகத்தில் இவன் என்னவன் என்ற பெருமிதத்தோடு ஓடி சென்று அவனை இறுக அணைத்து கொண்டாள்.

 

“ஏய் மாலினி எவ்ளோ நேரமா கத்திகிட்டு இருக்கேன்….இப்போ சாப்பிட வர போறியா இல்லையா..எப்போ பார்த்தாலும் அந்த போனை நோன்டிகிட்டே இருக்க வேண்டியது….என்னதான் இருக்கோ அதுல” என்ற அன்னையின் குரல் அவள் காதில் விழுந்தாலும் அதை உணரும் நிலையில் அவள் இல்லை.

 

ஆம் அவள் இந்த உலகிலே இல்லை…இப்போது அவளின் நினைவில் அவன் மட்டுமே நிறைந்திருந்தான். இந்த புதிய அனுபவம் அவளுக்கு பிடித்து இருந்தது. தனது அறையில் மெத்தையில் படுத்துக்கொண்டு அவன் நினைவுகளை அசைபோடுவதில் ஒரு அலாதி சுகம் இருப்பதை அப்போது தான் அவள் உணர்ந்தாள்.

 

அதற்குள் அவள் அன்னை மேலே வந்து அவளை திட்டி சாப்பிட அழைத்து செல்ல அவள் எப்படி நடந்து சென்றாள்..என்ன உணவு உண்டால் என்பது அவளுக்கு தெரியாது. தன் மனதை அறிந்ததில் இருந்து அவள் கனவிலே மிதந்து கொண்டிருந்தாள்.

 

இரவு நேரத்தில் மெல்லிய விளக்கு ஒளியில் இரவு உடையில் கண்ணாடி முன் நின்றவள் ஏனோ இன்று தான் மிக அழகாக இருப்பது போல தோன்ற ,அதற்கு காரணமானவனை நினைக்கும்போது முகத்தில் வெட்கமும் ,காதலும் போட்டி போட மனமோ சொல்ல முடியாத சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.

 

ஆரம்பத்தில் இருந்தே தனக்கு கஷ்டம் வரும் போது எல்லாம்  அவன் தான் உதவி செய்து இருக்கிறான் .. படிப்பு விஷியத்தில் இருந்து இந்த சதீஷ் விஷயம்  வரை அவன் தான் தீர்த்து வைத்திருக்கிறான். இவன் வாழக்கை முழுவதும் உடன் வந்தால் எனக்கு எந்த துன்பமும் இல்லை… நான் மிகவும் கொடுத்து வைத்தவள்  என அவள் மனதில் கற்பனைகள்   கரை புரண்டு ஓடிக்கொண்டு இருந்தது.

 

அப்போது திடீரென   “அவனை காதலிக்கும் நீ அதிர்ஷ்ட்காரிதான். ஆனால் அந்த அதிர்ஷ்டம் அவனுக்கு இருக்குமா? உனது பழைய வாழ்க்கையை  மறந்து விட்டாயா? பணத்தில்,அழகில்  உயர்ந்து இருந்தாலும் சதீஷ் விஷியத்தில் நீ எந்த அளவு தரம் இறங்கி இருந்தாய் என்பதை மறந்து விடாதே…உன்னை எப்படி ஏற்பான் அவன்”  என அபஸ்வரமாக  மனதில் ஒரு எண்ணம் தோன்ற

 

அதுவரை இருந்த உணர்வுகள் எல்லாம் நொடிபொழுதில் மறைந்திட விருட்டென்று படுக்கையை விட்டு எழுந்தவள் முகம் எல்லாம் வேர்த்து இருக்க அவள் மனம் கேட்ட கேள்வியை அவளாலே ஜீரனிக்க முடியவில்லை. ஆனால் அதானே உண்மை என மீண்டும் அவள் மனசாட்சி கேட்க அப்போது தான் நிதர்சனம் அவளுக்கு புரிந்தது.

 

அப்போ ஜீவாவை காதலிக்கும்  தகுதி எனக்கு இல்லையா?  அறியாத வயதில் தெரியாமல் செய்த தவறுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா? என நினைக்கும்போதே அவளின் உடல் அதிர்ச்சியில் குலுங்க

 

இல்லை, இல்லை அப்படி ஏதும் இல்லை. ஜீவா மிகவும் நல்லவர் …என்னை புரிந்து கொள்வார்…என்னை ஏற்று கொள்வார் என அவள் தன் மனதோடு வாதாட

 

ஆனால் உனக்கு மனசாட்சி இருக்கிறதல்லவா ? நீ தானே சொல்கிறாய் உன்னோட ஒவ்வொரு கஷ்டத்திலும் அவன்தான்  உதவிக்கு வருகிறான் என்று….அவனுக்கு நீ செய்யும்  நன்றி கடன் இது தானா? என தொடர்ந்து மனதில் கேள்வி எழ

 

எந்த ஒரு செயலும் தடுக்கப்படும்போதும் , மறுக்கப்படும்போதும் தான் அதன் வேகம் அதிகம் இருக்கும். மாலினியின் காதல் கொண்ட மனமும் அதில் தப்புமா என்ன ? அவளின் காதலை அவள் மனமே மறுக்க அவளோ அவனில் தன்னை நிரப்பி அவனின்  காதலை வென்று விட முடிவு செய்து விட்டாள்.

 

.எனக்குள் நீ என உணர்ந்த

நொடியில்கற்பனைகள் கரை புரள    

நிதர்சனமோ என்னை மிரட்ட

அஞ்சிடுமா காதல் மனம்!

எனது வரையறை இல்லா காதலில்

உன்னில் என்னை நிரப்பிட

காதல் யாகத்தை

தொடங்கிவிட்டேனடா! 

 

 

கல்லூரி கேண்டீனில் நண்பர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருந்தான் நந்து. மச்சான் வர வர நம்ம ஹச் ஒ டி தொல்லை தாங்க முடியலடா….பைனல் இயர்னு ரொம்ப பூச்சாண்டி காட்றான்….கிளாஸ் டைம்ல பாத்ரூம் போக கூட விட மாட்டேன்கிறார்…..ப்ராக்டிகல் மார்க்கல கை வச்சிடுவேணு மிரட்றார்டா” என ஒருவன் புலம்ப

 

“உனக்காவது பரவாயில்லை மாமு ….அந்த குண்டு பூசணிக்காய்  பிசிக்ஸ் லெக்சர்  என்னை பார்த்து  இப்படி முட்டை மார்க் எடுத்து வைச்சிருக்க…உன்னை எல்லாம் எந்த பொண்ணு திரும்பி பார்ப்பா…உனக்கு கல்யாணமே  ஆகாதுன்னு சாபம் விடுதுடா ” என மற்றொருவன் தன் சோக கதைய சொல்ல

 

“ஏண்டா கல்யாணத்துக்கும் பிசிகிஸ்க்கும் என்னடா சம்பந்தம்” என அருகில் இருப்பவன் சந்தேகமாக கேட்கவும்

 

“அதாண்டா எனக்கும் புரியலை…கெமிஸ்ட்ரி மிஸ் சொல்லிருந்தாலும் ஓகே…கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகாதுன்னு சொல்லலாம்  ….ஆனா பிசிக்ஸ் மிஸ்  சொல்லுதுடா” என மீண்டும் அவன் புலம்ப

 

“மச்சி அப்போ பிசிகிஸ்க்கும் மேரஜ்க்கும் ஏதோ சம்பந்தம் இருக்குமோ …. டேய் கூப்பிட்றா நம்ப பசங்கள…..இதை பத்தி உடனே தெரிஞ்சாகனும்” என துள்ளவும்

 

“டேய் அப்போ எனக்கு கல்யாணமே ஆகாதாடா” என அந்த மாணவன்பு மீண்டும் புலம்ப

 

மற்றொரு நண்பனோ “விடு மச்சி இந்த இயர் ப்ராஜெக்ட்டா இதை எடுத்துகலாம்…மேரஜ்க்கு பிஸிக்ஸ் முக்கியமா கெமிஸ்ட்ரி முக்கியமான்னு  என்றவன்  அருகில் இருக்கும் நந்துவை பார்த்து ஏண்டா இத பத்தி என்ன நினைக்கிற ?” என கேட்க

 

“டேய் கடுப்பேத்தாதீங்க…நானே இங்க ஒரு சாமியாரா இருந்தவன் எப்படி சன்னிலியோனி  ரசிகனா மாறினான்னு தெரியாம குழம்பிட்டு இருக்கேன்…இவனுக வேற என சொல்லிமுடிக்கவும்” அப்போது  ஜீவா அங்கு  வரவும் சரியாக இருந்தது.

 

“மச்சான் உன்னை எங்க எல்லாம் தேடறது? இன்னைக்கு மதியம் கிளாஸ் இல்லை…..ஏதாவது படத்துக்கு போலாமா?” என அவன்  கேட்கவும்

 

“என்னது படத்துக்காஆஆ!!!!! ….. என சுற்றி உள்ள நண்பர்கள் அதிர

 

“டேய் இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி? இன்னும் இருக்குடா” என மனதில் நினைத்த நந்து

 

“எந்த படத்துக்கு போலாம் மச்சான்” என கேட்கவும்

 

“ஹர ஹர மகாதேவினு ஒரு படம் வந்திருக்காம். அதுக்கு போலாம் மச்சான்” என சொல்லி முடிக்கும் முன்

 

அருகில் இருப்பவன் “என்னதுஊஊஉ அந்த படத்துக்காஆஆ …அதும் நீ போறீயா? டேய் எனக்கு மயக்கம் வருதுடா  “ என தலையை பிடித்து அமர

 

நந்துவோ “மச்சான் எதா இருந்தாலும் சொல்லிட்டு செய்…இங்க பாரு ஏற்கனவே பயபுள்ள பிசிக்ஸ்ல வீக்காகி கெமிஸ்ட்ரில குழம்பி போய் கிடக்கு…இதுக்கு மேலயும் அதிர்ச்சி தாங்காது” என்றவன் ..

 

நண்பர்களிடம் இருந்து அவனை பிரித்து அழைத்து சென்றவன் “டேய் உனக்கு என்னடா ஆச்சு …இந்த ஒருவாரமா உன்னோட நடவடிக்கை ஏதும் சரியில்லை…..ஊர்ல இருந்து வந்ததில இருந்தே ஒரு மார்க்கமா சுத்திகிட்டு இருக்க …. கேட்டாலும் பதிலும் இல்லை…அடிக்கடி காணாம போய்டர…இப்போ படத்துக்கு போலாமான்னு கேட்கிற …..உடம்பு ஏதும் சரியில்லையா …இல்லை அப்பா கூட மறுபடியும் சேர்ந்திட்டியா” என அவன் கேட்கவும்

 

தந்தையின் பெயரை கேட்டதும் அதுவரை உற்சாகமாக இருந்த மனநிலை மாறி முகத்தில் கடுமை ஏற நந்துவின் பிடியில் இருந்து தன் கைகளை விடுவித்தவன் வேகமாக விடுதியை நோக்கி நடந்தான்.

 

அன்னபறவையாய்  அவனுள் இருக்கும்

அவளின் காதலை பிரித்துணர்ந்து

 மகிழ்ந்திருக்கும் வேளையில்,

அது காதலல்ல கானல் நீர் என்றதும்

தவித்து போனது நேசம் கொண்ட நெஞ்சம்!

 

பூக்களின் வாசம்  தொடர்ந்து வீசும் .

 

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்–16

ஹாய் ப்ரிண்ட்ஸ் 

அனைவர்க்கும் இனிய காலை வணக்கம்

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் அத்தியாயம் பதினாறு (16) இதோ

Image result for காதல்

 

அத்தியாயம் – 16

தன் மனதிற்குள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி கொண்டு இருந்தவன் விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரிக்கு வரும்போது ஒரு தெளிவான முடிவோடு வந்தான் ஜீவா .

இங்கு வீட்டில் இருந்த ஜமுனாவின் மன நிலையோ பெரும் குழப்பத்தில் ஆட்கொண்டிருந்தது. ஆம் அங்கு சின்னவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஜமுனாவின் அலட்சியம் தான் காரணம் என பெரியம்மா வீட்டார் அனைவரும் அவள் மீதே குற்றம் சுமத்தினர். பணத்திற்காக வந்தவளுக்கு படிப்பு எதற்கு என பெரியம்மாவை அவர்கள் கேள்வி கேட்க அவரோ அந்த கோபத்தை ஜமுனாவின் மீதே காட்டினார்.

அவர்கள் பேசிய பேச்சை இப்போது நினைக்கும்போதும் ஜமுனாவிற்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. என்ன மனிதர்கள் இவர்கள் ….நாக்கிற்கு நரம்பு இல்லை என்பதால் எதை வேண்டுமானாலும் பேசி விடுவதா ? என கோபம் வர அதை வெளிபடுத்த முடியாத தனது இயலாமையை நினைத்து தனக்கு தானே நொந்து கொண்டாள்.

அவளை வீட்டை விட்டு அனுப்பி விடலாம் என பெரியம்மா வீட்டினர் முடிவும் செய்து விட்டனர். அந்த நேரத்தில் சின்னவரின் பிடிவாதம் மட்டுமே அவளை அங்கு இருக்க வைத்தது. அதுமட்டும் அல்லாமல் அவளுக்கு ஒரு மரியாதையும் பெற்று தந்தது.

ஆம் ஜமுனா என்னை விட்டு போக கூடாது….. அவள் என்னோடு தான் இருக்க வேண்டும்…இல்லையெனில் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடுவேன் என சின்னவர் சொன்னதால் மட்டுமே அனைவரும் அடங்கினர். ஏனெனில் இந்த சொத்தில் சரிபாதி அவருக்கும் பங்கு உண்டு அல்லவா.. பெரியம்மாவும் அவளை இனி இது போல் நடந்து கொள்ள கூடாது என எச்சரித்து சேர்த்து கொண்டார். இப்படி ஒரு பெரிய போராட்டத்தை முடித்து விட்டு தான் ஊருக்கு வந்தாள் அவள். இங்கு வீட்டின் நிலைமையை பார்த்ததும் இனி படிப்பு மட்டுமே தனது குறிக்கோள்…மனதை வேறு எங்கும் செலுத்த கூடாது என முடிவோடு மீண்டும் கல்லூரிக்கு வந்தாள்.

விடுமுறை முடிந்து மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு வரும் அந்த நாள் அவர்களுக்கு திருவிழா தானே … மூன்று தோழிகளும் அந்த மனநிலையில் தான் இருந்தார்கள்.

மரத்தின் அடியில் அமர்ந்து தான் ஊருக்கு சென்று வந்த கதையை ஜெசி சொல்லி கொண்டிருக்க தோழிகள் கேட்டு கொண்டிருந்தனர். அப்போது மாலினியின் அலைபேசி ஒலிக்க எடுத்து பார்த்தவளின் முகம் இருண்டு போனது.

ஆம் சதீஷ் தான் அழைத்திருந்தான். அவளின் முகமாற்றத்தை வைத்தே அது யாரென கண்டுபிடித்த ஜமுனா வேகமாக அலைபேசியை பிடுங்கி ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்.

“என்ன மாலு கண்ணு இப்போ உடம்பு எல்லாம் சரியாகிடுச்சா? இன்னும் ஆகலைனா சொல்லு ……..போன வாரம் நீ வரேன்னு சொல்லிட்டு ஏமாத்திட்ட…இந்த முறை நானே உன் வீட்டுக்கு வந்து உனக்கு ட்ரீட்மென்ட் தரேன்… எந்த டாக்டரும் தராத புது டெக்னிக்ல” என இளித்து கொண்டே ஒரு மாதிரியான குரலில் விரசமாக பேச

ஜெசியோ கோபத்தில் பற்களை கடிக்க, ஜமுனாவின் முகமோ அக்னியாய் ஜொலிக்க, மாலினி கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்க அலைபேசியையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள்.

அதற்குள் “என்னமா கண்ணு சத்ததையே காணோம்” என்றவன் சட்டென குரல் மாற “இங்க பாருடி அடுத்த வாரம் எனக்கு பிறந்த நாள்….ஒரு ஹோட்டலின் முகவரி சொல்லி அங்க நீ வர என கட்டளையிடும் குரலில் சொன்னவன் பின்னர் அப்புறம் போன முறை உன் கூட ஒரு பொண்ணு வந்தாளே… முடிஞ்சா அவளையும் கூட்டிட்டு வா….ஆளு குட்டையா இருந்தாலும் செம கட்டையாதான் இருக்கா” என அவன் சொல்லி முடிக்கும் முன் “யூ ராஸ்கல் பிளடி ஷிட்…ஏண்டா அறிவுகெட்ட நாயே உன்கூட பிறந்தவ , உன்னை பெத்தவள இப்படிதான் சொல்லுவியா” என ஆரம்பித்து தனக்கு தெரிந்த அனைத்து கெட்ட வார்த்தைகளிலும் அவனை திட்டியவள் கோபத்தில் கையில் இருந்த அலைபேசியை தூக்கி எறிந்தாள் ஜெசி .

தோழிகள் இருவருமே அவளது ஆக்ரோஷத்தில் திகைத்து நிற்க

“என்னடி நினச்சுகிட்டு இருக்கான் அவன் மனசில …… நான் அப்பவே போலிஸ்க்கு போலாம்னு சொன்னேன் …..நீங்க தான் வேண்டாம் ..பிரச்சனை ஆகிடும்னு சொல்லி தடுத்திட்டிங்க………. இப்போ எப்படி எல்லாம் பேசறான் பார்….. நாளைக்கு கூப்பிட்றான்… என்ன பண்ண போறீங்க…..அங்க போய் ஆட போறீங்களா “ என ஆத்திரமும் கோபமுமாக படபடவென ஜெசி பேசவும்

உடனே அவளை தன் தோளோடு மெதுவாக அணைத்து அவளின் கோபத்தை தணிக்க முயன்றாள் ஜமுனா. அவளது முயற்சியில் கொஞ்சம் கோபம் தணிந்தவள் “இங்க பாரு ஜம்மு இனியும் நம்ம அமைதியா இருக்க கூடாது. இதற்கு இப்பவே ஒரு முடிவு எடுத்தே ஆகணும்” என்றாள்.

“எனக்கும் புரியுது ஜெசி….இவளோட உடல்நிலையை நினச்சு தான் நம்ம அந்த முடிவ தள்ளி போட்டோம்….இப்போ அதை செயல் படுத்திடலாம் என்றவள் என்கிட்ட இரண்டு திட்டம் இருக்கு” என மீண்டும் அந்த திட்டத்தை விவரிக்க எப்போதும் தடை சொல்லும் ஜெஸியும் அதற்கு ஒத்து கொண்டாள்.

முதலில் அவனிடம் இவள் சம்பந்தமாக எத்தனை போட்டோக்கள் வைத்திருக்கிறான்…எங்கு வைத்திருக்கிறான் என தெரிந்து கொள்ள வேண்டும்….அதற்கு முதலில் மாலினி சதிஷிடம் அவனை விரும்புவது போல் பேசி அவனிடம் இருந்து தகவலை சேகரிக்க வேண்டும். அதை தெரிந்த பின் அடுத்த திட்டத்தை செய்ல்படுத்த வேண்டும் என்றாள்.

மேலும் அவனிடம் எப்படி எல்லாம் பேசி நடித்து அவனிடம் இருந்து உண்மையை வாங்க வேண்டும் என அவர்கள் சொல்லி கொண்டிருக்க மாலினியோ சாவி கொடுத்த பொம்மை போல் எல்லாவற்றிற்கும் தலை ஆட்டி கொண்டிருந்தாள். அதற்குள் வகுப்பு மணி ஒலிக்க அனைவரும் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.

ஜமுனாவின் திட்டம் சரியானதாக இருந்தாலும் அதில் கொஞ்சம் பிசகு ஏற்பட்டாலும் அதன் பின் விளைவுகளை நினைக்கையில் மாலினியின் இதய துடிப்பு ஒரு நிமிடம் நின்று துடித்தது. அதை நினைத்தபடியே குழப்பமான மனதோடு வகுப்பறைக்குள் நுழைந்தவள் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள். அப்போது அவள் பெயரை சொல்லி ஒருவன் அழைத்ததோ,அவளின் பின்னால் வந்ததோ அவள் அறியவில்லை.

மாலை வீட்டிற்கு வந்த ஜமுனா கொஞ்சம் பதட்டத்துடனே இருந்தாள். ராணிம்மா கேட்டதற்கும் தலைவலி என்றவள் கைகள் அந்த அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்க நினைவுகளோ மாலினி இந்நேரம் சதிஷிடம் பேசி இருப்பாளா …அவன் என்ன சொல்லி இருப்பான் என்ற யோசனையிலே இருந்தது.

அந்த நேரத்தில் அவளின் கையை ஆறுதலாக ஒரு கை பற்ற நிமிர்ந்து பார்த்தவள் சின்னவர் அவளை பார்த்து சிரித்து கொண்டு இருந்தார்.

“அட தூங்கி எழுந்தாச்சா என்றவள் இருங்க சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என நகர

அவனோ வேண்டாம் என்று தலையாட்டியவன் அவளை தன் அருகில் அமர வைத்து தன் தோளில் சாய்த்து கொண்டான். ஏனோ அலைபாயும் மனதிற்கு அந்த ஆறுதல் அமைதி கொடுக்க அவளும் அமைதியாக இருந்தாள்.

சில நொடிகள் செல்ல மெல்ல அவள் முகத்தை தூக்கி அவள் விழிகளை நேருக்கு நேர் பார்க்க

அவளோ சிறித்து கொண்டே “எனக்கு ஒன்னும் இல்லை….நான் நல்லா இருக்கேன்…..என் தோழிக்கு தான் ஒரு பிரச்சனை …அதை எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.

அவனுடன் இத்தனை நாட்கள் இருந்திருப்பதால் அவன் விழிகளை பார்த்தே அவன் சொல்ல வருவதை அறிந்து கொள்வாள் ஜமுனா. அவளின் இந்த குணம் தான் பெரியம்மாவை மிகவும் கவர்ந்தது. ஒரு தாயின் உணர்வை அவளிடம் கண்டார் அவர். அதனாலே தான் பல எதிர்ப்புகளுக்கும் இடையே அவளை இங்கு வைத்திருக்கிறார்.

தன்னை அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தும் கூட மற்றவர்களை புரிந்து அவர்கள் முகத்தில் இருக்கும் சிறு மாற்றத்தையும் உணர்ந்து அதற்கு ஆறுதல் சொல்லும் அவனின் இந்த பாசமே அவளையும் இவனுடன் பிணைத்திருந்தது.

அவனோ மீண்டும் நம்பாத பார்வை பார்க்க …”அட நான் உண்மையதான் சொல்றேன் என்றவள் உங்ககிட்ட என்னோட உயிர் தோழிகள் மாலினி, ஜெசி பத்தி சொல்லி இருக்கேன்தான அதில் மாலினிக்கு கொஞ்சம் பிரச்சனை…அதை தான் எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சுட்டு இருக்கேன்” என்றாள்.

ஆம் வீட்டில் பெரியம்மா அடிக்கடி ஊருக்கு சென்று விடுவதால் ராணிம்மா இவள் , சின்னவர் மட்டுமே இருப்பார்கள். அதிலும் இவள் அதிக நேரம் சின்னவரின் அறையில் இருப்பதால் அவரிடம் எல்லாவற்றையும் சொல்லி விடுவாள் ஜமுனா.

என்ன பிரச்சனை என்பது போல் அவன் முகத்த சுருக்க

“இது யாருக்கும் சொல்ல கூடாது தான் …ஆனா உங்ககிட்ட சொல்லலாம் என சொல்லி சிரித்தவள் மாலினி பற்றி எல்லா விபரங்களையும் சொன்னவள் தற்போது தங்களின் திட்டத்தயும் சொன்னாள்.

“நான் மாலினியிடம் தைரியமாக பேசிட்டு வந்திட்டேன் . ஆனால் அவன் உண்மையை கண்டுபிடித்து விட்டால் என்ன செய்வது? ஒரே குழப்பமா இருக்கு ….பேசாம ஜெசி சொன்னது போல போலிஸ்க்கு போய் இருக்கலாம் என்றவள் ஆனா மாலின் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப பிரச்சனை ஆகிடுமே….அவளும் பயப்பட்ரா என்றவள் நான் எடுத்த முடிவுல நம்பிக்கை இருக்கு ..இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கு…நம்மால யாரும் பாதிக்க படகூடாதில்ல என்றபடி அவன் முகத்தை பார்க்க

அந்த கண்களில் சிறு பயமும் , அதே நேரத்தில் மற்றவர்களின் துயரத்தை தனதாக என்னும் அவளின் வெள்ளை மனமும் தெரிய அவன் என்ன உணர்ந்தானோ அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சோடு வைத்து அழுத்தியவன் பின்னர் கண்களை மூடி எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்பது போல தலையை அசைத்தவன் அவளது சிரசில் தன் கைகளை வைத்து ஆசிர்வதிப்பது போல் செய்ய அந்த செயலில் உள்ளம் குளிர்ந்து போனாள் ஜமுனா. இவனுக்காக , இந்த பாசத்திற்காக நான் எதை வேண்டுமானாலும் தாங்கி கொள்ளலாம் என மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

அவனின் ஆறுதல் அவள் மனதிற்கு ஒரு புத்துணர்வை கொடுக்க அடுத்த என்ன செய்ய போகிறார்கள் என்பதையும் அவனிடம் சொல்லி கொண்டு இருந்தாள்.

மறுநாள் விடிந்ததும் முதலில் மாலினிக்கு அலைபேசியில் அழைத்தாள் ஜமுனா. அவளது அலைபேசி அணைக்கபட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்க அதே நிலைதான்.

“அடகடவுளே என்னாச்சு …போனை சுவிட்ச் ஆப் பண்ணிருக்கா …ஏதாவது பிரச்சனை ஆகிடுச்சா?” என நினைக்கும்போதே அவள் கைகள் சில்லிட

“அப்படி மட்டும் இருக்க கூடாது ஆண்டாவா” என்றபடி ஜெஸிக்கு அழைக்க அவளோ எடுத்த உடனே “ ஜம்மு ஏன் மாலினி போன் சுவிட்ச் ஆப்ல இருக்கு….உங்கிட்ட பேசினாளா ….எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா ” என கேட்க அவள் மனம் மேலும் அதிர

“எனக்கும் தெரியலை ஜெசி…என்கிட்ட பேசலை …நானும் காலையில இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன் …சுவிட்ச் ஆப்னு வருது என்றவள் …..வேற ஏதாவது பிரச்சனை ஆகிருக்குமோ …..அவன் கிட்ட மாட்டிகிட்டாளோ…ஐயோ எனக்கு பயமா இருக்கு…..எல்லாம் என்னால தான்………அவளுக்கு மட்டும் ஏதாவது ஒண்ணுனா என்னோட மனசாட்சியே என்னை கொன்னுடும் ……நான் அவளுக்கு நல்லது செய்யத்தானே நினச்சேன்……கடவுளே அவளுக்கு ஏதும் ஆகிருக்க கூடாது “ என அவள் படபடக்க

இதை கேட்டதும் ஜெசிக்கும் உள்ளூர பயம் இருந்தாலும் அவளை தேற்ற “இல்லை இல்லை ஜம்மு …அப்படி எல்லாம் ஏதும் இருக்காது …நீ கண்டத போட்டு குழப்பிக்காத…. உடனே கிளம்பி காலேஜ் வா …நானும் வந்திடறேன்” என்றவள் அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் கல்லூரியில் இருந்தனர்.

எப்போதும் தைரியமாக இருக்கும் ஜமுனாவோ குழப்பத்தில் கையை பிசைந்து கொண்டு தடுமாற்றத்துடன் நின்று கொண்டிருக்க ஜெசியோ விடாமல் மாலினியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்து கொண்டிருந்தாள்.

கல்லூரி வகுப்புகள் தொடக்கத்திற்கான மணி அடிக்கவும் அதுவரை மாலினியும் வரவில்லை.அலைபேசியும் எடுக்க படவில்லை.

கல்லூரியின் வாயிலையே பார்த்து கொண்டு நின்றிருந்த ஜமுனாவின் அருகில் சென்ற “ஜெசி நீ கவலைபடாத ஜமுனா ….அப்படி ஏதாவது பிரச்சனை வந்திருந்தா மாலினி நம்ம உடனே கூப்ட்டிருப்பா ….. அவ வீட்ல ஏதாவது விசேஷமா இருக்கலாம்…அதனால வராம போயிருக்கலாம்” என எதோ ஏதோ சமாதனம் சொன்னவள் இறுதியில் “ வீட்டுல கூப்பிட்டு கேட்டு பார்க்கலாமா” என்றாள்.

“வேண்டாம்… வேண்டாம்” என தடுத்த ஜமுனா “அது தேவையில்லாம அவளுக்கு பிரச்சனை ஆகிடும்…அவங்க வீட்ல என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியலை…..வேண்டாம் “ என்றாள்.

அதற்குள் வகுப்புகள் தொடங்க ஏமாற்றத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர் இருவரும். அன்றைய நாள் முழுவதும் மாலினி வராமல் போக….. இனி என்ன நடந்தாலும் பரவாயில்லை…நாளை அவள் வீட்டிற்கு செல்வது என்ற முடிவுடன் இருவரும் கல்லூரியில் இருந்து கிளம்பினர்.

மறுநாள் தோழிகள் இருவரும் மாலினியின் வீட்டிற்கு தயாராகி கொண்டு இருக்கும்போது அவர்களுக்கு வந்த குறுஞ்செய்தியில் குழப்பம் அடைந்தனர்.. உடனே அதில் சொல்லி இருந்தது போல் அந்த இடத்திற்கு தோழிகள் வர அங்கு மாலினியும் அவள் அருகில் நின்று கொண்டிருந்தவர்களையும் பார்த்து அதிர்ச்சியில் சிலையாயினர்.

“ஹே ஜெசி என்னப்பா நீயும் இப்படியே இருந்தா நான் என்ன பண்றது…..என்னை பார்த்தா பாவமா தெரியலையா?” என மாலினி முகத்தை சோகமாக வைத்துகொண்டு தோழிகள் இருவரின் பின்னே செல்ல

ஜெசியோ அவளை பார்த்து முறைத்தவள் முகத்தை திருப்பிக்கொண்டு செல்ல

“இதெல்லாம் சரியில்லை …நானும் ஒரு இரண்டு நாளா உங்க பின்னாடி சுத்திட்டு இருக்கேன்….நான் செஞ்சது தப்பு தான்…. ஒத்துக்கிறேன்…ஆனா என் நிலமையில இருந்து யோசிச்சு பாருங்க …….இதைதவிர எனக்கு வேற வழி தெரியலை அதான்” என அவள் சொல்லி முடிக்கும் முன்

“என்னடி பெருசா உன் நிலைமை……. அதை மட்டும் யோசிச்சதால தான் நாங்க இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தோம்…..ஆனா நீ….. ..ச்சீ போடி…..உன்னோட போன் சுவிட்ச் ஆப்ல இருந்து நீயும் வராம போய் அன்னைக்கு நாங்க பட்ட பாடு இருக்கே …கடவுளே இப்போ கூட அதை நினைக்கும்போது உடல் நடுங்குது …..ஆனா உன்கிட்ட இருந்து எந்த பதிலும் இல்லாம போக எங்க மனசு பட்டபாடு உனக்கு தெரியுமா? பெருசா நிலமையை பத்தி சொல்ல வந்திட்டா” என ஜெசி ஆத்திரத்தில் பட்டாசாய் வெடிக்க

மாலினி என்ன சொல்வது என தெரியாமல் திகைத்து நின்றாள். அவர்களின் கோபம் அவளுக்கும் புரிந்தது. உடனே ஜம்முவின் கைகளை பிடித்து கொண்டு “ஜம்மு நீயாவது என்னை புரிஞ்சுக்கோ…..இது எல்லாம் எதிர்பாராம நடந்திடுச்சு……நீங்க என் வாழ்க்கையில வந்ததுக்கு அப்புறம் தான் எனக்கு வாழவே பிடிச்சுது….நீங்க என்கிட்ட பேசலைனா என்னால அய்யோ அதை நினைச்சே பார்க்க முடியலை” என அழுகையும் தேம்பளுமாக அவள் சொல்ல

அவளின் நிலையில் மனம் இறங்கியவள் “உன்மேல எங்களுக்கு கோபம் இல்லை மாலினி…..கொஞ்சம் வருத்தம் தான்” என சொல்லவும்

“எனக்கு புரியுது ஜம்மு…..அந்த நேரத்தில என்னால நீங்க ஏதும் வம்புல மாட்டிக்க கூடாதுன்னு நினச்சேன். மேலும் உன்னை பத்தி அவன் பேசினது எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. அவன் ஒரு சாக்கடை….நான்தான் தெரியாம விழுந்திட்டேன்….இப்போ தெரிஞ்சும் உன்னை அவன்கிட்ட சிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன்” என அவள் விளக்க

உடனே “அதை நீ எங்ககிட்ட சொல்லிட்டு செஞ்சிருக்கலாமல” என ஜெசி வெடுக்கென கேட்க

“நான் சொல்லிடலாம்னு தான் நினச்சேன்…ஆனா அவங்க “ என நிறுத்தியவள் ஜம்முவின் முகம் பார்க்க அவள் விழிகள் என்னை நம்பு…..நான் சொல்வது எல்லாம் உண்மை என்பது போல் ஜம்முவிற்கு தெரிவிக்க

உடனே ஜம்முவோ “சரி விடு…எப்படியோ உன் வாழக்கையை கெடுத்த பிசாசு உன்னை விட்டு ஓடிடுச்சு….. இதானே எதிர்பார்த்தோம்…..அது நடந்திடுச்சு…..இனியாவது நீ மகிழ்ச்சியா இரு….பழசு எல்லாம் மறந்திடு …..இனி ஒவ்வொரு நாளும் சந்தோஷமா இருக்கனும்” என அவளிடம் சாதரணமாக பேச

“என்ன ஜம்மு இப்படி உடனே அவகிட்ட சரண்டர் ஆகிட்ட…இன்னும் கொஞ்சநேரம் அவளை கதற விடலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள இப்படி பொசுக்குனு சமாதானமாகிட்ட” என ஜெசி கண்களில் குறும்புடன் குரலில் ஏமாற்றத்துடன் கேட்க

“அடிபாவி…இதெல்லாம் நாடகமா என்றவள் ஹப்பா அப்போ மன்னிச்சுட்டிங்க …இப்போதான் எனக்கு சந்தோஷமா இருக்கு என்றவள் ….ஹே
பட்டாசு (ஆம் மாலினி சந்தோஷமாக இருக்கும்போது ஜெசியை இப்படிதான் அழைப்பாள்) அந்த பிரச்சனயில் இருந்து நான் வெளியே வந்தப்ப கூட இவ்ளோ சந்தோசம் இல்லை…இப்போ ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கேன்…..என் ப்ரிண்ட்ஸ் போல யாரு மச்சான் என அவள் உற்சாகமாக துள்ளி குதிக்க அந்த சந்தோசம் தோழிகள் இருவரையும் தோற்றி கொண்டது.

அப்போது உன் மேல வருத்தம் இன்னும் இருக்கு…ஆனா எல்லாம் நல்லபடியா முடிஞ்சதால அதை பத்தி இனி பேசவேண்டாம் என அந்த சந்தோஷத்திலும் மாலினிக்கு ஒரு குட்டு வைத்தாள் ஜெசி.

பேசி பேசி களைத்தவர்கள் ஜெசி பசிக்குது என சொல்ல அதற்காக கேண்டீன் சென்றவர்கள் அங்கு ஜீவாவையும் நந்துவையும் பார்த்ததும் ஜெசி, மாலினியின் முகங்கள் சந்தோஷத்தில் விரிய ஜம்முவின் முகத்திலோ எந்த உணர்வும் இல்லை.

அவர்களை பார்த்ததும் இருவரும் அருகில் வர ஜீவா மாலினியின் அருகில் சென்று அவள் காதில் “என்ன உன் தோழிகள் கோபம் எல்லாம் போயிடுச்சா” என ஜம்முவை கண்களால் அளந்தபடி மெதுவாக கேட்க..அவளோ உடனே “அதெல்லாம் சரியாகிடுச்சு….. அவங்களுக்கு என் மேல எந்த கோபமும் இல்லை ……எங்களை யாராலும் பிரிக்க முடியாது” என குதூகலிக்க

அதற்குள் ஜெஸியின் அருகில் போய் நின்ற நந்து “ ஹே குட்டி பிசாசு ஐ லவ் யூ டி” என காதிற்குள் சொல்ல

வெகுநாட்களுக்கு பிறகு அவனது இந்த சரசமான பேச்சும் நெருக்கமும் அவளுக்குள் ஒரு புதிய உணர்வை தோற்றுவிக்க சில நொடிகள் அதை அனுபவித்து நின்றவள் பின்னர் சுதாரித்து அவனுக்கு பழிப்பு காட்டியபடி அங்கிருந்து நகர்ந்தவள் எத்தனை நாள் என்னை சுத்தலில் விட்டு இருப்பான். இப்போது உண்மை தெரிந்த பின் பேச வருகிறான் …கொஞ்ச நாள் இவனும் என் நிலமையை அனுபவிக்கட்டும் என மனதிற்குள் கருவியவாறு சமோசா வாங்க அண்ணாச்சியை நோக்கி சென்றாள். .

நடுவில் நின்று கொண்டிருந்த ஜமுனா அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ஏதோ சிந்தனையில் அவள் அமர்ந்திருக்க தன்னை யாரோ பார்ப்பது போல தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தவளின் விழிகள் ஜீவாவின் மேல் நிற்க அவனும் விழி அசையாமல் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.


என் விழிகண்டு மொழி 

அறிபவன் நீ!

உனது அசைவில் தானே

எனது இயக்கம் !

உன்குரல் என் செவி 

தொடும் முன்னே 

உன் சுவாசம் சொல்லும் 

என் நேசத்தை !

மடிதேடும் கன்றாய்

உனை தேடும் என் இதயம் ! 

பூக்களின் வாசம் தொடர்ந்து வீசும்

 

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் – 15

ஹாய் ப்ரிண்ட்ஸ்

 

அனைவர்க்கும் இனிய காலை வணக்கம் ..

 

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்  அத்தியாயம் பதினைந்து( 15) இதோ 

Image result for அப்பா மகள்

 

அத்தியாயம் -15

 

 

ஜிங்கிலு மணி ஜிங்கிலு மணி  என்ற பாடல் அதிர அதிகாலை காற்றின் குளுமை முகத்தில் பட , கலைந்த முடிகளை கைகளில் ஒதுக்கியவாறு  வேகமாக கடந்து செல்லும் சாலயோர மரங்களை வேடிக்கை பார்த்தபடி சொந்த ஊர் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தாள் ஜமுனா.

 

“தாளபட்டி வந்திடுச்சு இறங்குங்க” என்ற நடத்துனர்  குரலில் வேகமாக தனது இருக்கையில் இருந்து எழுந்தவள் அருகில் இருந்த பைகளை எல்லாம் எடுத்து கொண்டு இறங்கினாள். பலமாதங்கள் கழித்து ஊருக்கு வருகிறாள். அந்த சந்தோசம் முகத்தில் தெரிய வேகமாக வீட்டை நோக்கி நடந்தாள்.

 

அதற்குள் “அக்கா கொஞ்சம் நில்லு … நாங்க வந்திட்டோம் “ என்றபடி   ஒரு சிறுவனும் சிறுமியும் ஓடி வர அவர்களை பார்த்ததும் முகத்தில் உற்சாகம் பொங்க  “ஹேய் ரவி , தீபி என்றவள்  நீங்க எதுக்குடா வந்தீங்க…நான் தான் வரேன் சொன்னேன்ல” என்பதற்குள் அருகில் வந்தவர்கள் “அக்கா  நீ வரேன் சொன்னதுல இருந்து நைட் நாங்க யாருமே தூங்கலை….இவன் விடிகாலை  மூணு மணியில இருந்து போலாம்னு சொல்லிட்டு இருந்தான். அம்மாதான் ஏழு மணிக்கு தான் பஸ் வரும் அப்போ போங்கனு சொல்லுச்சு” என்றவர்கள்

 

“அக்கா பை எல்லாம் கொடுங்க” என வாங்க

 

அதற்குள் “அக்கா உனக்கு களைப்பா இருந்தா என் சைக்கிள்ள பின்னாடி உட்கார்ந்த்துக்கோ…நான் உன்னை கூட்டிட்டு போறேன்”….என அவள் தம்பி  சொல்லவும்

 

“ஆஹா ஏண்டா வாலு சைக்கிள் உயரம்  கூட நீ இல்லை…. என்னை வச்சு நீ கூட்டிட்டு போறியா” என சிரித்தவள் “ஆமா இந்த சைக்கிள் யாருதுடா?” என கேட்டாள்.

 

நம்ம பக்கத்து வீட்டு முத்துவோடதுக்கா…நீ வரேன்னு சொன்னதும் நான் தான் கேட்டு வாங்கிட்டு வந்தேன்…. அவ்ளோ தூரத்தில இருந்து வர…. … இங்க வந்து வீட்டுக்கு கொஞ்ச தூரம் நடக்கணும்……. நீ பாவம்ல… அதான் உன்னை சைக்கிள் வச்சு கூட்டிட்டு போலாம்னு வாங்கிட்டு வந்தேன் என்றவன் நீ பயபடாதக்கா … இந்த குண்டுசட்டிய வச்சு ஓட்றேன் என தீபியை காட்டியவன் …உன்னை பத்திரமா கூட்டிட்டு போவேன்கா” என அவன் பெரிய மனிதன் போல பேசவும்

 

“ஆமாக்கா…இவன் நல்லா சைக்கிள் ஒட்டுவான்கா…நீ அவன் கூட போ …நான் நடந்து வந்திடறேன்” என அவளின் சின்ன தங்கை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தீபிகா தம்பியின் பெருமையை சொல்லவும் அவர்களின் பேச்சிலும் பாசத்திலும் கரைந்து நின்றாள் ஜமுனா.

 

தம்பி தங்கையை இரு கைகளாலும் அணைத்து கொண்டவள் இதற்காக அந்த பெரியம்மா குடும்பத்திடம் எவ்ளோ வேண்டுமானாலும் அவமானபடலாம் என நினைத்தவள்   “ ம்ம்ம் அதெல்லாம் வேண்டாம் நம்ம மூன்று பேரும் நடந்து போகலாம். சைக்கிள்ள இந்த பைகள்  எல்லாம் மாட்டி விட்டுடலாம்” என சொல்லவும்

“சரிக்கா…” என தலை ஆட்டியவர்கள் சைக்கிளை தள்ளியபடி  மூவரும் பேசிகொண்டே நடக்க  “அப்புறம் தீபி ஒழுங்கா படிக்கிறியா, ஹாஸ்டல் சாப்பாடு நல்லா இருக்கா? நீ என்னடா பண்ற…வீட்ல  இன்னும் அம்மா கூட சண்டை போடறியா …. ஒழுங்கா படிக்கணும்”….என குடும்ப விசாரணையின் முடிவில் வீடு வந்து சேர்ந்தனர்.

 

வீட்டிற்குள் நுழைந்ததும் “அக்காஆஆஆஆ” என்றபடி தன்னிடம் வந்து ஒட்டி கொண்ட தனது முதல் தங்கை காயத்ரியை  பாசத்துடன் அணைத்து கொண்ட ஜம்மு “எப்படி இருக்க காயத்ரி ….சாரிடா உன்னோட சடங்குக்கு என்னால வரமுடியலை”  என்றவள் அதற்குள் அவள் அன்னை உள்ளே இருந்து வரவும் “அம்மா” என்றபடி அவரிடம் சென்றாள் ஜமுனா.

 

மகளை பார்த்ததும் உணர்ச்சி பெருக்கில் கண்ணீர் மட்டும் வந்து கொண்டிருக்க கண்களாலே அவளை தன் மனதில் நிரப்பி கொண்டிருந்தார் அவளது அன்னை .

 

“என்னம்மா நீங்க…எல்லாரும் பொண்ணு வந்தா பாசத்துல கொஞ்சுவாங்க …நீங்க என்னடானா என்னை பார்த்த உடனே அழ ஆரம்பிச்சிட்றிங்க” என சலித்து கொண்டவள்

 

பேச்சில் சலிப்பு போல் காட்டினாலும் அன்போடு  தனது அன்னையை  தோளோடு அணைத்து தன் தோலில் சாய்த்து கொண்டாள்.  தம்பி தங்கைகள் மூவரும் அவளை சுற்றி நின்று இருந்தனர்.இது ஜமுனா வீட்டிற்கு வரும்போது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான்.

 

சில நிமிடங்கள் அந்த நிலை நீடித்து இருக்க

 

“அம்மா எனக்கு ரொம்ப பசிக்குதும்மா” என அன்னையின்  காதிற்குள் மெதுவாக சொல்லவும்

 

“இதோ இட்லி எல்லாம் ரெடி இருக்கு…..சட்னி மட்டும் அரைச்சிட்டு வந்திடறேன்” என வேகமாக சமையலறையை நோக்கி ஓடினார் அவள் அன்னை தேவகி. தன்னை பற்றி எதுவும் கேட்காமல் நலம் விசாரிக்காமல் பசி என்ற வார்த்தையை கேட்டதும் உடனே  செல்லும் அன்னையை விழிஎடுக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் ஜம்மு.

 

எப்போதும் அவர் அப்படிதான்…..அதிகம் பேசமாட்டார். அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை இன்று வரை அவளால் அறியமுடியவில்லை. அதற்கு ஒரு காரணம் அவளின் தந்தையும் கூட…. மனைவியை குழந்தையாக பாவித்து மகளை தாயாக வழி நடத்தியவர். நான்கு குழந்தைகள் பிறந்த போதும் அவரின் முதல் குழந்தை தேவகி தான். இந்த உலகத்தில் எப்படி வாழ வேண்டும் என மகளுக்கு கற்று கொடுத்தவர் தனது மனைவிக்கு தன்னையே  உலகமாக்கி கொண்டார்.

 

அதற்குள் “அக்கா இந்த ட்ரெஸ் நல்லா இருக்கா…சடங்குக்கு எடுத்தது என்றவள் நான் ஹாஸ்டல்ல இருந்து வரதுக்கு முன்னாடியே அம்மா எடுத்து வச்சுட்டாங்க”.. என்றாள்.

 

“ஹே ரொம்ப நல்லா இருக்கு என்றவள் எந்த கடையில எடுத்தது?….எவளவ்வு?” என கேட்க

 

“தெரியலை அக்கா…..அம்மாகிட்ட கேட்டேன். தங்கராசு  அங்கிள் தான் வாங்கி கொடுத்தாராம்” என அவள் சொல்லி முடிக்கும் முன்

 

நெருப்பை சுட்டார் போன்று அந்த துணியை கீழே போடவும்

 

“ஏன்க்கா நல்லா இல்லையா” என காயத்ரி கேட்கவும்

 

“ம்ம்ம் இல்லை இல்லை” என அந்த நொடி தோன்றிய வெறுப்பை தன் முகத்தில் இருந்து மறைத்தவள்  சிரித்தபடி “இந்த கலர் உன்கிட்ட ஏற்கனவே இருக்குதான….அதான் போட்டேன்…உனக்கு நான் டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன் பாருங்க” என உடனே பேச்சை மாற்றினாள்.

 

தங்கைக்கும், அன்னைக்கும் வாங்கி வந்த துணிமணிகள் மற்றும் சில பொருட்களை எடுத்து பரப்பினாள். வருடத்திற்கு  ஒரு முறை மட்டுமே அவள் வீட்டிற்கு வருவதால் மொத்தமாக வாங்கி வந்திடுவாள் .

 

அப்போது “அக்கா நீ போன வருஷம் எடுத்து கொடுத்த பேன்ட் துணி எனக்கு பத்தவே இல்லை….இனி வருஷத்துக்கு இரண்டு முறை துணி எடுத்து  கொடுக்கா”  என அவனது தம்பி முறையிட

 

பதின் வயதில் இருக்கும் ஆண்மகன். வளர்ச்சி அதிகமாக இருக்கும்.. அவன் கேட்பதும் நியாயம் தான். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை தானே அவளுக்கு பணம் கிடைக்கும்…. என மனதிற்குள் வருந்தியவாறு  அவள் அமைதியாக இருக்க

 

உடனே தீபி “அக்கா நீ ஒன்னும் வருத்தபடாத… ஏன்டா இப்படி பனைமரம் மாதிரி வளர்ந்தா எப்படி துணி சரியா இருக்கும் ” என அக்காவின் முக வாட்டத்தை கண்டு அவளுக்கு ஆதரவாக பேசி தம்பியை கண்டிக்க

 

அவனோ “போடி குண்டச்சி …நீயும் தான் ஹாஸ்டல்ல நல்லா கொட்டிகிட்டு இப்படி உப்பி போய் வந்திருக்க” என தனது இரு கன்னங்களையும் உப்பி  காட்டியபடி அவன் பதிலுக்கு கேலி பேச

 

“சரி சரி சண்டைபோடாதீங்க” என அவர்களை சமாதானம் செய்து  அவர்களின் பொருட்களை அவர்களுக்கு பிரித்து கொடுத்தாள் காயத்ரி. அவளின் அந்த பொறுப்புணர்வை கண்டு ஜம்முவிற்கு கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது.

 

முன்பு எல்லாம்  காயத்ரி இவர்களுடன் சேர்ந்து கொண்டு சண்டை போட்டு கொண்டிருப்பாள். ஆனால் இந்த முறை அவளிடம் தெரிந்த அந்த மாற்றம் ஜம்முவிற்கு கொஞ்சம் நிம்மதியும் சந்தோஷத்தையும் கொடுத்தது.

 

அவர்கள் பேசிகொண்டிருக்க ஜம்மு எழுந்து குளிப்பதற்கு சென்றாள். அவள் வருவதற்குள் சூடான இட்லியும் மணக்கும் கார சட்டினியின் வாசமும்  அவளது பசியை மேலும் தூண்ட வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்து காலை உணவை உண்டனர்.

 

பின்னர் வீட்டு விஷியங்கள் , உறவினர் விசாரணை எல்லாம்  முடிந்த பின் தம்பி தங்கைகள்   வெளியே சென்று விட அன்னையின் அருகில் சென்று அமர்ந்தாள் ஜமுனா.

 

காய்கறி அரிந்து கொண்டு இருந்தவர் அவள் அருகில் வந்ததும் வாஞ்சையாக  அவளின் தலையை வருடி கொடுத்தவர் “என்னால நீ ரொம்ப கஷ்ட்படற ஜானு” ஆம் அன்னையும் தந்தையும் அவளை ஜானு என்றுதான் அழைப்பார்கள் . என சொல்லும்போதே அவர் குரல் உடைய

 

“அச்சோ அம்மா அப்படி எல்லாம் ஏதும் இல்லை. நீங்களாவது இந்த கிராமத்தில எந்த வசதியும் இல்லாம சிரமபட்டுகிட்டு இருக்கீங்க….எனக்கு என்னமா…எவ்ளோ பெரிய வீடு….சமையலுக்கு ஆளு….அன்பா பார்த்துக்கிற பெரியம்மா” என அவள் சொல்லும்போதே குரல் உள்ளே செல்ல

 

“ஆமாம் ஜானு அந்த அம்மா ரொம்ப நல்லவங்க…..உங்க பொண்ண என் பொண்ணு மாதிரி பார்த்துகிறேன்… அங்க அவளுக்கு எந்த கஷ்டமும் இருக்காது…..நீங்க கவலைபடாதீங்கனு எவ்ளோ  தன்மையா, அன்பா  என்கிட்டே பேசினாங்க தெரியுமா? அதும் இப்போ உன்னை காலேஜ்ல வேற  சேர்த்து விட்ருக்காங்க என்றவர் நீயாவது சந்தோஷமா இருந்தா போதும் ஜானு….எப்படியோ உங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரி நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும்….அப்புறம் நம்ம குடும்ப கஷ்டம் எல்லாம் தீரபோகுது” என அவர் பேசிகொண்டே செல்ல

 

அன்பிற்கு பின் இருக்கும் சுயநலத்தை அவர் உணரவில்லை….காரணம் இல்லாமல் யாரும் எந்த  காரியமும் செய்வதில்லை  என்பதை அறியாத அவரின்  அறியாமையை நினைத்து மனதிற்குள் வருந்தினாலும் வெளியில் சிரித்தபடி ஆமாம் என தலையாட்டி கொண்டிருந்தாள்.

 

மதிய உணவிற்கு பிறகு “அம்மா கொஞ்ச நேரம் தூங்கறேன்” என அவள் சொல்லவும் “இந்தாக்கா  அப்பாவின் போர்வை ” என  தீபி எடுத்து வந்து கொடுக்கவும் அதை விரித்து போட்டு அதன் மீது  படுத்தாள். ஆம் அவள் வீட்டிற்கு வந்தாள் அவள் அப்பாவின் போர்வை தலையணை தான் பயன்படுத்துவாள். அதில் உறங்கும்போது அவள் தந்தை  அவள் உடனே இருப்பது போல் உணர்வாள்.

 

தந்தையின் வாசம் அந்த பெட்சிட்டில் தெரிய அவளின் நினைவுகள் தன் தந்தையோடு களித்த அந்த அழகிய நாட்களை   நோக்கி சென்றன.

 

“கண்ணுங்களா அப்பா வந்திட்டேன்…..” என்ற குரலில் முதலில் வீட்டிற்குள் இருந்து ஓடி வருவது ஜமுனா தான். அதன் பின்னரே காயத்ரி , தீபிகா , ரவி அனைவரும் வருவர். வேகமாக ஓடி வந்தவள் தந்தையின் வயிற்றை இருக்க பிடித்து அவள் உயரத்திற்கு அதை தான் பிடிக்க முடியும் இருக்க அணைக்க அவரோ “ஜானும்மாஆஆஆ” என்றபடி  குனிந்து தன் முகத்தை காட்ட அதில் தனது பாசத்தை எல்லாம் சேர்த்து கன்னத்தில் அழுத்தமான  முத்தம் ஒன்றை பரிசளிப்பாள் அவரின் செல்ல மகள்…இல்லை அவர் சொல்வது போல் அவரின் தாய். ஆம் ஜமுனாவின் தந்தை கண்ணதாசன் ஜமுனா பிறந்து முதன் முதலில் கையில் ஏந்தியவர் “தாய் தந்தை இல்லாத எனக்கு அன்னையும் அப்பனுமாக எனக்கு கடவுள் கொடுத்த வரம்  என் மகள்” என்றார்…

 

அதற்கு பின்னர் மூன்று குழந்தைகள் பிறந்த போதும் ஜமுனா மேல் அவர் கொண்ட பாசம் துளி கூட குறையவில்லை. வீட்டின் எந்த ஒரு செயலும் ஜமுனாவின் ஒப்புதல் இல்லாமல் நடக்காது.  அதே போல் தன் கணவர் மட்டுமே தனக்கான உலகம் என நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றொரு ஜீவன் தேவகி.

 

ஒரு மனிதனின் அழகு என்பது அவரின் எண்ணங்களை பொருத்தது …. அது வண்ணங்களை கொண்டு நிர்ணயிப்பது  மிகவும் தவறு. ஒரு சிலர் மட்டும் எண்ணம், நிறம் இரண்டிலும் நிறைந்து  இருப்பர், தேவகியும் அது போன்றவர்தான்.

 

கண்ணதாசன் சிறுவயதிலே தாய் தந்தை இழந்து தாய்மாமன் அரவணைப்பில் வாழ்ந்தவர். வெகுநாட்கள் குழந்தை இல்லாமல் வரத்தில் பிறந்தவர் தான் தேவகி. பெரிய அளவு வசதி இல்லை என்றாலும் சொந்த வீடு கொஞ்சம் தோட்டம் என் வாழ்வின் அடிப்படை வசதிகளோடு வாழ்ந்து வந்தனர்.தேவகி ஒரே மகளாக போனதால்  பொத்தி பொத்தி வளர்த்தனர். பள்ளிக்கு கூட கண்ணதாசன் தான் அழைத்து செல்வார்.அவள் தனியாக எங்கும் சென்றதில்லை.

 

கண்ணதாசன் அங்கு இருக்கும் ஒரு மில்லில் காண்ட்ராக்ட் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அதை தவிர மாமாவிற்கு தோட்டம் மற்றும் வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருந்தார். ஏனோ அவருக்கும் திருமணம் தள்ளி போய்கொண்டே இருந்தது.

 

இந்த நிலையில் அவரின் அத்தை திடீரென மாரடைப்பில் இறந்து போக நிலைகுலைந்து போனது அந்த குடும்பம். தேவகிக்கு வீட்டோடு மாப்பிளை தான் வேணும் என  அவளது தந்தை சொல்லி விட வந்த வரங்கள் எல்லாம் தட்டி போயின.

 

பின்னர் அவரின்  உடல்நிலையும்  சரியில்லாமல் போக அதற்கான செலவில் வீடு தோட்டம் எல்லாம் கடனாகி போனது. வேலைக்கும் சென்று கொண்டு  தனது மாமாவையும் நன்றாக பார்த்து கொண்டார் கண்ணதாசன். தனக்கு ஒரே ஆதரவாக இருந்த  தந்தையும் இப்படி ஆனதால் தடுமாறிபோனாள் தேவகி. என்னதான் அழகிருந்தாலும் வசதி இல்லாத காரணத்தால் தேவகி திருமண பேச்சு தடைபட்டு கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தனது மகளையும் தன்னையும் நன்றாக கவனித்து கொண்ட கண்ணதாசனுக்கு தன் மகளை மணமுடித்து தர விரும்பினார் அவர். ஆனால் கண்ணதாசன் மறுத்து விட்டார். தான் தேவகிக்கு எந்த விதத்திலும் பொருத்தம் இல்லை என்பது அவர் எண்ணம்.அப்போது “கண்ணா நான் என் பெண்ணிற்கு  மாப்பிள்ளை பார்க்கவில்லை. எனக்கு பின் அவளை பார்த்து கொள்ள ஒரு தகப்பனை பார்க்கிறேன். அதற்கு நீ தான் சரியான தேர்வு” என சொல்ல தேவகி,கண்ணதாசன் திருமணம் நடந்து முடிந்தது.

 

தனது மாமவின் விருப்பபடி கண்ணதாசனும் தேவகியை கண்ணுக்குள் வைத்து பார்த்து கொண்டார். மீண்டும் கூண்டிற்குள் அடைப்பட்ட தங்க கிளியானார் தேவகி. அவருக்கும் அது பிடித்து போனது.

 

எனவே தனது ஆசைகள், கொள்கைகள் என அனைத்திற்குமான வடிகளாய் பிறந்தவள் தான் ஜமுனா என கண்ணதாசன்  நினைத்தார்.சிறுவயதில் இருந்தே அவளுக்கு நிறைய கதைகள் மற்றும் உலக வரலாறுகள் ஆகியவற்றை சொல்லுவார்.  கண்ணதாசன் அதிகம் படித்து இல்லை என்றாலும் அனுபவ அறிவு அதிகம். கற்பனைகளை விட எதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளும் விதங்களை அவளுக்கு கற்று கொடுத்தவர் அவளின் தந்தையே.

 

அவளின் முதல் ஆசான் அவளது தந்தை தான். அதற்கு ஏற்றாற்போல் ஜமுனாவிற்கு அறிவும் திறமையும்  அதிகமாகவே இருந்தது. படிப்பின் மீது கண்ணதாசனுக்கு  ஒரு தீராத தாகம் உண்டு…. தனது மகள் படித்து பெரிய ஆளாக வர வேண்டும்  என்பதால் தனது தகுதிக்கு மீறி பெரிய பள்ளியில்  சேர்த்தார். பணத்திற்காக பல வேலைகளை செய்தார். வேலைக்காக எங்கு சென்றாலும் வாரத்தின் இரண்டு நாட்கள் தன் குடும்பத்திற்கு மட்டுமே. ஜமுனாவை தாயாக  நேசித்தவர் தேவகியை தன் சேய் போல் பார்த்துகொண்டார். அவரின் தேவைகளை கேட்பதற்கு முன் நிறைவேற்றினார். சமையல் அறை மட்டுமே தேவகிக்கு தெரிந்த உலகம்.. இரண்டு குழந்தைகள் போதும் என்றபோது  தேவகிதான் நமக்குதான் அதிக சொந்தங்கள் இல்லை. குழந்தைகளாவது நிறைய இருக்கட்டுமே என சொல்ல அதன் பின்னர்தான் தீபியும் ,ரவியும் பிறந்தனர். தனது கணவருக்கு தனது அன்பினையும், நேசத்தையும் காதலால் காட்டினார் தேவகி. அவருக்கு அதை தவிர வேறு ஒன்றும் தெரியாது.

 

ஜமுனாவின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் தானே வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி அடைந்தார் கண்ணதாசன் . பாட்டு ,நடனம் ,விளையாட்டு என அனைத்திலும் அவள் பங்குபெற ஊக்குவித்தார். அதே நேரத்தில் அவளின் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்தார்.  தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் அவளை அழைத்து சென்றார். பதின் வயதில் இருக்கும் மகளுக்கு இந்த உலகத்தையே மொத்தமாக காட்டிவிட ஆசைபாட்டார். . மொத்தத்தில்  தன்னையே தனது மகளாக பார்த்தார் அவர்.

 

இப்படி அன்பு, பாசம், காதல் என கலந்த கலவையாக சந்தோசம் ததும்பும் அந்த குடும்பத்தில் யார் கண் பட்டதோ இடிபோல் அந்த செய்தி வந்தது. அது

“இல்லை இல்லை அப்படி ஏதும் இல்லை….” என வேகமாக கத்தியபடி அவள் எழுந்தரிக்க

 

“என்னாச்சுக்கா”…….. என தம்பி தங்கைகள் ஓடிவர ,

 

“ஜானு என்னாச்சு தங்கம்…” என்றபடி தேவகியும் வர

 

பயத்தில் அவள்  முகம் வேர்த்திருக்க சற்றுநேரம் ஒன்றும்  புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தவள் நினைவுகளின் சூழல் விலகாமல் இருக்க தன் அருகில் அமர்ந்திருக்கும் அன்னையை இறுக்க  கட்டி பிடித்தபடி “அம்மா அப்பா வேணும்மா …அப்பா வேணும்…எனக்கு அப்பா …….”  என அவள் அழவும் சுற்றி இருந்த அனைவரும் திகைத்து போய் நின்றனர்.

 

சிறிது நேரத்தில் அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருக எல்லாரும் அழுக அப்போது “அக்கா என்னக்கா எப்பவும் நீ தான் எங்களுக்கு ஆறுதல் சொல்லுவ…இப்போ நீயே இப்படி அழுதா எப்படி ?

‘ என காயத்ரி கேட்கவும்

 

 

அதற்குள் தீபியும், ரவியும் ஜம்முவின் மடியில் படுத்து கொண்டு “அப்பா …அப்பா “ தேம்பவும்

 

தேவகியோ கண்களில் கண்ணீர் வழிந்தோட இமை மூடாமல் தங்கள் பிள்ளைகளையே வெறித்து  பார்த்திருக்க , அந்த கண்ணில் தெரிந்த வேதனை ஜம்முவை சுயநினைவிற்கு கொண்டு வந்தது.

 

உடனே தன்னை சரி செய்து கொண்டு  “சரி சரி கொஞ்சம் அப்பா நியாபகம் வந்திடுச்சு அவ்ளோதான்” என்றவள்   “டேய் முதல்ல எழுந்தரிங்க” என தங்கை தம்பியை எழுப்பியவள் அன்னையிடம் திரும்பி “அம்மா எனக்கு சமோசா சாப்பிடனும்போல இருக்கு செஞ்சு தரியா” என அவள் கெஞ்சுவது போல் கேட்க

 

“இதோ உடனே செஞ்சு தரேன்மா என சட்டென அந்த சூழலில்  இருந்து விடுபட்டு வேகமாக சமையல் அறைக்கு சென்றார் அவர். எதை சொன்னால் அம்மா மாறுவார் என்பது ஜமுனாவிற்கு தெரியும்., சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு பிடித்ததை செய்து தருவதில் தேவகிக்கு ஆர்வம் அதிகம்.அது எந்த நேரம், இடமாக இருந்தாலும் அம்மா இது எனக்கு சாப்பிடனும்போல இருக்கு என பிள்ளைகள் கேட்டு விட்டால் உடனே செய்து தந்து விடுவார். இப்போது அதை தான் ஜம்மு செய்தாள்.

 

தம்பி தங்கை விளையாட  சென்று விட காயத்ரி தனது  அக்காவின் அருகில் வந்து  அமர்ந்தவள் மெதுவாக அவள் கையை பிடித்து தன் மடியில் வைத்தபடி

 

“அக்கா அங்க  இருக்கிறதுக்கு  ரொம்ப கஷ்டமா இருக்கா… பேசாம நீ இங்கே வந்திடுக்கா….எங்களுக்கும் ஹாஸ்டல் அந்த பெரிய ஸ்கூல் எல்லாம் வேண்டாம் ….இங்க இருக்க பள்ளியில படிச்சுக்கிறோம் …. நம்ம எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்….. எனக்கும் அந்த ஹாஸ்டல் பிடிக்கலை…..அதான் தங்கராசு அங்கிள் உதவி….” என அவள் சொல்லி முடிக்கும் முன்

 

அவளை சுட்டெரிக்கும் பார்வை பார்க்க அந்த தணலில் காயத்ரி மிரண்டு “இல்லைக்கா நான் வந்து” என அவள் தடுமாற

 

சில நொடிகள் கண்களை மூடி தன்னை அமைதி படுத்தி கொண்டவள் பின்னர் தங்கையின் தலையை வாஞ்சையாக தடவி கொடுத்தவள்  “இங்க பாரு காயத்ரி நீ என்னை பத்தி கவலை  படவேண்டாம். நீ இப்போ பிளஸ்ஒன் படிக்கிற…படிப்புல மட்டுமே உன்னோட கவனம் இருக்கணும்…..வேற எதையும் போட்டு குழப்பிக்காத…..என் படிப்பு முடிந்து நல்ல வேலையில் சேர வரைக்கும் நீங்க ஹஸ்டல் தான்…..இனி இதை பத்தி பேசாத” என பொறுமையாக சொன்னாலும் பேச்சில் இருந்த கடினம் அவளின் உறுதியை தெளிவுபடுத்தியது.

 

இதுவரை அக்காவின் சொல் கேட்டே வளர்ந்ததால் அவளை மீறி எதுவும் பேசமுடியாமல் எழுந்து  சென்றாள் காயத்ரி.

 

அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தவள்  நான்கு வருடங்களுக்கு பிறகு தனது சுமையை பகிர்ந்து கொள்ள  தங்கை வந்து விட்டாள் பெருமை ஒரு பக்கம் இருந்தாலும் இனியும் மனதிற்கு பிடிக்காத இப்படி ஒரு  வாழ்க்கையில்  அவர்களை ரொம்ப  நாள் வாழ விடகூடாது என்ற முடிவும் அவள் மனதில் எழுந்தது.

 

இங்கு வீட்டிற்க்கு வந்து இரண்டு நாள் ஆன பின்பும் ஏனோ அவன் மனம் நிலையில்லாமல் தவித்து கொண்டிருந்தது.

 

“ஜீவா கண்ணு தட்டுல சோறு வச்சு ஆறியே போச்சு….இன்னும் உள்ள என்ன பண்றபா …நானும் பார்த்திட்டு இருக்கேன்… ஊர்ல இருந்து வந்ததில இருந்து உன் முகமே சரியில்லை……..மந்திரிச்சு விட்டவன் போலே  சுத்திகிட்டு இருக்க….. படுத்துகிட்டு அந்த மோட்டு வலையத்தியே பார்த்துகிட்டு இருக்க….என்னடா ஆச்சு உனக்கு” என அவன் பாட்டி கத்தி கொண்டிருக்க

 

“என்ன ஆகிருக்கும்….இதெல்லாம் பிஞ்சிலே பழுத்தது…..ஏதாவது தப்பு பண்ணிருப்பான்…அதான் பம்மிகிட்டு படுத்திருக்கான்” என தீயாய் வார்த்தைகள் அவன் தந்தையிடம் இருந்து வந்தது.

 

ஆம் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்து இருந்தான் ஜீவா. அவனது தந்தையும் உடன் வந்திருந்தார். அப்பாவும் மகனும் அதிகம் பேசிகொள்வதில்லை என்றாலும் ஒரு தந்தையாக அவனது படிப்பு செலவுகள் அனைத்தயும்  அவர்தான் செய்து வந்தார். இருப்பிடம் மட்டும் பாட்டி வீடு. விடுமுறையின் போது அவரும் தனது மாமியார் வீட்டில் வந்து மகனுடன் இரண்டு நாள் இருந்து செல்வார்.

 

தந்தையின் பேச்சு காதில் விழுந்த போதிலும் வேறு நாட்களாக இருந்தால் அவரின் பேச்சிற்கு அங்கு பெரிய சண்டையே நடந்திருக்கும். ஆனால் இன்றோ அவனின் மனம் ஒரு பெரிய ஆராய்ச்சியில் அல்லவா மூழ்கி இருக்கிறது..

 

இப்போது எல்லாம் தனிமை கிடைக்கும்போது அவளின் நினைவு வந்து கொண்டே இருக்கிறது…அவளை பார்க்கும்போது வரும் வெறுப்பு அவளை பற்றி  நினைக்கும் போது மட்டும் சுகமாய்  இருக்கிறதே…..ஏன் அப்படி?

 

….நான் பார்த்தவரையில் அவள் ஒன்றும் நல்லவள் இல்லையே …… .அறிமுகம் இல்லாத என் பெயரை பயன்படுத்தி கல்லூரியில் தன் வேலையை சாதித்து கொண்டாள். எல்லா  ஆண் பிள்ளைகளிடமும் சகஜமாக பழகியவள் போல் பேசுகிறாள்.  என்னிடம் அடிகடி சண்டைக்கு நிற்கிறாள்….ச்சீ என்ன பொண்ணு இவள் ….. என முகம் சுளித்தவன்

 

ஆனால் மாலினியிடம் பேசிய பிறகு  நட்புக்காக எதையும் செய்ய தயாராக இருப்பவள் போல் தெரிகிறது. அவளின் செயல்கள் அனைத்தும் மற்றவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுபவள் போல் தெரிகிறது. அப்படியானால் இவள் எந்த மாதிரி பொண்ணு ? எந்த ரகத்தில் இவளை சேர்ப்பது என அவன் மனம் முழுவதும் ஜமுனாவையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது.

 

பெண்ணின் மனம் ஒரு ஆழ்கடல் …அதை அறிந்து கொள்ள நினைப்பது அறீவீனம் என்பதை இவன் எப்போது புரிந்து கொள்வான்.

 

 

புத்தனாக இருப்பவனையும்

பித்தனாக மாற்றுவது காதல்!

சரி தவறு என சீர்தூக்கி பார்க்க

அது  கடை சரக்கு அல்லவே!

அறியாமல் நுழைந்து அறிவை

மழுங்கிடசெய்து நித்தமும்

 நினைவுகளோடு சித்தம்

கலங்கி சுற்ற செய்வது     

காதலின் வேதம்  அன்றோ!

 

பூக்களின் வாசம் தொடர்ந்து வீசும் ……