நெஞ்சம் மறப்பதில்லை — நானும் பாடல்களும்

இனிய இரவு வணக்கம் தோழமைகளே !

பரபரப்பாக நாள் முழுவதும் இயங்கி கொண்டிருந்த உடல் உறுப்புகள் ஓய்வு எடுக்கும் இந்த இனிய இரவு பொழுதில் சில நினைவுகளை அசைபோடும்போது ஒரு சுகமான இன்பம் தோன்றும். அதுபோன்ற சுகத்தை இந்த பாடலும் நமக்கு கொடுக்கும்.

இந்த பாடல் பற்றிய அதிக அறிமுகம் தேவையில்லை. அனைவரும் அறிந்தது தான் . பாடலின் முதல் வரியே அந்த பாடலுக்கு முகவுரையாக அமைந்திருக்கிறது .

சில பாடல்கள் கேட்கபிடிக்கும். சில பாடல்கள் ரசிக்க பிடிக்கும்….ஒரு சில பாடல்கள் தான் நம் உயிரின் உச்சம் வரை ஓரு சிலிர்ப்பை உண்டாக்கும். எனக்கு இந்த பாடல் அந்த வகையை சார்ந்தது.

இந்த பாடல் செல்லும் திசை எல்லாம் நம் மனதும் செல்லும். காதலியின் மனதின் ஏக்கத்தையும் , காதலின் ஆழத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் கண்ணதாசன் the great…..

அதற்கு சிகரம் வைத்தார் போல் சுசீலா அம்மாவின் குரல் வளம் , விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை, , ஸ்ரீதர் எல்லாம் LEGENDSம் இந்த பாடலில் ஒன்றாக இணைந்து ஒரு இசை அமுதத்தை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள்.

வாருங்கள் அதை நாமும் அருந்தி மகிழலாம் .

ஆஆ…அ..ஆ..
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மறப்பதில்லை
நெஞ்சம் மறப்பதில்லை

காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே வரும்
காற்றினிலும் பெரும் கனவினிலும் நான்
காண்பது உன் முகமே
நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மறப்பதில்லை

தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு தூதுமில்லை உன் தோற்றமில்லை கண்ணின்
தூக்கம் பிடிக்கவில்லை – கண்ணின்
தூக்கம் பிடிக்கவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை அது
நினைவை இழக்கவில்லை நான்
காத்திருந்தேன் உன்னைப் பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை என்
கண்களும் மூடவில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

Director Sridhar’s films never failed to entertain with beautiful songs and superb song picturisations. This is just one of the many!
YOUTUBE.COM

துள்ளி துள்ளி போகும் பெண்ணே — நானும் பாடல்களும்

ஹாய் ப்ரிண்ட்ஸ் மறுபடியும் நான் வந்துவிட்டேன்…...

எல்லாரும் எப்படி இருக்கீங்க…..

இதுவரைக்கும் நல்லா தான் போய்கிட்டு இருக்கு…இப்போ நீ வந்திட்டில …இனி அதை பத்தி யோசிக்கணும்னு உங்க மைன்ட் வாய்ஸ் கேட்குது…..

விடுங்க விடுங்க மக்கா …இதெல்லாம் நமக்கு புதுசா என்ன?
ஒரு சூப்பர் பாட்டோட வந்திருக்கேன்…..

இப்போது இருக்கும் பலர் கேட்டு அறியாத பாடல்…ஆனால் கண்டிப்பாக ரசித்து கேட்க வேண்டிய பாடல்…..

இசையின் அரிச்சுவடியை அறியாத என்னை போன்றரையும் இசையை பற்றி பேச வைய்த்த காலம் 80 s பாடல்கள்.

இந்த பாடல் 1987ல் வெளிச்சம் படத்தில் வந்த பாடல்.

பாடலின் தொடக்கத்தில் வரும்மெல்லிய புல்லாங்குழல் இசையில் ஆரம்பித்து யேசுதாசின் மயக்கும் குரலில் வைரமுத்துவின் வைர வரிகளில் என இந்த பாடல் முழுவதும் கேட்போரை மயக்கும் அனைத்து அமசங்களையும் கொண்ட புதையல் இந்த பாடல்.

அதுவும் இரவும் நேரத்தில் இந்த இசையில் நனைந்து பாருங்கள்….. மீண்டும் இதற்காகவே நாம் பிறப்பு எடுக்கலாம்.

என்னை மயக்கிய பாடல் உங்களையும் மயக்கும் என்ற நம்பிக்கையில் இதோ

புல்லாங்குழல் மயக்கும்

ஜேஸுதாஸ் குரல்குழையும் அசத்தலான பாடல்.

துள்ளித்துள்ளிப் போகும் பெண்ணே
சொல்லிக்கொண்டு போனால் என்ன
கன்னி உந்தன் பேரென்ன?
வெள்ளிக்கொலுசு போகும் திசையில்
பாவிநெஞ்சு போவதென்ன? (துள்ளித் துள்ளி)

பூமி என்னும் பெண்ணும் பொட்டுவைத்துக்கொண்டு
பச்சை ஆடைக் கட்டிப்பார்த்தாள்
ஓடைப்பெண் நாணம் கொண்டு
ஏன் வளைந்து போகிறாள்(பூமி)
பூமிப்பெண்ணுக்கும் கன்னிப்பெண்ணைப்போல்
நெஞ்சில் ஈரம் உண்டு (துள்ளித் துள்ளி)

அந்தி வெளிச்சம் முந்தி விரித்து
பந்தி இங்கு வைக்கும் நேரம்
பூச்சிந்தும் பூமி எல்லாம்
நான் வணங்கும் காதலி(அந்தி)
மண்டியிட்டு நான் முத்தம் தரவா
தென்றல் பெண்ணே வா..வா. .வா… (துள்ளித்துள்ளி)

படம்: வெளிச்சம்
பாடியவர் KJ ஜேஸுதாஸ்
இசையமைத்தவர் : மனோஜ்க்யான்

Continue reading “துள்ளி துள்ளி போகும் பெண்ணே — நானும் பாடல்களும்”

ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா —–நானும் பாடல்களும்

ஹாய் ப்ரிண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க…..

இனிய இரவு வணக்கம் 

இனிமை கொஞ்சும் இனிய இரவு .முழுநிலவின் அழகில் நம்மை மறந்து அமர்ந்திருக்க இந்த பாடல் ஒலித்தால் அப்போதைய நம் மனநிலை என்னவாக இருக்கும்….

ஹஹஹஹா நினைத்து பார்க்கும்போது மனதில் ஒரு குறுகுறுப்பு வருகிறது இல்லையா…..இது ஒரு தத்துவ பாடல் தான்….ஆனால் கேட்கும்போது ஒரு இனிமை, எதார்த்தம் நிறைந்து ஆறுதல் அறிவுரை எனபது போல இல்லாமல் மெல்லிய நீரோடை போல பாடல் செல்லும்….

நமக்கு எப்படி தேவையோ அப்படி எடுத்து கொள்ளலாம் …..

இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மனதில் கல்வெட்டாக பதித்து வைக்க வேண்டியவை…..கவியரசர் வரிகளுக்கு MSV இசை உயிராக இருக்க TMS குரல் இதய துடிப்பாக மாற கேட்கும் நமக்கோ வாழும் நொடியின் நிதர்சனத்தை சொல்லிவிட்டு போகிறது ……

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்
அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா
இதை உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டால் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

உள்ளத்தில் உள்ளது தான் உலகம் …இது அறிவிற்கு புரிகிறது…ஆனால் மனதிற்கு புரியவில்லையே…… ஆட்டுவிப்பவனும் நீயே …அரவணைப்பவனும் நீயே……உன்னால் முடிகிறது எங்களால் முடியவில்லயே கண்ணா………

ப்ரிண்ட்ஸ் நீங்களும் கேட்டு பாருங்கள்….. ஒருவேளை கண்ணனும் நீங்களும் ஒன்றாக இருக்கலாம்……

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே-ஆனால்
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே -(ஆட்டுவித்தால்)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்-அந்த
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்-இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் -(ஆட்டுவித்தால்)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்-அது
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா-இதை
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா -(ஆட்டுவித்தால்)