ஒளிபடைத்த கண்ணினாய் வா வா !–5

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா !

 

தொடர்புடைய படம்

அத்தியாயம் 5

அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்த மஞ்சு “அகில் …வா…வா ….ஏன்டா அர்ஜுன் கூப்பிட்டதுக்கு வரலைனு சொன்னியாமா? “ என கேட்டு கொண்டே டைனிங் டேபிளில் அவனக்கும் உணவு எடுத்து வைக்க சென்றார்…..

“அப்படி எல்லாம் இல்ல அத்தை …கொஞ்சம் வேலை அதான் வரமுடியலை என இழுத்தவன்…..அர்ஜுன்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கணும்…ரொம்ப அவசரம் …அதான் நானே வந்தேன்…. இந்த பைல் உடனே அனுப்பி ஆகனும்.”என்றபடியே உள்ளே வந்தான்.

அதற்குள் பேச்சு சத்தம் கேட்டு அர்ஜுன் சாப்பாட்டில் இருந்து எழுந்து வந்து …”என்னாச்சு அகில்…போன் பண்ணிருந்த நானே வந்து இருப்பேன்ல….. நீ எதுக்குடா சிரமபட்ற என்றவன் எதுல சைன் பண்ணனும்” எனக் கேட்டான்..

 

“பரவாயில்லைடா …. எனக்கும் வேலை இல்லை”  என்றவன்

“நேற்று  ராம் இண்டஸ்ட்ரிக்கு ஒரு கொட்டேஷன் தயார் பண்ணணும்ல…இன்னைக்கு தான் கடைசி தேதி …அதான் உடனே அனுபிடலாம்னு வந்தேன் ” என வாய் சொல்லி கொண்டிருக்க,கண்கள் வீடு முழுவதும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அவன் கண்கள் பல இடங்களில் அலைபாய ….ஆனால் இரண்டு கண்கள் அவனை மட்டுமே  பார்த்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவன் “சரி அத்தை நான் கிளம்புகிறேன்” என கிளம்ப……

“என்ன அகில் சாப்பிடாம போற….வா…வா வந்து சாப்பிடு” ‘ என மஞ்சு அழைக்கவும்

“இல்ல அத்தை நான் சாப்பிட்டேன்….நேரமாகிடுச்சு கிளம்பறேன் இன்னொரு நாள் வந்து சாப்பிட்டுகிறேன்” என்றான்.

“அகில் பொறு நம்ம அபி வந்திருக்கா…..அவளை கூட பார்க்காம போற ….இரு அவளை கூப்பிடறேன்”….என சொல்லி விட்டு

“அபி இங்க வா…அகில் வந்திருக்கன் பாரு”…என தன் மகளை அழைத்தார் மஞ்சு …..

“அம்மா நான் குளிச்சிட்டு வந்தறேன்” என பதில் மட்டும் வெளியே  வர

ஒரு நிமிடம் முகம் சுருங்கியவன் பின்னர் .ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

அங்கு ஒரு மனமோ….”ஆமா பெரிய இவன்…என்ன பார்க்க வருவான்னு எவ்ளோ ஆசையா காத்துகிட்டு இருந்தேன்.வேலை இருக்குனு சொல்லி என்ன ஏமாத்திட்டான்.இப்போ துரை வந்த உடனே நான் போய் தரிசனம் கொடுக்கணுமா ….கிடக்கட்டும்” என புலம்பி தள்ள …

மஞ்சு அகிலிடம்…”நீ சாப்பிடதான் இல்ல…இந்தப்பா அபிக்கு பிடிக்குனு பால்கோவா செஞ்சேன்…இதாவது சாப்பிடு” என கொடுக்க …மறுக்க முடியாமல் அதை வங்கி கொள்ள

அதற்குள் “அகில் எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு…நான் ஈவ்னிங் ஆபிஸ் வரேண்டா” என கூறிவிட்டு அர்ஜுன் செல்ல ….பால்கோவா கப்போடு சோபாவில் அமர்ந்தான் அகில் .

வெகு நேரம் ஆகியும் அபி வெளியே வராததால் கோபமடைந்த அகில் ….”அத்தை எனக்கு ரொம்ப நேரமாகிடுச்சு …நான் கிளம்பறேன்” என கூறிவிட்டு அவள் பதிலை எதிர்பார்க்காமல் விருட்டென்று வெளியே வந்தான்.

வெளியே வந்ததும் ஒரு நிமிடம் கண்களை மூடி தன்னை நிலை படுத்தி கொண்டவன் …தன் வாகனம் இருக்கும் இடத்தை நோக்கி நகர

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ…

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு…

தேடும் கண் பார்வை தவிக்க …துடிக்க…

என்ற பாடல் கேட்கவும்  ….பாட்டிற்கு உரியவர் யார் என தெரிந்தும் ஆத்திரம்  கண்ணை மறைக்க திரும்பி பார்க்காமலே சென்றுவிட்டான்.

பாடிய உருவமோ “இதுக்கே கோப பட்ட எப்படி மாமு….இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லயே “என வாய்க்குள் முனகிய படியே வீட்டுக்குள் சென்றது.

தனது அலுவலக அறைக்கு வந்த பின்பும் அகிலிற்கு கோபம் குறையவில்லை .”என்ன ஒரு திமிர்…இன்னும் அவளுக்கு அது குறையல…அப்படியே இருக்கு” என தனக்குள் குமுறியவன் …..

அங்கு இருக்கும் கண்ணாடி முன்னால் போய் நின்றதும் ……”ஏன் அகில் இந்த கோபம் எதனால்……யாருக்காக…..” என்று கண்ணாடியில் இருக்கும் அந்த உருவம் நக்கலாக கேட்க…

சற்று அதிர்ந்து கண்ணாடியை பார்த்தவன்”……இல்ல…இல்ல…நான் அர்ஜுன்கிட்ட சைன் வாங்க தான் போனேன்.அவங்க தான் அபிய கூப்பிட்டாங்க…என் நேரத்தையே விரயமாக்கிட்டாங்க அதான் கோபம்” என சொல்ல

கண்ணாடியில் இருந்த உருவம்”அது மட்டும் தானா …..இல்லை எதையோ நம்பி போனவன் அது நடக்கவில்லை என்ற  ஏமாற்றம் ….அதனால் வந்த கோபம் போல் தெரிகிறதே” எனக்கேட்க….

“அப்படி எல்லாம் இல்ல….போகணும்னு நினைச்சிருந்தா அர்ஜுன் கூப்பிடும்போதே போயிருப்பனே…..இப்போ வேலை விஷியமா போக வேண்டியதா போச்சு …அதனால்தான்….. என்னை பத்தி எனக்கு தெரியும் யாரும் சொல்ல வேண்டாம்” என வேகமாக சொல்லி கொண்டே வெளியே வந்தவன் தன்இருக்கையில் அப்படியே கண் மூடி அமர்ந்தான்.
அங்கு மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த மகளை முறைத்த மஞ்சு .”உனக்காக அகில் எவ்ளோ நேரம் வெயிட் பண்ணான்.இப்ப வர நீ” என முறைத்தவள்

‘‘ …”அம்மா எனக்கு பசிக்குது சாப்பாடு போடறியா என மகள் கேட்டவுடன் மற்றது மறந்து போக  வா…வா…உனக்கு பிடிச்சது எல்லாம் சித்து வச்சிருக்கேன் .நல்ல சாப்பிடுடா என்றவர் மகள் விரும்பி சாப்டுவதை பார்த்ததும்

நான் அப்பவே சொன்னேன் …வெளிநாடு எல்லாம் வேண்டாம்னு கேட்டியா….. ..இப்படி துறும்பா இளச்சு போய் வந்திருக்க….எல்லாம் உனக்குதான் அபி என சுற்றிலும் இருக்கும் காய்கறி கனிகள் அனைத்தையும் , சாதத்துடன் தனது அன்பையும் சேர்த்து பரிமாறினார் அவள் அன்னை.

அன்னையின் அன்பில் மனம் நிறைய…… .கைபக்குவத்தில் வயறு நிறைய மன நிறைவுடன் சாப்பிட்டு எழுந்தவள் “அப்பா எங்கம்மா காணோம் என்று கேட்கவும்  ….அவர் அறையில் இருக்கிறார் அபி” .என கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தார் மஞ்சு.

அப்பாவின் அறை வாசலில் நின்றவள் ஒரு நிமிடம் தான் எடுத்த முடிவு சரிதானா என தன் மனதிடம் கேட்டு கொண்டு…..இனி எது நடந்தாலும் சமாளித்து தான் ஆக வேண்டும் என முடிவுடன் உள்ளே நுழைந்தாள் அபி.

அபியை பார்த்ததும் பத்மநாபன் “ வா அபி….சாப்பிட்டியா ….கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம்ல” என்றார்.……

“இப்பதான்பா சாப்பிட்டு வரேன்.அப்பா உங்க உடல்நிலை இப்போ எப்படி இருக்கு…சர்க்கரைக்கு  மாத்திரை சரியாய் எடுத்துகிறீங்கலா” என பாச மகளாய் விசாரிக்க…

அவரோ மகளின் அன்பில் மனம் கரைந்து “எனக்கு ஒன்னும் இல்ல அபிம்மா….எல்லாமே நார்மல்….நான் சூப்பரா இருக்கேன் ” என தன் கைகளை தூக்கி காட்ட….

“ஹா ஹா ஹா …என்னப்பா இது…இன்னும் நீங்க அந்த பழக்கத்தை இன்னும் விடலையா “என சிரித்துகொன்டே அவர் மடியில் தலை வைத்தாள்

தாய் மடியில் உறங்கும் கன்றாய் மகள் இருக்க அவள் படுத்திருக்க அப்போது “அபிம்மா இந்த  நான்கு வருட பிரிவு உனக்கு நிறய அனுபவத்தை கொடுத்திருக்கலாம் …. நிறிய மாற்றம் உனக்குள் ஏற்பட்டு இருக்கலாம்…..ஆனால் உன் அப்பா அப்போ எப்படியோ அதை போல் தான் இப்பவும் இருக்கேன்…. நீ எப்பவும் போலவே என்கிட்டே பேசலாம்…..சரி சொல்லு….இப்போ அப்பா உனக்கு என்ன செய்யணும்?” ……என அவள் தலையை வருடியவாறே அவர் கேட்கவும்

“அவர் மடியில் இருந்து டக்கென்று எழுந்தவள் ….ஆனாலும் அப்பா நீங்க இவ்ளோ ஷார்ப்பா இருக்க கூடாது” என சிரித்து கொண்டே சொன்னவள்

“அப்பா என் பேஷன் டிசைன் கோர்ஸ் படிப்பு முடிந்து ப்ராஜெக்ட் மட்டும் இருக்கு.நான் மெட்டீரியல் சம்பந்தமா ப்ராஜெக்ட் பண்ணலாம்னு இருக்கேன்.அதுக்கு கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு நான் போகணும்” என சொல்லி நிறுத்தினாள்.
.
அவரோ “அபி நீ விருப்பபட்டேனு தான் அந்த கோர்ஸ்க்கு சரின்னு சொன்னேன். மற்றபடி நீ வேலைக்கு போகணும்னு எந்த அவசியமும் இல்லை ….. அதான் படிப்பு முடிந்தது இந்த ப்ராஜெக்ட் எல்லாம் வேண்டாம்…..வீட்ல கொஞ்ச நாள் அம்மாவுக்கு துணையா இருக்கலாம்ல .உங்களை எல்லாம் பிரிஞ்சு அவ ரொம்ப வேதனை பட்டுடா……கொஞ்ச நாளைக்கு வீட்ல அம்மா கூடவே இருடா” என மகளிடம் பொறுமையாக கூற  ..

அப்போது “நல்லா சொல்லுங்க …நீ ஒன்னும் வேலைக்கு போய் சம்பாரிக்க வேண்டாம்.முதல்ல வீட்ல இருந்து வீட்டு வேலைய கத்துக்க ….இன்னும் ஒரு வேலையும் உருப்படியா  செய்ய தெரியாது…அன்னைக்கு தக்காளி சாதம் நல்ல இருக்கானு கேட்டா புளி சாதம் சூப்பரா இருக்குமானு சொல்றா…கேட்டா இரண்டும் புளிப்பாதான இருக்குதுன்னு பதில் சொல்றா….இவள என்ன செய்யறது” என வேலையயை முடித்து அறைக்குள் நுழைந்த மஞ்சு அவர்களின் பேச்சில் காதில் விழ தன் பங்கிற்கு அவளை பற்றி கணவரிடம்  புகார் வாசிக்கவும்
பத்மநாபன் சிரித்து கொண்டே “அவ சும்மா விளையாட்டுக்கு சொல்லிருப்பா மஞ்சு” என மகளுக்கு சப்போர்ட் செய்யவும் …
“நீங்க என்ன சொன்னாலும் சரி…அவ வீட்லதான் இருக்கனும்…இருந்து சமையல கத்துக்கட்டும்….நீங்க இந்த விஷியத்துல தலையிடாதிங்க” என மஞ்சு கறாராக   கூறிவிட்டார்
அப்போது “அய்யகோ!!!!!! என்ன கொடுமை!!!!!!!!!……ஒரு இருபது வயது இளம் பெண்ணை வீட்டு சிறையில் வைத்து சமையல் வேலை என்று கொடுமை படுத்துவதா……வர வர உன் அடாவடிதனத்திர்க்கு அளவே இல்லாமல் போய் விட்டது மஞ்சு .இனியும் பொருத்து கொள்ள மாட்டாள் இந்த அபி …

அப்பா என்ன இது …..நீங்களும் இதற்க்கு ஒத்துகொள்கிறீர்களா?…உங்கள் அன்பு மகள்…ஆசை மகள்…செல்ல மகள் வீட்டு சிறையிலா ….இதை கேட்க யாரும் இல்லயா …”என நாடகபாணியில் இடை விடாமல் அவள் பேசவும்  …

மகளின் குறும்புதனத்தில் வாய்விட்டு சிரித்த பத்மநாபன் “அபி போதும்..போதும் …நீ நாளைக்கே நம்ம கார்மென்ட்சக்கு போ ….நான் அர்ஜுன் கிட்ட பேசறேன்” என்றார்.

பின்னர் மனைவியிடம் திரும்பி “மஞ்சு உனக்கு எதுக்கு இந்த விஷ பரிட்சை….அவளை அவ போக்குல விடு …..கொஞ்ச நாள்ல எல்லாம்  சரி ஆகிடும்” என கூறிவிட்டு அந்த இடத்தில் இருந்து  எஸ்கேப் ஆனார் பத்மநாபன் .

அப்பாவின் அனுமதி கிடைத்த சந்தோசத்தில் தன் அம்மாவை பார்த்து கண்களை உருட்டி வாயை குவித்து…..”என்ன மஞ்சு டார்லிங் …எப்போதும் போல இந்த முறையும் உன்னோட கேஸ் ரிஜெக்ட் ஆகிடுச்சு” என கூறி பழிப்பு காட்டி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள். பின்னே இருந்தால் மஞ்சுவின் அக்னி பார்வையில் எரிந்து விடுவோம் என்று அவளுக்கா தெரியாது.

மறுநாள் காலை கிளம்பி தன் அறையை விட்டு வெளியே வந்தவள் ….தனக்கு முன்னே அர்ஜுனும் அப்பாவும் டைனிங் டேபிளில் அமர்ந்திருப்பதை பார்த்து……”அடடா!!!!!!!!….அர்ஜுன் நீ முன்னடியே வந்துட்டியா …அப்போ எனக்கு எதுவுமே இருக்காதே” என சொல்லி கொண்டே “அம்மா என்ன டிபன்” என கேட்டு கொண்டே நாற்காலியில் அமர

“இட்லி.தோசை. பொடி… என ஆரம்பித்த மஞ்சு …ஏய் கையை கழுவாம சாப்பிட உட்காரதனு எத்தன தடவ சொல்லிருக்கேன் …போய் கையை கழுவிட்டு வா” என விரட்ட….

“அச்சோ இது வீடா…இல்ல மில்ட்டரி ஹோட்டலா…..அதைதொடாத…இதை செய்னு   சேச்சே…..அம்மா வர வர உன் அராஜகம் தாங்க முடியல….நீ செய்து இருக்க  விசகட்டியும் அதோட தங்கச்சியையும் …அத சாப்பிடரதே பெரும் பாடு……..இதுல வேற ஏகப்பட்ட ரூல்ஸ் ….என்ன பத்து இது எல்லாம் நீங்க கேட்கறதே இல்லயா” என அம்மாவில் தொடங்கி அப்பாவிடம் முடித்தாள் அபி.
“என்னது விசகட்டியா “என மஞ்சும் பத்மநாபனும் அதிர்ந்து கேட்க…”அதான்பா இந்த இட்லியும் ,தோசையும் சொன்னேன்” என அவள் சாவகாசமாக சொல்ல ….

“ஏய்…வாலு ….நீ பேசாம  சப்பிடமாட்ட ….அங்க USA ல  “என்னடா சாப்பாடு இது…..அம்மாவோட குழிபனியாரமும், பொங்கலும் சாப்பிடனும்னு ஆசையா இருக்குதுன்னு சொல்லிட்டு …இங்க வந்து அம்மாவே கிண்டல் பண்ணிட்டு இருக்க நீ “என அர்ஜுன் செல்லமாக திட்ட ….

அவளோ அதை கண்டு கொள்ளாமல் “ஏய் அர்ஜுன்….அது என்ன உனக்கு மட்டும் தட்டுல சர்க்கரை பொங்கல் இருக்கு ….எனக்கு இல்ல…இது அநியாயம் …திட்டமிட்ட சதி …அர்ஜுனுக்கு மட்டும் தனிய கவனிகிறீங்க…பெண்களுக்கு மரியாதை இல்லையா ” என அவள் மீண்டும்  குதிக்கவும்  …..

“லூசு அங்க பாரு …உன் தட்லையும் தான் இருக்கு….நீ எங்க பிளேட்ட பார்த்த……வந்ததுல இருந்து வாய் ஓயாம பேசிட்டு இருக்க “என அர்ஜுன் கூற……

“ஹிஹிஹி…என அசடு வழிந்தவள் ….சரி சரி சாப்பிடும்போது என்ன பேச்சு ….அமைதியா சாப்பிடுங்க” என எதோ மற்றவர்கள் பேசுவது போல் அவர்களை அடக்கிவிட்டு இவள்  தனது சாப்பிடும் பணியை தொடர்ந்தாள்.

பத்மநாபன் மஞ்சுவை நிமிர்ந்து பார்க்க …அவள் முகத்தில் என்றும் இல்லாத நிம்மதியும் சந்தோசமும் குடிகொண்டிருப்பதை பார்த்து தானும் புன்னகைத்து கொண்டார்.

அலுவலகம் கிளம்பும் நேரத்தில் பத்மநாபன் அர்ஜுனிடம் ….”நம்ம அபியும் ஏதோ ப்ராஜெக்ட் விஷயமா நம்ம கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வரணும்னு சொன்னாள்.அவளயும் கூட்டிட்டு போ” என கூறவும் ..

உடனே அர்ஜுன் “அங்க  எல்லாம் எதுக்கு…வேண்டாம் அப்பா…எனக்கும் மீட்டிங் இருக்கு…இவளை கவனிக்க முடியாது” என சொல்ல..

“அர்ஜுன் நான் என் படிப்பு விஷயமாத்தான் வரேன்…என் வேலை முடிந்ததும் கிளம்பி விடுவேன்” என அபி அழுத்தமாக சொல்ல…

“இல்லைடா…..நீ  முதல் தடவை கம்பெனிக்கு  வரியா… உனக்கு யாரையும் தெரியாது……நானும் பிசியா இருப்பேன் …உனக்கு யாரு ஹெல்ப் பண்ணுவா அதுக்கு சொன்னேன்டா” என்றவன்

தங்கையின் முகம் சுருங்கவும் காண பொறுக்காமல் ..”சரி வா “என அழைத்து சென்றான்.

நேற்றைய தலைவலி இன்றும் தொடர அகில் சிறிது குழம்பி போய் இருந்தான். தான் இங்கு வந்து இருக்க கூடாதோ என முதன் முதலாக வருத்தபட்டான்.

பின்னர் தான் கற்ற யோகா தனக்கு கை கொடுக்க சிறிது நேரம் தியானம் செய்தவன் பின்னர் மனதை சமன் படுத்தி அலுவலகம் கிளம்ப தயாரானான்.

அர்ஜுன் அலுவலகம் வந்ததும் அங்கு பணியில் இருக்கும் தாமரையை அழைத்து ,”தாமரை இவங்க அபிமித்ரா .இவங்க ப்ராஜெக்ட் விஷயமா சில விபரங்கள் வேனும்னு வந்திருக்காங்க…அவங்களுக்கு தேவையான உதவிகளை பண்ணி கொடுங்க” என கூறியவன்…

அபியிடம் திரும்பி “அபி இவங்க தான் மெட்டீரியல் செக்சன்ல இருக்காங்க. உனக்கு  தேவையான விபரங்களை தருவாங்க..எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு..நான் கிளம்புகிறேன்” என கூறிவிட்டு சென்றான்.

தாமரை இந்த நிறுவனத்தில் ஐந்து வருடமாக இருக்கிறாள்.மிகவும் சுறுசுறுப்பான  பொறுப்பான  பெண்.கம்பெனியின் நம்பிக்கைக்கு உரியவள்.அதனால் தான் அகில்க்கு உதவியாளராக தாமரையை நியமித்து இருந்தார் பத்மநாபன்.

அபி பேஷன்டிசைனிங் படித்து கொண்டு இருப்பதால் அதில் மெட்டீரியல் சம்பந்தமான விபரங்கள் சேகரிக்கவே இங்கு வந்து இருக்கிறாள்.(நம்பனும் friends…அது தான் உண்மை…….அபியின் மைன்டு வாய்ஸ்)

அபிக்கு தேவையான விபரங்களை தாமரை பொறுப்பாக சொல்லி கொண்டிருந்தாள்.சில விபரங்கள் அவளுக்கு தெரியவில்லை.தனது பாஸ்ஸிடம் கேட்டு சொல்கிறேன் என்று. கூறினாள்.அபியும் சரி என்று கூறிவிட்டு அந்த கேள்விகளை அவளிடம் கொடுக்க …

அதை வாங்கிய தாமரை “வெயிட் பண்ணுங்க…..நான் சார் கிட்ட இத பத்தின விபரங்களை கேட்டு வருகிறேன்” என சொல்லி விட்டு மற்றொரு அறையை நோக்கி சென்றாள்

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவள் …”அபி… சார் எல்லா விபரங்களயும் மெயில் பண்றேன்னு சொல்லிருக்கார்…..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என கூற ..

உடனே அபி கண்களை உருட்டி கொண்டு அங்கும் இங்கும் பார்த்து விட்டு “தாமரை இங்க வாங்க…… ஒரு வேளை உங்க சார்க்கே விளக்கம் தெரியலையே என்னவோ …யார்கிட்டையாவது பிட் அடிச்சு சொல்வார் பாருங்க”என ரகசியமாக சொல்ல …

“அபி உனக்கு அவரை பற்றி தெரியாது . எங்க பாஸ் ரொம்பவும் அறிவாளி  …. அவர்க்கு தெரியாத விபரம் ஏதும் கிடையாது. எந்த டாபிக் கொடுத்தாலும் பேசுவார்…… .எல்லா விஷயமும் அப்டேட் வச்சிருப்பார். ஒரு வேலைய ஆரம்பிசுட்டாருனா அத முடிக்காம தூங்க மாட்டார்.என்ன அதிகம் பேச மாட்டார் அவ்ளோதான் .இன்னைக்கு கொஞ்சம் மூடு அவுட்ல இருக்கார்.. அதான்  நான் ஏதும் பேசாம அவர்கிட்ட அந்த விபரங்களை மட்டும் கொடுத்திட்டு வந்திருக்கேன்.இந்த மாதிரி நேரத்துல இப்படி தான் பண்ணுவோம்.அவரும் பதிலை மெயில் பண்ணிடுவார்” என கூறியவள் “எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு பார்த்துட்டு வந்து விடுகிறேன்.இங்கே இரு “என கூறி விட்டு சென்றாள்.

தனியாக அமர்ந்திருந்த அபியின் மனம் தனது சண்டிதனத்தை ஆரம்பித்தது.

“நம்ம ஆல் இங்க எங்க இருப்பான் ….யார கேட்கறது…….சரி தாமரையே கேட்ருவோம்” என அவள் இருப்பிடத்தை நோக்கி அபி செல்ல ,தாமரையும் அவளை நோக்கி வர “ஹே அபி வாங்க..மெயில் வந்திருக்கு பாருங்க” என கணினி முன் அமர வைத்தாள்.

அதை படித்து பார்த்த அபி” வாவ் !!!!!!!!!!!!! சூப்பர் தாமரை…..இதை தான் நான் எதிர்பார்த்தேன்.பரவாயில்லை உங்க பாஸ் ரொம்ப திறமைசாலிதான் ….ஆனால் அந்த பாலிகாட்டன் மெட்டீரியல் விபரங்கள் இல்லயே” என கேட்க…

“ஒ அப்படியா…இருங்க …போன் போட்டு கொடுக்கிறேன் …நீங்களே கேளுங்க “என அவள் தொலைபேசியை எடுக்க ….

“வேண்டாம் வேண்டாம் ….அவருக்கு மெயில் பண்ணி விடுகிறேன்”.என விபரங்கள் கேட்டு மெயில் அனுப்பினாள்

மெயிலை பார்த்ததும் அகில் சலித்து கொண்டே…..”யாருடா இந்த பொண்ணு….இப்படி குடைஞ்சு கேள்வி கேட்டுகிட்டு இருக்கு” என நினைத்தவன்,

“இந்த மெடீரியல்ஸ் நாங்க யூஸ் பண்றதில்லை ….SRM கார்மெண்ட்ஸ் தான் இந்த மெடீரியல்ஸ் யூஸ் பண்ணுவாங்க…..நீங்க அங்க போய் விபரங்களை கேட்டுக்குங்க “‘ என பதில் அனுப்பி வைத்தான்.

இதனை படித்தும் அபிக்கு சட்டென்று கோபம் வர  உடனே இவாறு பதில் அனுப்பினாள்…..”‘என்ன சார் ….இந்த சிட்டியிலயே இது தான் பெரிய கார்மெண்ட்ஸ் கம்பெனி ……அதும் இந்த மெடீரியல்ஸ் உலகத்துல பாதி பேர் யூஸ் பண்றாங்க…விபரம் கேட்டா தெரியலன்னு சொல்றிங்க…இந்த கம்பெனில வேலை பார்த்துகிட்டு இன்னொரு கம்பெனி ரெக்கமண்டு பண்றிங்க ….நல்ல MD சார் நீங்க……இனி மேல் இப்படி சொல்லாதிங்க…மத்தவங்க நம்ம கம்பெனி பத்தி என்ன நினைப்பாங்க இது ப்ரீ ஒப் அட்வைஸ் …கேட்டா கேட்டுக்குங்க…….கேட்காட்டி போங்க “என கூறி விட்டு மெயிலை அனைத்தாள்.

இதை படித்தும் அகிலிற்கு சட்டேன்று கோபம் வர…பின்னர் சிரித்து கொண்டே “ஏதோ சின்ன பெண்….பயங்கர வாலாட்ட இருக்கு…..இந்த மாதிரி விஷயம் எல்லாம் எங்கிட்ட கொண்டு வர கூடாதுன்னு தாமரை கிட்ட சொல்லி வைக்கணும்” என நினைத்து கொண்டே தன்னுடைய வேலையை தொடர்ந்தான்.

தான் வந்த வேலை பாதி முடிந்த நிலையில் மீதியை நாளை பார்த்து கொள்ளலாம் என முடிவு செய்து விட்டு அகிலை பற்றி விசாரிக்க தாமரையிடம் திரும்பினாள் அபி.

“என்ன அபி வேலை முடிந்து விட்டதா…..நான் மீட்டிங்  கிளம்பறேன். உன் வேலை முடிஞ்சா உன்னை  வீட்ல விட்டு போகிறேன் என கேட்டு கொண்டே  உள்ளே வந்தான் அவர்களின் அறைக்குள் வந்தான் அர்ஜுன்.,..

“இல்லை அண்ணா…இன்னும் சில விபரங்கள் வேணும்…SRM  கார்மெண்ட்ஸ் வரை போகணும்…அங்கு தான் கிடைக்குமா” என அபி கூற

“அப்படியா……இங்கயே எல்லாமே இருக்குமே…அங்க எதுக்கு? என கேட்ட அர்ஜுன்

உடனே தாமரை” இல்ல சார்…பாஸ் தான் சொன்னார்.அந்த மெட்டீரியல் நம்ம யூஸ் பண்றதில்லைன்னு” என கூற

“ஒ அவன் சொன்னனா சரியாதான் இருக்கும்.ஆனா அபி நான் வெளிய போனா எப்போ வருவேன்னு தெரியாது” என ஒரு நிமிடம் யோசனை செய்தவன்….

தொலைபேசியை எடுத்து” டேய் இப்ப என்ன வேலையா இருக்கியா …என கேட்டவன்…….. இல்ல வேலையை முடிச்சுட்டேன் …இப்ப ப்ரீ தான் என பதில் வந்ததும்…… அப்போ கொஞ்சம் வெளியே போகணும் இங்கே வா “என கூறிவிட்டு கட் பண்ணிவிட்டான்.

இப்ப எங்க வெளியே போகனும்க்றான்….என்னவா இருக்கும் என யோசனையுடன் அகில் அங்கு வர……. அங்கு அர்ஜுன் தாமரை இருவரும் இருந்தனர்.

“என்னாச்சு அர்ஜுன்….எங்க போகணும்” என அகில் கேட்க

“அதில்லடா….நம்ம SRM  கார்மெண்ட்ஸ் வரைக்கும் போகணும்….எனக்கு வேலை இருக்கு நீ கூட்டிகிட்டு போறியா” எனக் கேட்க

“ஓகேடா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை …ஆனா யாரை கூட்டிகிட்டு போகணும்” என அகில் கேட்க

“எல்லாம் நம்ம அபிதானடா….ரெஸ்ட் ரூம் போயிருக்கா…வந்துருவா….. பார்த்து அவ வேலை முடிஞ்சதும் வீட்ல விட்டுடு” என சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் அர்ஜுன் கிளம்ப ஒன்றும் புரியாமல் அகில் நிற்க

“என்ன அர்ஜுன் எனக்கு டிரைவர் ரெடி பண்ணிட்டியா” என கேட்டுகொண்டே உள்ளே வந்தவள் அங்கு அகிலை பார்த்ததும் திகைத்து போய் நின்றாள்..

கண்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று கலக்க

காத்திருந்த மனமோ கவிதை பாட

இவர்கள் இருவர் மட்டுமே

இந்த உலகில் இருப்பதாக தோன்ற

சில வினாடிகளே ஆனாலும் அதை அனுபவித்தனர் இருவரும்.

தாமரை அபி பார்த்து ……”.வாங்க அபி…இவர் தான் எங்க பாஸ்… Mr அகிலன் சார் “என சொல்ல

உடனே அபி “ஆமாண்டி இப்ப சொல்லு…ஆரம்பித்துல இருந்து பாஸ் மட்டும் சொன்னியே பேரை சொன்னியா ,நான் வேற என்ன என்னமோ பேசிட்டேன்…என்ன சொல்ல போறானோ” என மனதிற்கு புலம்ப

“சார் இவங்கதான் அபி…உங்க கிட்ட இப்போ மெயில்ல பேசினாங்கள அவங்க “என அறிமுக படுத்த

“அடி பாவி நீதான அது…அப்பவே நினச்சேன்…இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடிய ஆளு நீ ஒருத்தி தான்…என்னடா புதுசா வந்த பொண்ணு பேசுதேனு பார்த்தேன்…எனக்கு ப்ரீ  அட்வைஸ் வேற …எல்லாம் நேரம்….”என அவனும் மனதிற்கு புலம்பியவன் ………அவளை முறைத்து கொண்டே நிற்க

அபி உடனே “தாமரை நீங்க கிளம்புங்க …நாங்க பார்த்துக்கிறோம் ரொம்ப நன்றி” என கூறி விட்டு அகிலிடம் திரும்பி

“போகலாமா……..மா………. .மா.”.என இழுத்தவள்

என்ன ……….என அவன் கர்ஜிக்க வும்

போலாமான்னு கேட்டேன் என வாய்க்குள் முன்முனுத்து கொண்டாள்.

“எங்க ….என மறுபடியும் அவன் கேட்க….

நீங்க என்ன மணிரத்னம் படத்துல நடிக்க போறிங்களா என அவள் வேகமாக கேட்டதும்

தாமரையும் அகிலும் புரியாமல் அவளை பார்க்க

“இல்ல எத கேட்டாலும் ஒரு வார்த்தை மட்டுமே பேசறிங்களே அதனால கேட்டேன்” என சொல்லி விட்டு

உடனே முகத்தை பாவமாக வைத்து கொண்டு அபி அமைதியாக நிற்க

தாமரை உடனே “அபி கவலைபடாதே….பேசறது தான் இப்படி…ஆனால் பக்க ஜென்டில்மேன் எங்க பாஸ்” என சிரித்து கொண்டே அவனுக்கு புகழாரம் சூட்டினாள்.

“அத எங்கிட்ட சொல்றியா நீ…. எனக்கு தெரியாதா இவனை பற்றி” என நினைத்து கொண்டு

“இல்ல தாமரை….. உங்க பாஸ் எப்பவும் இப்படி தான் ஜின்ஜெர் சாப்பிட்ட என்னமோ சொல்வாங்கலே மறந்திடுச்சு….. அது மாதிரி தான் முகத்தை வைத்து இருப்பாரோ” என இவள் ரகசியமாக தாமரையிடம் கேட்க
தாமரைக்கே சிரிப்பு வந்து விட்டது அவள் கேட்ட விதத்தை பார்த்து ….

”அச்சோ அவர் கொஞ்சம் ஸ்ட்ரைட் பார்வேர்ட் குணம் அவ்ளோதான் ..இனி இந்த மாதிரி பேசாதிங்க” என மெதுவாக சொல்ல

பின்னர் அகிலிடம் சென்று “சார்….சின்ன பெண் ….கொஞ்சம் வாய் துடுக்கு….பாவம் உங்களை பார்த்து பயபட்ரா…பார்த்துக்குங்க சார்” என கெஞ்ச….

“இவள் என்னை பற்றி ஏதோ வில்லங்கமாக சொல்லி இருக்கிறாள்….அதான் தாமரை  இப்படி சொல்கிறாள்…இவளா பயபடுவது…இவளை பார்த்து ஊரே பயபடுது…எப்படி நடிக்கிறா பாரு” என வாய்க்குள் முனகியவன் இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் என் இமேஜ் முழுவதும் டேமேஜ் ஆக்கி விடுவாள்…..முதல்ல இங்க இருந்து அவளை கிளப்பு அகில் என உள்மனது கட்டளை இட ……

தாமாரையிடம் திரும்பி” நான் பார்த்து கொள்கிறேன்…..நீங்கள் நான் கொடுத்த வேலையை முடித்து வையுங்கள்” என கூறிவிட்டு

“வா போகலாம் “என சொல்லி கொண்டே வேகமாக முன்னே நடந்தான்.

காரில் ஏறி அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணியவன் …அவள் வந்து முன் சீட்டில் அமர்ந்து அவனை பார்த்து கொண்டே இருக்க

சே என சலித்து கொண்டே ரேடியோவை ஆன் செய்ய அதில்

என்னை விட்டு ஓடி போக முடியுமா முடியுமா
நாம் இருவர் அல்ல ஒருவர் என்று தெரியுமா தெரியுமா
என பாட

அபி சிரிக்க ,அவன் வேகமாக ரேடியோவை ஆப்பண்ணினான்.

காத்திருந்த இருவரின் மனமோ

தனது நேசத்தை சொல்ல துடிக்க

உள்ளேயுள்ள ஈகோவும் கோபமும்

அதை திரையிட்டு மறைக்க

காதலில் பொறுமையும் ஒரு அங்கம் தான்

என்பதை காதல் கொண்ட உள்ளம் ஏனோ

கண்டு கொள்வதில்லை.

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா -4

ஒளிபடைத்த கண்ணினாய் வா வா !

திராவிட பெண்கள் க்கான பட முடிவு

 

 

  அத்தியாயம் 4

மாலை பொழுது மனதிற்கு இதம் தர சாமி அறையில் விளக்கேற்றி வைத்து விட்டு சிறிது நேரம் கண்களை மூடி தன் மனதில உள்ள எண்ணங்களை இறைவனிடம் இறக்கி வைத்து விட்டு மனம் சிறிது லேசாக……… கண்களை திறந்தவள்….. அங்கு தீப ஒளியின் வெளிச்சத்தில்முருகனின் முகம் ஜொலிக்க அதை மனதில் நிரப்பி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார் வனஜா .

“மணி ஏழு  ஆக போகிறது ….இன்னும் இவளை காணோம்….”என புலம்பிகொண்டே இரவு உணவுக்கு தயார் செய்து கொண்டிருந்தார்.

அலுவலகத்தில் இருந்து நேராக வீட்டிற்கு வந்தவள் ….”அம்மா என்ன பண்றிங்க …..என்னம்மா டிபன் இன்னைக்கு” என கேட்டுகொண்டே சோபாவில் அமர்ந்தாள் ஆருத்ரா.

“உனக்கு பிடிச்ச ஆப்பம்,தேங்காய் பால் ,பாயா ருத்ரா …குளிச்சிட்டு வா சாப்பிடலாம் என சொன்னவள் ….ம் ம் ம் …….ருத்ரா அப்படியே உங்கிட்ட முக்கியமான விஷியம் பேசணும் .அதனால சீக்கிரம் வந்து சேர்” என்றார்.

“என்னம்மா விஷியம்” என யோசனையாக தாயை பார்த்தவள் …..

“நீ நினைக்கிற மாதிரி இல்லைடா ….நல்ல விஷயந்தான்…….”என சொல்லிகொண்டே சமையலறைக்குள் புகுந்து கொண்டார்.

குளித்து முடித்து விட்டு இரவு உடையில் வெளியில் வந்தவள் ….”அம்மா நான் வந்துவிட்டேன்” என கத்தி கொண்டே அவள் அருகில் சென்று அவளை கட்டி பிடித்ததும் ….”அச்சோ ….ருத்ரா என்ன இது…விடு…”என சலித்த வாரே அவளிடம் இருந்து வெளியே வந்தார்..வனஜா .

“அம்மா இன்னைக்கு நிலா எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா? ….நம்ம மொட்டை மாடியில் சாப்பிடலாமா” என ஏக்கமாக கேட்க

“சாப்பிடலாமே “….என சிரித்து கொண்டே சொன்ன வனஜா எல்லாவற்றையும் மொட்டை மாடிக்கு எடுத்து வந்தார்.

நிலவின் ஒளியில் தாயின் மடியில் உணவு உண்பது என்பது எவ்வளவு சுகம்…..அதை அவள் அனுபவித்து கொண்டிருந்தாள்.

“இன்று மதியம் நீ சாப்பிடலையா ….சாப்பாடு அப்படியே இருந்தது” என அவளுக்கு ஊட்டி கொண்டே வனஜா கேட்க

“அச்சோ …அம்மா…சொல்ல மறந்துட்டேன் .இன்னைக்கு AP இன்டர்நேஷனல் போயிருந்தேனா…..அங்கு MD சாப்பிட சொன்னார்.சாப்பிட்டேன்” என அங்கு நடந்ததை ஒன்று விடாம்மல் தன் தாயிடம் சொன்னாள் ருத்ரா.

அமைதியாக கேட்ட வனஜா “அன்று பார்ட்டிக்கு போனேன்னு சொன்னது அவங்களுடையது தான” என கேட்க …

“ஆமாம்மா …”என வேகமாக தலை ஆட்டியவள்……….பின்னர் யோசனையுடன் “அம்மா” என்று இழுக்க ….

“இல்ல அப்போ வீட்டுக்கு வந்ததும் அவ்ளோ கோபமாக பேசின ….இன்னைக்கு இப்படி பேசற அதனால  கேட்டேன்”  என்றார் வனஜா.

“அதில்லமா  …அர்ஜுன் நல்லவர் தான். நான் தான் கொஞ்சம் தவறா புரிஞ்சுகிட்டேன் ……இன்னைக்கு அவரை பார்க்க போய் இருந்தேன். மீட்டிங் இருந்ததால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு……அவரே வந்து சாரி நேரமாகிடுச்சு னு சொன்னார் தெரியுமா? …. என்கிட்ட அப்படி கேட்கனும்னு அவசியம் இல்லை. ஆனா கேட்டார் என்றவள்

அப்புறம் புதுசா தொடங்க போற தொழிலுக்கு என்னோட ஹெல்ப் வேணுன்னு கேட்டு இருக்காரு” என அவள் பேசி கொண்டே போக

“அதற்கு நீ என்ன சொன்ன” என வனஜா கேட்டார்.

“கண்டிப்பா செய்யறேன்னு சொன்னேன்மா” என்றவள் என் திறமையை  நம்பி கேட்கிறார் …..  எப்படி இல்லைன்னு சொல்ல  முடியும்” என்றாள்.

“அங்கிள் கிட்ட அனுமதி வாங்கிட்டு தான  சரின்னு  சொன்ன” என வனஜா மீண்டும் கேட்க

“வேகமாக… இல்லம்மா…….அது ஒன்றும் பிரச்சனை இல்லை” என்று சொன்னவள்  சட்டென்று நிறுத்தி விட்டு தன தாயை நிமிர்ந்து பார்த்து “அம்மா …….”.என அழுத்தி அழைத்தவள்

“இல்லை ருத்ரா அன்று அவர்களை பிடிக்கலை என்று அப்படி பேசினாய்….இன்றோ அவர்களை பற்றி புகழ்ந்து பேசுகிறாய்.தொழில் சம்பந்தமாக எந்த முடிவு எடுத்தாலும் அங்கிளிடம் கேட்காமல் ஏதும் செய்யாதே “…..என்றார்.

“நான் அங்கிளிடம் சொல்லிடுவேன்மா” என அவள்  மெதுவாக சொல்ல

“அதற்கு சொல்லலை  ருத்ரா……. உனக்கு எதற்கெடுத்தாலும் அவசரம். ஒருத்தரை பற்றி தெரியாமல் தவறாக பேச கூடாது . அப்போது தவறாக தெரிந்தவர் இப்போது அவர் நல்லவராக தெரிகிறார்.”…இப்போ புரிகிறதா ….இனி இந்த மாதிரி யாரையும் பேசாத என அறிவுரை சொல்லவும்

“அம்மா இப்போ நீங்கள் என்ன சொல்ல வறீங்க” என அவள் வேகமாக கேட்க

“பாரு இப்பதான் சொன்னேன் .எதற்கு இந்த வேகம். இது தான் எனக்கு பயமே …….இங்க பாரு ருத்ரா உனக்கு எவ்ளோ தான் திறமை இருந்தாலும் உன்னோட அவசர புத்தியினால் அது பயனில்லாமல் போய் விடும்” என கவலையாக பேச

“அம்மா என்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.உங்களுக்கு தலை குனிவோ ,வருத்தமோ ஏற்படற மாதிரி நான் எதுவும் செய்யமாட்டேன்” என கூறியவள்

“அம்மா நான் உங்கள் மகள் கண்டிப்பாக எந்த தவறான செயலும் என்னால் ஏற்படாது” என அவள் கன்னத்தை கிள்ளி கொண்டே சொன்னவள்…. “ஏதோ முக்கியமான விஷியம் பேசணும்னு சொன்னிங்களே ..என்ன அது “என பேச்சை மாற்றினாள்.

ம்ம் அதான் “உனக்கு திருமணம் செய்யலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.ஒரு ஜாதகம் வந்திருக்கு” என அவர்  ஆரம்பிக்க

“அம்மா எனக்கு இப்போ திருமணதிற்கு என்ன அவசரம்….இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமா …உன்கூட நான் இந்த மாதிரி நிறைய நேரம் செலவழிக்கணும்….உனக்கு நிறையா செய்யணும்” என அவள் கனவுலகிற்கு செல்ல

“ருத்ரா இது கேட்க நல்ல தான் இருக்கு.ஆனா ஒரு அம்மாவா எனக்கு இது எல்லாம் பெரிய சந்தோசம் அல்ல …உன்ன நல்லபடியா திருமணம் செய்து கொடுத்து நீ சந்தோசமா வாழ்றத பார்க்கணும் .அதான் எனக்கு சந்தோசம் “ என்றார்.

“என்னமா நீங்க….எல்லா அம்மா மாதிர்யே டயலாக் பேசறிங்க…என் அம்மா வித்தியாசமான அம்மான்னு நான் பெருமையா நினச்சுட்டு இருக்கேன்” என அவள் பேச்சை மாற்ற

“ருத்ரா நீ பேச்சை மாத்தாத…..நீ என்ன ஐடியாவுள இருக்க ….உன் மனதில் எது இருந்தாலும் எங்கிட்ட வெளிப்படையா சொல்லிடு ….நீ மட்டும் தான் எனக்கு உயிர் ….அதைவிட எனக்கு வேற எதுவும் பெருசு இல்ல” என அவர் கூற

கண்களில் கண்ணீர் நிரம்ப தன் தாயை நிமிர்ந்து பார்த்தவள் “அம்மா எனக்காக நீ எவ்ளோ துன்பங்களை தாண்டி வந்திருகேன்னு எனக்கு தெரியும்மா .இதுவரைக்கும் நான் கேட்பதற்கு முன்னடியே நான் நினைப்பதை நீங்க செஞ்சுடுவிங்க…அதே மாதிரிதான் இதுவும்…..உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை செய்ங்க”  என்றவள் “எனக்கு தூக்கம் வருகிறது வாங்க போலாம்” என கூறி விட்டு வேகமாக முன்னே நடந்தாள்.

மகளின் வார்த்தைகல் மனதில் பதிய என் மகள் என்ற பெருமை முகத்தில் ஜொலிக்க ….வானத்தை பார்த்துகொண்டே அப்படியே அமர்ந்திருந்தார் வனஜா.

தனிமையில் இருந்து நிலவை ரசிக்கும்போது நினைவுகள் தடம் மாறுவது இயற்கை தானே.

மனதில் பூட்டி வைத்த எண்ணங்கள் மடை திறந்த வெள்ளம் போல் கொட்ட ,நிலவு மகளும் அதை அமைதியாக உள் வாங்கி கொள்வது இயற்கை நமக்கு அளித்த கொடை அல்லவா….

சந்தோஷ உணர்வுகள் ,மனதிற்கு சங்கடத்தை ஏற்படுத்து உணர்வுகள் என பாரபட்சம் இல்லாமல் கொட்டி தீர்ப்பது இது போல் தனிமையில் தான்…..

இதை தான் வைரமுத்துவும்
“வானம் எனக்கு ஒரு போதி மரம்
நாளும் எனக்கு அது  சேதி தரும்”
சொல்லி இருக்கிறார்.

மொட்டை மாடியில் அமர்ந்திருந்த வனஜாவின் எண்ணங்கள் பலவண்ணங்களாக பிரிந்தது .

ரகுநாதன் வனஜா திருமணம் பெற்றோர்களால் பார்த்து நிச்சியக்கபட்ட திருமணம் தான்.இருவரும் அந்தஸ்த்தில் சரி நிகர் தான்.ஆனால் வனஜா வீட்டில் எல்லாமே அசையா சொத்துகளாக இருந்தது. ரகுநாதன் வீட்டில் பெரிய அரண்மனை போன்ற வீடு, கார்கள், எஸ்ட்டேட் என கொஞ்சம் ஆடம்பரமான சொத்துக்கள். அவர்களது எண்ணங்களும் அப்படிதான்.

கிராமத்தில் பாசமும் ,மண்ணின் வாசமும் நிறைந்த இடத்தில் வளர்ந்த வனஜாவிற்கு இந்த சூழ்நிலை புரிந்து தன்னை நிலை படுத்தி கொள்வதற்கே வெகு நாள் ஆனது,

ரகுநாதன் தன் மனைவியின் மேல் உயிரே வைத்து இருந்தார்.அதனால் அங்கு இருப்பவர்களை பற்றி வனஜா கவலை படவில்லை.அவர்களது சந்தோஷ வாழ்கையின் அடையாளம் ஆருத்ரா ஜனனம் ஆனதும் இன்னும் அதிகமானது.

நிலையில்லா வாழ்வில் இது தான் நிரந்திரம் என்று நினைத்து வாழ ஆரம்பித்து விட்டால் ஏற்ப்படும் இழப்புகளை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

ரகுநாதனின் எண்ணமும் அது போலதான்.அவர் எந்த அளவு பாசமானவரோ அந்த அளவு அவசரகாரரும் கூட. இதை பல தடவை வனஜா எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை.தொழிலில் நல்ல நிலைமைக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில் அவருடன் இருந்த சிலர் அவரை தூண்டிவிட தொழிலில் அதிக முதலிடு செய்ய  ஆரம்பித்து விட்டார்.

பல இடங்களில் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்தார்.தொழிலில் ஏற்ற இறக்கங்கள் சகஜம் தான்.வனஜாவிற்கு தொழிலை பற்றி ஒன்றும் தெரியாது.ரகுநாதன் எது சொன்னாலும் நம்புவாள். ரகுவும் வனஜாவிற்கு எந்த துன்பமும் வராமல் பார்த்து கொண்டார்.

தொழிலில் இறங்குமுகம் வரவும் ரகுவால் தாங்க முடியவில்லை.அதை சமாளிக்க இருக்கின்ற எல்லா சேமிப்புகளையும் தொழிலில் முதலீடு செய்தார்.மீண்டும் ஓரளவிற்கு தேறி வரும்போது அவருக்கு கெட்ட நேரமும் கூட வந்தது.

ம்ம்ம் அது மட்டும் நடந்திருக்காவிட்டால் இன்று என் மகள் இருக்க வேண்டிய இடமே வேற என மனதில் நினைத்தவள் .அந்த நினைவுகளை …..

மறக்கத்தான் நினைக்கின்றேன்,
நிலை மாறி விடுமா என தவிக்கின்றேன்,
நினைவுகளின் தவிப்புகளால் அவள் துடிக்க,………
நம்மால் முடியும் நான் இருக்கிறேன் ,
சொல்லாமல் சொன்னது மகளின் அணைப்பு .

“என்னம்மா…பழைய நினவுகளா……” என தன் தாயை அவள் தோளோடு அணைத்து ஆருத்ரா நின்ற போது வனஜாவின் மன ஓட்டத்தை அளவிட முடியும்மா என்ன…

கொட்டும் மலையில் மகளின் அரவணைப்பில் தாயின் நெஞ்சம் தஞ்சம் அடைய மழை நீரோடு அவளின் மன கவலைகளும் கரைந்து கொண்டிருந்தது.

கீழே வந்து படுத்த ஆருத்ரா இடி மின்னல் சப்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க …..வனஜா அறையில் இல்லை என்றதும்  அம்மா இன்னும் மேல என்ன செய்யறாங்க என மேலே வந்தவள்……. தன் நிலை மறந்து வனஜா எண்ண ஓட்டத்தில் மூழ்கி இருக்க…….. அங்கு வந்து ஆருத்ரா தன் தாயை பார்த்ததும்  அவரின் நிலை புரிந்து கொண்டு அவரை  தன் தோளோடு அணைத்து கொண்டு வீட்டிற்க்குள் சென்றாள்.

ஆடிட்டர் அலுவலகம் ரொம்ப பிசியாக இயங்கிகொண்டிருந்தது.”ஷோபா அந்த VV கார்ப்பரேஷன் அக்கௌன்ட்ஸ் எல்லாம் முடிச்சுட்டியா…….,மணி எங்க போனான்…… இந்த டாகுமென்ட் ஜெராக்ஸ் எடுத்துட்டு வர சொல்லு” என நிற்க நேரமில்லாமல் வேலைசெய்து கொண்டு இருந்த ஆருத்ராவை ,தொலைபேசி அழைப்பு இடையுறு செய்ய ..

அதை காதில் வைத்தவள்……… குட் மார்னிங் …என்ன மேடம் வரேன்னு சொன்னிங்க ….ஆளவே காணோம் என்று என எதிர்புறத்தில் இருந்து கேள்வி வர, வேலை அவசரத்தில் “ஏய் மிஸ்டர் யார் நீங்க…..சம்பந்தம் இல்லாம பேசறிங்க…ராங் நம்பர்” என கூறி தொலைபேசி அணைப்பை அணைத்தாள்.

எதிர்புறத்தில் இதை கேட்ட அர்ஜுன் கண்கள் கோபத்தில் துடித்தது.”என்ன நினைச்சிகிட்டு இருக்கா இவ மனசுல………..நானும் போன போகுதுன்னு இறங்கி போனா ரொம்ப துள்ரா…………இருக்கட்டும் இப்ப தெரியும் நான் யாருன்னு……. “என  மீண்டும்  அழைத்தான்.

இங்கு  ஆருத்ராவுக்கோ அர்ஜுனின் தொலைபேசி எண் தெரியாது. பேசியபோது அவனும் அர்ஜுன்  பேசுகிறேன் என்று கூறவில்லை.அதனால் அவள் ராங் நம்பர் என்று எண்ணி அதை கட் செய்தாள்.

அலுவலக தொலைபேசி அழைக்க அதை எடுத்து காதில் வைத்தவள் ,”ஆருத்ரா என்னமா இது……நம்ம கிளையண்ட்ஸ் கிட்ட எப்படி பேசறதுன்னு மரியாதை தெரிய வேண்டாமா…..நான் உங்கிட்ட பல தடவை சொல்லிருக்கேன்…..உன்னோட அவசர புத்தியினால் எவ்ளோ பிரச்சனை பாரு….நானே நேத்து AP இன்டர்நேஷனல் வேலையை முடிச்சுட்டு வந்திருப்பேன்.இப்போ அவர் கூப்பிட்டு எங்கிட்ட ரொம்ப வருத்த படறார்…..”என ராமநாதன் கோபமாக சொல்ல……

“என்னாச்சு சார்”…. என கண்களில் கண்ணீருடன்,அதே சமயத்தில் இதுவரை திட்டாத அங்கிள் இப்போ திட்டுகிறாரே என வருத்தத்துடன் கேட்க…..

“AP இன்டர்நேஷனல் இருந்து போன் பண்ணாங்களாம்…நீ ராங் நம்பர்னு சொல்லி கட் பண்ணியாம்” என அவர் சொல்லவும்

அப்போது தான் ஆருத்ராவுக்கு புரிந்தது…தனக்கு வந்த அழைப்பு அர்ஜுனடமிருந்து என்று…..ஒரு நிமிடம் சுள்ளென்று கோபம் வர பின்னர் அதை கட்டுபடுத்தியவள்….”சாரி சார்……இனி இந்த தப்பு நடக்காம பார்த்துகிறேன்” என கூறி அலைலைபேசியை கீழே வைத்தாள்.

முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க வேகமாக கிளம்பியவள் தன் தாயின் முகம் நினைவிற்கு வர…கோபத்தை குறைத்து கொண்டு AP இன்டர்நேஷனல் அடைந்தாள்.

ஆருத்ரா வந்திருக்கும் செய்தி அர்ஜுனுக்கு செல்ல அது வரை கோபத்தில் இருந்தவன் அவளை பார்க்கபோகிறோம் என்று தெரிந்த உடன் கோபம் குறைந்து குதூகலம் மனதில் குடியேறியது.

அவளை தனது அறைக்கு வர சொன்னவன் ,தனது இருக்கையில் அமர்ந்து முகத்தில் புன்னகையுடன் “வாங்க மேடம்”என அழைக்க முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் அவன் முன் அமர்ந்தாள் ஆருத்ரா.

“குட் மார்னிங் சார். இந்தாங்க நீங்க கேட்ட விபரங்கள் “என ஒரு பைலை அவனிடம் நீட்ட

அவள் முகத்தை பார்த்துகொண்ட அந்த பைலை வாங்கியவன்,”நம்ம கொடுத்த ஷாக் ரொம்ப வேல செஞ்சுச்டுசோ யோசித்தவன்……பின்ன என்ன திமிர் இருந்தா என்ன ராங் நம்பர்னு சொல்லுவா …..நான் அவளே நினைச்சுட்டு இருக்கேன்….இவ என்னடானா என் நினைப்பே இல்லாம இருக்கா” என மனதில் தன் செய்த செயலுக்கு தானே சமாதனம் சொல்லி கொண்டவன்…..

அந்த பைலை பார்த்து விட்டு …” ஓகே ரொம்ப தேங்க்ஸ் ….அப்புறம் என்ன சாப்பிடறிங்க” என கேட்டான்.

“மன்னிக்கணும் சார்.எனக்கு வேலை இருக்கு……நான் கிளம்பறேன் என”சொல்லிவிட்டு இருக்கையில் இருந்து எழுந்தாள் ஆருத்ரா.

உடனே அவன் “என்னாச்சு …அதுக்குள்ள கிளம்பறிங்க …..நான் புதிய தொழில் சமபந்தமா பேசணும்னு சொல்லிருந்தேன் இல்லயா” என கேட்கவும்

“அது நீங்க எங்க பாஸ் கிட்ட கேட்டுக்குங்க சார்” என கூறி விட்டு கதவை நோக்கி நடந்தாள்.

“ஆருத்ரா நில்லு…..உன்ன அங்கிள் எதாவது சொன்னாரா” என அவன் கேட்க ….

“உனக்கு தெரியாதா…….அங்கயும் போட்டு கொடுத்துட்டு …என்கிட்டயும் நல்ல பையன் மாதிரி நடிக்கிறிய நீ” என அவள் கண்களால் கேட்க

“உன்ன வேற எப்படியும் வரவைக்க முடியாது….அதான் இப்படி”….என அவனும் அவளது பாணியில்  பதில் சொல்ல

அவனை முறைத்தவள்…..”இங்க பாருங்க மிஸ்டர் அர்ஜுன்” என ஆரம்பிக்க

“EXCUSEME “ என கேட்டுகொண்டே அகில் உள்ளே வரவும் அமைதியானாள் ஆருத்ரா.

“டேய் மச்சான் நீ தெய்வமடா என மனதில் அகிலை பாராட்டியவன்…..அகில் வாடா என்றான்.

 

உள்ளே நுழைந்தவன் அர்ஜுனை முறைத்து கொண்டிருக்கும் பெண்ணை கேள்வியை பார்க்க …உடனே சுதாரித்த அர்ஜுன் …..ம்ம் அகில் இவங்க மிஸ் ஆருத்ரா CA முடிச்சுட்டு  நம்ம ஆடிட்டர் கிட்ட ட்ரைனிங் எடுத்துகிட்டு இருக்காங்க “ என அறிமுகபடுத்ததினான்……

உடனே அகில் “ஹலோ” என்றவன் …….அர்ஜுனிடம் திரும்பி  அந்த டேக்ஸ் மேட்டர் பத்தி  பேசிட்டியா எனக் கேட்டான்.

 

அதுக்காகத்தான் இவங்களை வரசொன்னேன் அகில்……இப்ப நீயும் வந்துட்ட …இப்பவே பேசிடலாமா  என அவளை பார்த்து கொண்டே சொன்னான் அர்ஜுன்….இப்பவாவது என்னை நம்புகிறாயா என்பது போல அவன் பார்வை இருக்க ………..

“பேசிடலாம் அர்ஜுன்….முக்கியமான மேட்டர் இல்லயா ….தாமதிக்க வேண்டாம்”  என்றான் அகில்.

அந்த சமயத்தில்  நான் கிளம்புகிறேன் என்று சொல்ல முடியாமல் ஆருத்ரா தடுமாறிகொண்டிருக்க  …..

அப்போது “ஒரு நிமிடம் வெயிட் பண்ணு……நான்  பிஏகிட்ட கொஞ்சம்  இன்ஸ்ட்ரக்க்ஷன் கொடுத்துட்டு வந்துவிடுகிறேன் “ என அகில் வெளியில் செல்லவும்  …

அர்ஜுனோ “அடபாவி  இந்த நேரத்தில தனியா விட்டுடு போறியேடா “என மனதில் புலம்பிபடி ஆருத்ராவை பார்க்க ……

அர்ஜுனை திரும்பி முறைத்தவள் அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் அகிலும் வந்து விட மூவரும்   சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

“சார் உங்க அப்பா கடந்த சில  வருடமா லாபத்தில் ஐந்து பங்காக பிரித்து அதில் உங்க நான்கு பேர் பங்கு  மட்டும் கணக்கில் கொண்டு வந்து விட்டு கணக்கில் வராத கணக்காக அந்த ஒரு  பாகம் இருக்கிறது. அதையும் கணக்கில் கொண்டு வந்தால் தொழிலை விரிவு படுத்த  நீங்கள் வங்கியில் கடன் வாங்குவதற்கும் உதவியாக இருக்கும்” என ஆருத்ரா சொல்ல …….

“அப்படியா……நான் என் தந்தையிடம் கேட்கிறேன்.வேறு என்ன பண்ணலாம் சொல்லுங்கள்” என கேட்டான் அர்ஜுன்.

“அர்ஜுன் வீவீயங் பாக்டரி ஆரம்பிக்க நம்ம ரூரல் ஏரியாவ தேர்ந்தெடுத்தமனா அதுக்கும் நமக்கு சலுகைகள் கிடைக்கும்” என அகில் சொல்லவும்

“ஆமா அகில் சார் …இதுவும் சரியான ஐடியா தான்……….நிறைய சலுகைகள் உண்டு” என ஆருத்ராவும் ஆமோதிக்க ….

“சரி…சரி அப்படியே பண்ணலாம்…..அப்புறம் “என அரம்பித்தவன் தொலைபேசி அழைப்பு பேச்சை  நிறுத்தி விட்டு…… அதை காதில் வைக்க……”இதோ வந்தறேன்மா ….கொஞ்சம் வேலை அதான்……மறக்காம கூட்டிட்டு வந்தறேன்” என பதில் சொல்லி விட்டு அலைலைபேசியை அனைத்தான்.

“சரி  ….இன்னைக்கு இது போதும்…….நாளைக்கு மறுபடியும் இத பத்தி பேசலாம்” என கூறியவன்……..

“இல்ல ………எனக்கு நாளிக்கு வேலை இருக்கு ” என ஆருத்ரா ஆரம்பிக்க .

“நான் அவசரமா கிளம்பனும்…..மிஸ் ஆருத்ரா நாளை பேசிக்கலாம் ” என அவளை பேச விடாமல் தானே பேசிகொண்டிருந்தவன்
“ஆமா உங்களை ட்ராப் பண்ண சொல்லட்டுமா “என அவளிடம் கேட்டதும்…..

அவள் எதுவும் பேசாமல் ….வெளியே செல்ல ……

ஹப்ப்பா …என தன்னை அறியமால் பெருமூச்சு விட்டு கொண்டே தனது இருக்கையில் தொப்பென்று அமர்ந்தான் அர்ஜுன்.

இதை எல்லாம் பார்த்து கொண்டிருந்த அகில்” என்னடா நடக்குது இங்க “எனக் கேட்க …

“டேய் நீ இங்க தான் இருக்கியா” ….. என விழித்தவன்….

“சரி…சரி…வா வா …அம்மா உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க.”…. என  பேச்சை மாற்றினான்.

“என்னடா விஷேசம் இன்னைக்கு” என கேட்டான் அகில்.

“நம்ம அபி வந்திருக்கால …அதான் “என கூறிகொண்டே அவனை இழுத்து சென்றான் அர்ஜுன்.

அபி என்ற வார்த்தையை கேட்டதும் அகில் முகத்தில் ஒரு மாற்றம்…..அது சந்தோசமா…வருத்தமா அவனுக்கே தெரியவில்லை ….அர்ஜுனும் கவனிக்க வில்லை.

“இல்ல அர்ஜுன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு…..நான் இன்னொரு நாளைக்கு வரேன்” என கூறிவிட்டு அவன் கையை உதறி விட்டு மீண்டும் தன் அறையை நோக்கி நடந்தான் அகில்.

“மனம்  நிலையில்லாமல் தவிக்க ,மூளைக்கும் மனதிற்கும் நடுவில் நடந்த போராட்டத்தில் அவன் தத்தளிக்க, எண்ணங்களின் ஓட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் நிலை தடுமாறி நின்றான் அகில்.

மனதில் தோன்றும் எல்லா எண்ணங்களுக்கும்

உருவம் கிடைத்து விட்டால்

வாழ்க்கை பயணத்தில் சுவாரசியமே இருக்காது

இதுவும் கடந்து போகும் என்னும் எண்ணமே

இன்றிய மனித வாழ்விர்க்கு அச்சாணி

வாழ்வின் நேரத்தை தன வசமாக்கி கொண்டால்

எல்லா நாளும் இனிய நாளே ………….

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா —3

  • அத்தியாயம் 3
  • புதிதாதக பதிவியேற்ற இருவரும் தமது கடமைகளை உணர்ந்து வேலைகளை சரிபார்த்து கொண்டிருக்க ,சார் ….உள்ளே வரலாம்மா என கேட்டுகொண்டே கோபாலன் உள்ளே வந்தார்.

    சார் இந்த வருடம் இன்கம் டாக்ஸ் நாம் கட்ட வேண்டிய தொகை  ஆடிட்டர் ஆபிஸில் இருந்து அனுபிருக்காங்க” ….என ஒரு பைலை அவரிடம் நீட்ட

    டேபிளில் வைத்து விட்டு செல்லுங்கள் சார்.நான் பார்த்து விட்டு சொல்கிறேன்என அர்ஜுன் கூற

    சார் அடுத்தவாரம்  தான் கடைசி டாக்ஸ் கட்றதுக்கு ……அதனால் நீங்க பார்த்துட்டு சொன்னிங்கன்னாஎன கோபாலன் தயங்கவும் 

    கண்டிப்பா சார்……நாளைக்கு உங்களுக்கு செக் கொடுத்தறேன் போதுங்களாஎன சிரித்த படி அர்ஜுன் கூற

    ஓகே சார் என தலையாட்டிவிட்டு கோபாலன் அறையை விட்டு வெளியே வந்தார்.

    தன் வேலையை முடித்து விட்டு அந்த டாக்ஸ் பைலை எடுத்து பார்த்தவனின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது .உடனே அகிலனிற்கு போன் செய்து அவனை தனது அறைக்கு வர சொல்லிவிட்டு………..அக்கௌன்ட் செக்சனுக்கு போன் பண்ணி தனக்கு வேண்டிய சில விபரங்களை தந்து கணினிக்கு அனுப்ப சொன்னான்.

  • அகிலன் வந்ததும் இருவரும் அதை பற்றி விவாதித்தனர்.பின்னர் அகிலன் மறுபடியும் அந்த பைலை சரிபார்தவன்

    ஆமாம் அர்ஜுன் ….எனக்கும் நம்ம இன்னும் கொஞ்சம் வரியை குறைக்கலாம்னு தோனுது. INCOME TAX DEDICTIONக்கு நிறைய சலுகைகள் இருக்கு .அதை யாரும் சரியாய் பயன்படுத்தறது இல்ல.நம்ம அதை சரியா பயன்படுத்திக்கணும் .சில விஷ்யங்கள மாமா தனது பர்சனல் அக்கௌன்ட் மூலம்மா செஞ்சிருக்கார்.அதை நம்ம கம்பெனி அக்கௌன்ட் மாத்துனா நமக்கு இன்னும் பெனிபிட் ஜாஸ்தி.”என்றான்.

  • நானும் அதுதான் யோசிக்கிறேன் அகில் ….எனக்கும் வீவிங் பாக்டரி நாமே சொந்தமா ஆரம்பிக்கணும்னு ஆசை . இதை எல்லாம் பார்த்தா பேசாம்ம லோன் போட்டு அந்த தொழிலை ஆரம்பிச்சா இன்னும் டாக்ஸ் குறைய சான்ஸ் இருக்கு என்ன சொல்றஎன சொல்லிகொண்டே அவன் முகத்தை பார்த்தவன் ,

    சூப்பர் யோசனை அர்ஜுன்……கண்டிப்பா பண்ணலாம்…… .ஆனா இது எல்லாம் ஆடிட்டர்கிட்ட கன்செல்ட் பண்ணனும் . அதுக்கு முன்னாடி நீ மாமாகிட்ட இத பத்தி பேசு” …….

    சரிடா….நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன் ….சரி…சரி கிளம்பு …சாப்பிட போகலாம்என அர்ஜுன் புறப்பட …

    நானா”……. என இழுத்த அகில்…இங்க கேண்டின்ல எனக்கு பிடிச்ச பிரியாணிஎன சொல்ல ..

    அவனை முறைத்த அர்ஜுன்…..டேய் உன்னால நான் தினமும் எங்க அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கேன். வந்த அன்னைக்கு வீட்டுக்கு வந்த …அப்புறம் எட்டியே பார்க்கல…..நீ இன்னைக்கு வர …… உன் பாசக்கார அத்தைக்கு சர்ப்ரைசா இருக்கட்டும்….வாடாஎன அவனை இழுத்து சென்றான் அர்ஜுன்.

    வீட்டிற்க்கு வந்ததும் அகிலனை பார்த்த மஞ்சு மிகவும் சந்தோசப்பட்டாள் .உடனே ஒரு இனிப்பு செய்து உணவின் போது அதையும் சேர்த்து பரிமாறினாள் .

    அத்தை இந்த இனிப்பு சூப்பர்”…….. என அகில் பாராட்டிகொண்டே என்ன சொல்றிங்க மாமா என பத்மநாபனை பார்க்க

    என் பொண்டாட்டி 15 நிமிடத்தில் இனிப்பு செய்வாள் என்பது அவளுடன் 25 வருடம் குடும்பம் நடத்திய எனக்கே…. இப்பதான் தெரியுது .இவ்வளவு நாள்ல நீ இப்படி செஞ்சதே இல்லையே மஞ்சும்மாஎன பத்மநாபன் கிண்டலாக கேட்க

    நான் செஞ்சுட்கிட்டு தான் இருக்கேன்.உங்களுக்கு தெரியல …நான் என்ன பண்றதுஎன என வேகமாக கூறியவள் …அகில் இன்னும் கொஞ்சம் வைச்சுகப்பாஎன அவனுக்கு அதிகம் வைத்தாள்.

    உடனே பத்மநாபன் …..ஆனாலும் அர்ஜுன் இந்த பெண்கள் இருக்காங்களே…… தனது பிறந்த வீட்டு ஆளுங்க வந்துட்ட எப்படி எல்லாம் மாறி போறாங்க பாரு……தடாலடி விருந்து ….உடனடி ஸ்வீட் கலக்கறாங்க….அகில் இதுகாகவாது நீ அடிகடி வீட்டிற்க்கு வந்து போஎன கலாய்க்க…

    உடனே மஞ்சு நீங்க கொஞ்சம் சும்மா இருங்க…..எப்ப பார்த்தாலும் என்ன கிண்டல் பண்ணிகிட்டேஎன வெட்கப்பட…… அந்த இடம் சந்தோஷத்தில் நிறைந்தது .

    உணவு வேலை முடிந்ததும் மூவரும் வரவேற்ப்பு அறையில் வந்த அமர்ந்தனர்.அர்ஜுன் இன்கம் டாக்ஸ் விபரங்களை சொல்ல உடனே

    பத்மநாபன் அர்ஜுன் இது சம்பந்தமா நீ எது செஞ்சாலும் நம்ப ஆடிட்டர் கிட்ட கேட்டுட்டு செய் .அவருக்கு அனுபவம் ஜாஸ்திஎன கூறினார் .

    அர்ஜுனும் உடனே அவருக்கு தொலைபேசியில் அழைத்து விபரத்தை கூற தான் நாளை நேரில் வருவதாக கூறினார் ஆடிட்டர் .

இன்று ஜப்பானில் இருந்து buyers வந்து இருப்பதால் அர்ஜுன் நேரமே கிளம்பி அலுவலகம் சென்று விட்டான் .பத்மநாபன் எழுந்து வாக்கிங் முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைந்தவர்…. எங்கே அர்ஜுன் காணோம் என்று கேட்க ஒரு முக்கியமான மீட்டிங் இருக்குனு நேரமே கிளம்பி போய்விட்டான்என சுரத்தே இல்லாமல் மஞ்சுளா பதில் சொல்ல பத்மநாபன் முகம் யோசனையில் ஆழ்ந்தது .

ருத்ரா அலுவலகம் வருவதற்கு முன்பே வந்திருந்த ராமநாதன் அங்க இருக்கும் பைல்களை சரிபார்த்து கொண்டிருந்தார்.

ஆருத்ரா உள்ளே நுழைந்த உடன் குட் மார்னிங் சார் கொஞ்சம் லேட் ஆகிடுச்சுஎன கூற
இல்ல ருத்ரா நீ சரியான நேரத்திற்குதான் வந்து இருக்கிறாய் ,நான் தான் நேரமே வந்துவிட்டேன் என சிரித்து கொண்டேஅவர் கூற

நீங்க ஓய்வு எடுக்க வேண்டியதுதான சார் ….நான் தான் ஆபிஸ் பார்த்துகிறேனு சொன்னேன்லஎன உரிமையோடு கோபமாக கேட்க

எனக்கு இப்போ பராவாயில்லை.நீ இருக்கும்போது எனக்கென்ன கவலை”… என சிரித்து கொண்டே சொன்னவர்

இன்னைக்கு AP இன்டர்நேஷனல்க்கு போகணும்.புது MD அர்ஜுன் வர சொல்லிருக்கார் .ஏதோ விளக்கம் கேட்கனுமாம் .அது தான் எல்லாம் தயார் செய்துட்டு இருக்கேன்” .

ஏன் சார் என்ன ஆச்சு……..அதுதான் எல்லாம் முடிச்சு இவ்ளோ டாக்ஸ் கட்டணும்னு சொல்லிட்டமே …அப்புறம் என்னஎன வேகமாக கேட்க

ஆருத்ரா முதலில் கோபத்தை குறை ….இப்ப என்ன நடந்திருச்சு ….புது MD…அதனால நம்ம கிட்ட பேசணும்னு கூப்பிட்டு இருக்கலாம் .முதலில் அங்கு போய் பார்த்தால் தான் தெரியும்” .

சரி சரி நான் கிளம்புகிறேன் .சீக்கிரம் பார்த்து விட்டு வீட்டிற்க்கு செல்கிறேன் .அப்புறம் உன் ஆன்ட்டி அவ்ளோதான்என சிரித்துகொண்டே கிளம்ப

சார் நான் வேண்டுமானால் உங்களுடன் வரட்டுமா ……நீங்கள் இந்த நிலையில் தனியாக செல்ல வேண்டாம் .

மேலும் அந்த நிறுவனத்தின் கணக்குகளை எல்லாம் நான் தான் சரிபார்த்தேன் .அதனால் நானும் வருகிறேன்என கிளம்பி அவருடன் சென்றாள் .

அங்கு BUYERS மீட்டிங்கில் அர்ஜுன் இருந்தான். யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியதால் அவன் தொடர்பான அனைத்து தகவல்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.

அதனால் mr.ராமநாதன் வந்த தகவலும் அவனுக்கு செல்லவில்லை .சிறிது நேரம் காத்திருந்த ராமநாதன்….

ஆருத்ரா அர்ஜுன் ஏதோ முக்கியமான மீட்டிங்க்ல இருக்காறாம்.நேரமாகிறது நாம் கிளம்பலாமாஎனக் கேட்க

ஆருத்ரா சார் நீங்க கிளம்புங்க …நான் வேண்டுமானால் அவர்கள் வந்ததும் இந்த விபரங்களை கொடுத்து விட்டு வருகிறேன்என கூறினாள்.

ராமநாதனும் சரிம்மா முடிச்சுட்டு எனக்கு தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு இங்கு இருந்து கிளம்புஎன சொல்லி விட்டு கிளம்பினார்.

1மணி நேரம் மீட்டிங் 21/2 மணி நேரமாக இழுக்க 1௦ மணிக்கு வந்த ஆருத்ரா 12.3௦ மணி வரை வரவேற்பறையில் அமர்ந்திருக்க……
..

இன்னும் என்ன பண்றாங்க என நினைத்தவள் அர்ஜுன் ஞாபகம் நினைவில் வரஇவன் போன வாரம் தான் பொறுப்பு ஏத்துகிட்டான் .அதுக்குள்ளே இவ்ளோ சீன போடறான் ……

ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசறதுன்னு தெரியலை…இவன் மீட்டிங்க்ல என்ன பேசபோறான்….ஹா ஹா ஹா இவன் எங்க பேச போறான்……. .டீ ,வடை சாப்பிட்டு அவங்க அப்பா பேசினார்ன அவர் வாயை வேடிக்கை பார்த்து கொண்டிருப்பான்என மனதில் அவனை கரித்துகொட்டி கொண்டிருந்தாள்.

மனம் ஒருவரை நினைக்க ஆரம்பித்து விட்டால் அன்பைவிட அவர்கள் மீது கோபம் தான் அதிகம் வரும் என்று சொல்வார்கள் …அது ஆருத்ரா விஷியத்தில் உண்மையோ…அவளுக்கு வரும் கோபத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது …….பொறுத்திருந்து பார்ப்போம்.

மீட்டிங் முடிந்து அவர்களை அனுப்பி விட்டு மிகவும் களைப்பாக தனது அறைக்கு வந்தவன் அப்படியே இருகையால் சாய்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தவன் பின்னர் தனது உதவியாளர் கார்த்திக்கை கூப்பிட்டு….. நான் வீட்டிற்க்கு செல்கிறேன் …கையெழுத்து இடுவதை மதியம் பார்த்து கொள்கிறேன்என கிளம்ப

உடனே கார்த்திக் சார் நீங்க வர சொன்னதா ஆடிட்டர் வந்து இருந்தார் என கூற ……

அட ஆமா சொல்லிருந்தேன்” ….ஒரு போன் பண்ணிட்டு வந்திருக்கலாம் அங்கிள்…அவரை உள்ளே அமர வைத்தாயா….. என கடிந்து கொண்டேஅவசரமாக எழுந்து வெளியே சென்றவன்…… அங்கு வரவேற்பறையில் ஆருத்ராவை பார்த்ததும் அப்படியே நின்றான் .

உடனே கார்த்திக் சார்…நான் அதான் சொல்லவந்தேன்…..அவர் சென்று விட்டார்.மிஸ் ஆருத்ரா மேடம் தான் வெயிட் பண்றாங்கஎன கூற

சிறிது நேரம் யோசித்தவன் இதழில் ஒரு விஷம புன்னகையோடுஒரு 1௦ நிமிடம் கழித்து அவர்களை உள்ளே அனுப்புஎன கூறிவிட்டு இருக்கையில் சாய்ந்தான் .

கார்த்திக் ஆருத்ராவிடம் வந்து மேடம் ஒரு 1௦ நிமிடம் வெயிட் பண்ணுங்க….சார் இப்போதான் வந்தார்…நீங்கள் காத்திருப்பதை

இவ்ளோ நேரம் காத்திருந்தது கூட பெரியதாக தெரியவில்லை ….அவன் அறைக்கு வந்த பிறகும் 1௦ நிமிடம் காத்திருப்பது ஆருத்ராவிர்க்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது .

பெரிய இவன் ….மீட்டிங்க்ல இவ்ளோ நேரம் தூங்கிட்டு தானே இருந்திருப்பான்.இன்னும் என்ன ரெஸ்ட் எடுக்கிறான்”……… என புலம்பிகொண்டே ,கையில் இருக்கும் கைக்குட்டையை முறுக்கி கொண்டும் அவன் அறை கதவையும் .வெளி வாயிலின் கதவையும் அடிகடி பார்த்துகொண்டுர்ந்தவளை உள்ளே இருந்து சிறிது நேரம் ரசித்தவன்

இன்னும் தாமதித்தால் ஒன்று உள்ளே வந்து நமக்கு அடி விழும்….. ,இல்லை கிளம்பி போய்கொண்டே இருப்பாள் என முடிவு செய்தவன் தானே வெளியில் வந்து

ஹாய் ஆருத்ரா …மன்னிக்கவும் ….ஒரு முக்கியமான மீட்டிங் இருந்ததால் வர தாமதமாகிவிட்டது .அங்கிள் போன் செய்து விட்டு வந்து இருக்கலாம்என அவனே நேரில் வந்து அழைக்க

ஒரு நிமிடம் இதை எதிர்பார்க்கதவள் …திகைத்து விட்டு..”.வணக்கம் சார்..பரவாயில்லை சார்….இனி வரும்போது போன் பண்ணிவிட்டு வருகிறோம்என அமர்த்தலாக கூற

உதட்டை பிதுக்கி தோலை குளுக்கியவன் ….தனது இருக்கையில் அமர்ந்தான்.அவள் எதிரில் அமர்ந்ததும்

எப்படி இருக்கீங்க ….முதலில் என்ன சாப்பிடரிங்கஎன கேட்க
,அவள் ஏதும் வேண்டாம் என்று சொல்ல …

ஆமாமா… நீங்க தான் எங்களோட சாப்டமாடிங்கலேஎன கிண்டலாக கூறிகொண்டே

ஆனால் எனக்கு பசிக்கிறது .தொலைபேசி எடுத்து கார்த்திக் எனக்கு பிஸ்கட் டீ அப்புறம் ஒரு பர்க்கர் அனுப்பி வை என்று சொன்னவன்,

அவள் பக்கம் திரும்பிநான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் எடுத்து வந்திருகின்களாஎனக்கேட்க

அவனிடம் அந்த பைலை கொடுத்தாள் ஆருத்ரா .அதை வாங்கி பார்த்தவன் சிறிது நேரம் யோசனை செய்து விட்டு

சில சந்தேகங்களை அவளிடம் கேட்க அவள் அதற்க்கு சொன்ன பதில்களில் அவன் அசந்து போனான் .பரவாயில்லை முன்கோபத்தோடு மூளையும் கொஞ்சம் இருக்கிறது என மனதில நினைத்தவன் அதை அப்படியே தவறி சொல்லிவிட…….

அவனை நிமிர்ந்து பார்த்தவள் …அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்துஎன்னை பற்றிய ஆராய்ச்சி உங்களுக்கு தேவை இல்லாததது .நான் அலுவலக வேலையாக வந்து இருப்பதால் அமைதியாக இருக்கிறேன் …சீண்டி விடாதீர்கள்என கர்ஜிக்க

ஆகா அர்ஜுன் சும்மா இருந்தவளை ஏன்டா சொரிஞ்சு விட்றஎன மனதிற்குள் சொல்லி கொண்டு

இங்க பாருங்க மிஸ் ஆருத்ரா நான் இங்கு புதிதாக இருப்பதால் நிறைய விஷயங்கள் உங்களிடம் கேட்க வேண்டும்.அதற்க்கு நீங்களும் முறையாக பதில் சொல்ல வேண்டும்.ஏனெனில் எங்கள் நிறுவன கணக்குகள் அனைத்தும் உங்களிடம் தான் உள்ளது.உங்களால் முடிந்தால் சொல்லுங்கள் ….இல்லையென்றால் அங்கிள் வர சொல்லுங்கள் நான் பேசிகொள்கிறேன்என கொஞ்சம் அவன் குரலை உயர்த்த

அதில் உள்ள உண்மை புரிய …ஆருத்ரா மிகவும் அமைதியாககேளுங்கள் சார் சொல்கிறேன்என கூற

அப்பா…..சாமி…… தப்பிச்சோம்….கொஞ்சம் குரலை உயர்த்துனா அமைதியாகிடறா….இப்படிதான் இவள இனி டீல் பண்ணவேண்டும் என நினைத்தவன்

அதற்குள் அவன் சொன்ன பலகாரங்கள் வந்து விட அதை அங்கு வைத்து விட்டு பேச்சை தொடர

சார் நீங்க சாப்பிடுங்க ….பார்க்கும்போதே ரொம்ப டையர்டா தெரியறிங்க என அவள் கூற
இல்லை ஆருத்ரா ….உங்களை விட்டு நான் எப்படி………என தயங்குவது போல் அவன் நடிக்க
பரவயில்லை சார்….நீங்க சாப்பிடுங்க ….நான் வெயிட் பண்றேன் என்று சொல்ல …
இல்ல ஆருத்ரா ….எனக்கு யாராது பரிமாறுனாதான் சாப்பிடுவேன்.எல்லாரும் சாப்பிட போய்ட்டாங்க…வரட்டும் பார்க்கலாம்என கூற

நான் பரிமாறுகிறேன் சார்…என் எழுந்தவள் அங்கு இருக்கும் தட்டில் அனைத்தையும் வைத்து அவனை அழைக்க

இல்லை நீங்களும் என்னுடன் சேர்ந்து சாப்பிடுங்க ….கொஞ்சம் எடுத்துக்குங்கஎன அவளுக்கு ஒரு பகுதியை கொடுக்க….அவள் அதை வாங்கி கொள்ள

படபடபட்டாசு எப்படி இப்படி வண்ண மத்தாப்பாக மாறியது!….. உண்மையா என அர்ஜுன் ஒரு நிமிடம் தன்னை கிள்ளி பார்த்தவன்

சண்டைகோழியாய் சீறி கொண்டு நின்றவளை……இன்று சாப்பாடு பரிமாறும் அளவிற்கு கொண்டு சென்று விட்டாயே ……நீ கில்லாடி அர்ஜுனா என மனதுக்குள் தன்னை புகழ்ந்து கொண்டவன்………..பின் மெதுவாக அவளுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சிக்கும்…….. அப்போதே அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கினான்…..

ஆருத்ரா புதிதாக ஒரு தொழில் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன் .அதற்க்கு உங்களுடிய ஒத்துழைப்பு வேணும் .இன்று அங்கிளை வர சொன்னதும் அதுக்குதான்.பிறகு தனி கணக்கில் உள்ள ஒரு சில செலவுகளை நிறுவன கணக்கிற்கு கொண்டுவர வேண்டும்.இதை பற்றி விரிவாகபேச வேண்டும் …… நாளை பேசலாமாஉங்களால் வர முடியுமாஎன அவன் கேட்க ..

கண்டிப்பாக சார்…நானே வருகிறேன்.உங்க கணக்குகள் எல்லாம் நான் தான் பார்கிறேன்.உங்களுக்கு என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்கள்என அவள் கூற

ஹப்ப்பா………. எப்படியே நாளையும் தேவியின் தரிசனம் உறுதியாகி விட்ட சந்தோசத்தில் சரி ஆருத்ரா…..நீங்கள் கிளம்புங்கள் நேரமாகிறதுஎன கூறியவன் …
ஆமாம் நீங்கள் எப்படி போவீர்கள் …அங்கிள் சென்றுவிட்டரே என கேட்க…இல்ல ஆட்டோவில் சென்று விடுகிறேன்என கூறி வேகமாக வெளியேறினாள்.

இன்று இது போதும் ….இனி நாளை பார்த்து கொள்ளலாம் என மனதில் நினைத்துகொண்டே வீட்டிற்கு கிளம்பினான் அர்ஜுன் .

விடிகாலை பொழுது வெண்ணிலவு மறைந்து ஆதவன் வெளியில் வர அழைப்பு மணி ஓசை கேட்டு வாசல் கதவை திறந்த மஞ்சுளா அப்படியே அதிர்ச்சியாகி நின்றாள்!.

என்ன மஞ்சு டார்லிங் எப்படி இருக்கஎன குதுகலமான குரல் எதிர்புறம் இருந்து வர

சிறிது நேரம் திகைத்து நின்றவள்…….. அபி ….அபிம்மா………. என மஞ்சு கண்ணீர் மல்க ஓடி அணைத்து கொண்டாள் தன் மகளை ….

சிறிது நேரம் அப்படியே இருந்தவள்…பின்னர் மகளை விடுவித்து …”என்னடி இது சொல்லாம வந்திருக்க ….நீ வந்தது அப்பாவுக்கு தெரியுமா ?……யார் கூட வந்த ….யாரும் எங்கிட்ட சொல்லவே இல்லஎன படபடவென்று பேசிகொண்டிருந்தவளை..

அட மஞ்சு …நிறுத்து…………நிறுத்து ….ஒரு பொண்ணு நான்கு வருஷம் கழிச்சு வந்திருக்கா…உடனே நீ என்ன பண்ணனும் ….

ஏய் ….ராக்காயி ..மூக்காயி …பாவாயி…என் பொண்ணு லண்டன்ல இருந்து வந்திட்டா …எல்லாரும் ஓடி வாங்கடியோ கூப்பிடுவேணு பார்த்தா …இப்படி கண்ணீர் விட்டு டயலாக் பேசிகிட்டு இருக்க ….என்னம்மா நீஎன அவள் சலித்து கொள்ள ….

ஏய் இன்னும் உனக்கு இந்த வாய்கொழுப்பு குறையல ….உள்ள வா…வா..என அவளை உள்ளே இழுத்து சென்ற மஞ்சு திடீர்ரென அவள் புறம் திரும்பி… ஆமா நீ யார் கூட வந்த?…. எனக் கேட்க

அதான் டார்லிங் தெரியாம ஒரு தடவை உனக்கு தாலிகட்டிட்டு காலம் பூரா ஆயுள்தண்டனை அனுபவிக்கிறாரே அவரோடு தான்என சிரித்து கொண்டே சொன்னவள் ….

பின்புறம் திரும்பி……. கூடவேத்தானே வந்தார்……..எங்கே போனார்…..என் தந்தையே …மனிதர்குல மாணிக்கமே.... நீங்கள் எங்கே போனீர்கள் ….இந்த மஞ்சுவிற்கு பயந்து பின்தங்கி விட்டிர்களா…..இந்த மஞ்சுவை பஞ்சு போல் கசக்கி ஜூஸ் பிழிந்து விடலாம்…. ………..கவலை வேண்டாம் தந்தையே ……உங்கள் தளபதி நான் இருக்கிறேன்…. …துணிந்து வெளியே வாருங்கள்” …… என வீர வசனம் பேசிகொண்டிருந்தவளை …

முதுகில் செல்லமாக தட்டி …வந்த உடனே என்னை பலி ஆடு ஆக்கிட்டியா……..நீ வருவதை அவளிடம் சொல்லாமல் இருந்ததற்கே என் மேல் கோபத்தில் இருக்கிறாள் …நீ வேறு அவளிடம் எதையாவது சொல்லி அவளை மேலும் ஏத்தி விடாதே தாயேஎன பத்மநாபன் அவளிடம் கெஞ்சி கேட்க …

இல்ல பத்து (மகள் அப்பாவை அழைக்கும் செல்ல பெயர் …என்ன கொடுமை) உனக்கு சப்போர்ட் பண்ணலாம்னுதான் என அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு…….நீ சொல்லி கொடுத்த மாதிரிதான சொன்னேன்……நம்ம கார்ல வரும்போது கூட சொல்லி காட்னானே…நீ கூட சத்தம் கொஞ்சம் ஜாஸ்தி கொடுன்னு சொன்னியே” …..எனக் கேட்க

அய்யோ மஞ்சு…நான் எதுவும் சொல்லவில்லை……அபி நான் உன் அப்பா …என்ன விட்டுடுஎன அவர் கெஞ்ச……..

பத்மநாபனை முறைத்து விட்டு உங்கள அப்புறம் கவனிச்சுகிறேன்”….என அபியின் பக்கம் திரும்பிய மஞ்சுஏண்டி வந்ததுல இருந்து இந்த பையை தூக்கிட்டே இருக்க …கீழே வைக்க மாட்டியா …என பையை வாங்கியவள்

இங்கே உட்கார்…..எப்படி இருக்க…என்னடி இப்படி இளைச்சு போய்ட்ட,…..நான் கொடுத்த தேங்காய் எண்ணெய் யூஸ் பண்ணியா இல்லியா …முடி எல்லாம் இப்படி காஞ்சு போய் இருக்குது……என தன மகளின் தலையை வாஞ்சையுடன் தடவியபடி கேட்ட மஞ்சுளாவின் முகத்தில் தாய்மையின் பாசம் தெரிய

மஞ்சும்மா அவ இப்பதான வந்திருக்கா…கொஞ்சம் அவளை ரெஸ்ட் எடுக்க விடு….இனி இங்க தான் இருக்க போறா ……மெதுவா கேட்டுக்கோ எல்லாம்” …அபிம்மா நீ உன் அறைக்கு போய் நல்ல ரெஸ்ட் எடு என பத்மநாபன் சொல்ல

என் செல்ல அப்பானா அப்பாதான்.மஞ்சு கொஞ்சம் வெயிட் பண்ணு.2 மணிநேரத்துல வந்துவிடுகிறேன்.அதுக்கு அப்புறம் நம்ம கச்சேரிய வச்சுக்கலாம்என முகத்தை சுளித்து அழகு காட்டி விட்டு சென்றாள் பத்மநாபன் மஞ்சுளாவின் கடைக்குட்டி அபி என்கிற அபிமித்ரா .

முழுநிலவு போல் செதுக்கி வைத்த முகம்,கவி பாடும் கண்கள் .மாங்கனி நிறம்,உயரம் மட்டும் சற்று குறைவு அவள் தாயை போல்………….. அறுந்த வாலு…குறும்பு தேளு….கொட்டும் நீர் வீழ்ச்சி ….. அவள் இருக்கும் இடத்தில சந்தோசமும் கொண்டாட்டமும் நிரந்தர வாசம் செய்யும் .மொத்தத்துல நம்மள மாதிரிப்பா(okva friends )சரி சரி விட்ருங்க …விட்ருங்க

முக்கியமான மீட்டிங் இருப்பதால் நேரமே கிளம்பி கீழே வந்த அர்ஜுன் அங்க bag எல்லாம் இருப்பதை பார்த்து

அம்மா என்ன பெட்டி எல்லாம் இங்க இருக்குஎன கேட்டு கொண்டே சமையல் அறைக்கு வந்தான்.

அங்கு மஞ்சு சுட சுட பால்கோவா செய்து கொண்டிருக்க …என்னமா விஷேசம் ……

பெட்டி எல்லாம் வெளியே இருக்கு…இங்க பால்கோவா ….ஆஹா நம்ம குட்டி சாத்தான் ஊர்ல இருந்து வந்துட்டாளாஎன ஆவலாக கேட்க

ஆமா அர்ஜுன்…காலைலதான் வந்தா …வீட்ட ரண்டுபண்ணிட்டு இப்பதான் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்னு போயிருக்கா”…..என சிரித்து கொண்டே சொல்ல

நான் போய் பார்த்துட்டு வந்தறேன்மா எனக் கூறிவிட்டு வேகமாக நடந்தவன்…… …..சிறிது நேரம் யோசித்து பின் மறுபடியும் சமயலறைக்கு வந்தவன்

 “ அம்மா அந்த தண்ணீர் ஜாடி எடுங்கஎன சிரித்து கொண்டே கேட்க

எதுக்குடா…எனகேட்டு கொண்டே அதை மஞ்சு எடுத்து கொடுக்க
….
எத்தன டைம் என்மேல தண்ணீர் ஊத்திருப்பா….இன்னைக்கு மாட்னா ….

என சொல்லிகொண்டே மாடியில் அவளது அறைக்கு சென்று கதவை திறக்க தானாக திறந்து கொண்டது .இன்னைக்கு மாட்ன.. நீஎன சொல்லிகொண்டே அவள் படுக்கைக்கு அருகில் சென்றவன்

அய்யோ………. அம்மா…………… அபி…….. என்னாச்சு என கத்திகொண்டே அப்படியே அந்த ஜாடியை கீழே போட்டு விட்டு அவளின் அருகில் அமர்ந்தவன்…….

படுக்கையில் வாயிலில் இருந்து நுரை தள்ள கண்கள் மூடி படித்திருந்த தங்கையை பார்த்ததும் அவன் துடித்து போய்விட்டான்

.அபிம்மா …அபிம்மா என கூறிகொண்டே அவன் அலைபேசியில் டாக்டரை அழைக்க

ஹெலோ டாக்டர் நான் அர்ஜுன்என அவன் முடிக்கும் முன்பே

என்னது டாக்டரா …என அலறி அடித்து கொண்டு எழுந்தவள் டேய் ஒட்டகம்……….. எனக்கு டாக்டர்…….. ஊசினா…… பயம்னு…….. உனக்கு தெரியாதாஎன கத்திகொண்டே

கதவை நோக்கி ஓடியவள் அங்க ஜாடியில் இருந்தத அந்த தண்ணீரை எடுத்து அவன் மேல ஊற்றி விட்டு என்மேலய தண்ணீ ஊத்தற நீஎன பழிப்பு காட்டி கொண்டே…..

அம்மா இந்த அர்ஜுன் என்ன அடிக்க வரான் என கத்திகொண்டே கீழே ஓடி அம்மாவின் பின்னால் நின்று கொண்டாள் .

அதுவரை பிரம்மை பிடித்தது போல நின்று இருந்தவன் பின்னர் சுதாரித்துஏய் குட்டி சாத்தான் என கத்திகொண்டே அங்கு வந்தவன் அம்மா இவ பண்ண வேலைய பாரும்மா என காட்ட

மஞ்சு சிரித்து கொண்டே…என்னடா இது……நீ என்னோமோ அவ மேல தண்ணீ ஊத்றேய்னு எடுத்துட்டு போன…இப்போ நீ தொப்பைய நலஞ்சுவந்து நிக்கிறஎன கேட்க

எல்லாம் இவளால என அவளை முறைத்தவன் …அவள் முகம் பழிப்பு காட்டி சுழித்ததும்…அதில் மனம் மயங்கி அவள் அருகில் சென்று அவள் தலையை தடவி கொண்டே

எப்டிடா இருக்க குட்டிமா….உன்ன விட்டு வந்து 6 மாசம் ஆச்சு …உன்ன ரொம்ப மிஸ் பண்ணேண்டா…என பாசத்துடன் பேச

அன்னையை விட்டு அண்ணன் மார்பில் சாய்ந்தவள்……. நானுதான் அர்ஜுன்.அங்க ரொம்ப போர் அடிச்சுது என தங்கை உருக…… அங்க ஒரு பாசமலர் லைவ் ஷோ ஓடிகொண்டிருக்க….

என்ன நடக்குது இங்க என கேட்டுகொண்டே வந்த பத்மநாபன் அர்ஜுனை பார்த்ததும்…….

என்ன அர்ஜுன் ….இப்படி தொப்பலா நனைஞ்சு வந்து நிக்கிற…வீட்டுக்குள்ளே மழை வந்துடுச்சாஎன கேட்டுகொண்டே தன் மகளை பார்த்தவர் …

சரி…சரி….இனி அடிக்கடி இப்படி புயல்,வெள்ளம்,மழைன்னு வரும்…… என்ன அபிம்மாஎன சிரித்து கொண்டே கேட்க்க

மீண்டும் பழைய நிலைக்கு வந்த அர்ஜுன் அபி உனக்கு எதாவது அறிவிருக்கா ….உன்ன பார்த்ததும் பயந்துட்டேன் ….இனிமேல் இப்படி பண்ணாதடாஎன கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான் .

அபி சிரித்து கொண்டே இல்ல அண்ணா …உன் சத்தத்தை கேட்டதும் உன்ன பார்க்க கீழே வந்தனா…அப்பத்தான் நீ அம்மாகிட்ட வீர வசனம் பேசிகிட்டு இருந்தியா ….எனக்கே தண்ணீயானு யோசிச்சு……. உடனே பேஸ்ட் எடுத்து அந்த நுரையை அப்படி செட் பண்ணேன் .

பேஸ்ட் வாசத்த வச்சு கண்டு பிடிச்சுடுவேணு நினைச்சேன்…ஆனா நீ அப்படி பண்ணாம்ம மஞ்சுவோட பையன்கிறத ப்ரூப் பண்ணிட்டஎன கண்ணடித்துகொன்டே சிரிக்க…

இல்லைடா……… நீ இப்பதான ஊர்ல இருந்து வந்திருக்க…அதுநாள் இந்த குரங்கு சேட்டை எல்லாம் பண்ணமாட்டேன்னு நினச்சேன்………. ஆனா நீ அப்படி இல்ல………..நான் பத்மநாபன் பொண்ணுதான் ப்ரூப் பண்ணிட்ட செல்லம்எனக் அர்ஜுன் சிரித்து கொண்டே சொல்ல

அர்ஜுன் அப்பாவ திட்றதா இருந்தா நேரா திட்டிடு…இப்படி குரங்குன்னு என்ன திட்ற மாதிரி அப்பாவ திட்டாதஎன அவள் அப்படியே மாத்தி சொல்ல

அர்ஜுன் என்னடா இது என பத்மநாபன் கேட்க………

ஐயோ அப்பா……… இவள பத்தி தெரியாதா…..இவ தொல்லை தாங்க முடியாமதான இங்க வந்தேன்…..யாரு இவளை வர சொன்னா…இன்னும் உனக்கு ட்ரைனிங் இருக்கேஎன கேட்க

அப்பாதான் வர சொன்னார் … நீ அவரை கேட்டுக்கோ …….என அவர் மேல் பழியை போட்டு விட்டு

என்ன மஞ்சு எவ்ளோ நேரம் பேசிட்டு இருக்கோம்…கொஞ்சம் அந்த சுடு தண்ணீ………… அதான் அந்த காபின்னு ஒரு தண்ணீ கொடுப்பியே…… அதை கொஞ்சம் கண்ல காட்றது என அபி நக்கலாக சொல்ல

திமிராடி உனக்கு….. வந்ததுல இருந்து பார்கிறேன்…..ஓவரா பேசிட்டு இருக்க நீ………. உன்ன ……… என மஞ்சு அவளை துரத்த அந்த இடம் பூக்கள் பூத்து குலுங்கும் பூங்காவனம்மாக மாறியது .

வீடு என்னும் தோட்டத்தில்

அன்பு பாசம் சந்தோசம்

என்னும் மலர்கள் பூத்து குலுங்கி

மனதிற்கு மகிழ்வை கொடுக்க

அழகான குடும்பமும் நிறைவான வாழ்க்கையும்

நிறைந்த அந்த இடத்தில்

இறைவனும் இளைப்பாற இடம் தேடி

வருவதில் வியப்பென்ன …………….