வாழ்ந்து பார்ப்போம் வா பெண்ணே !!!

 

 

Image result for கிராமத்து பெண்கள்

 

வாழ்ந்து பார்ப்போம் வா பெண்ணே !!!!!

 

தேவதையாய் இருந்தது போதும் பெண்ணே!

 இனி தேரோட்டி கிருஷ்ணனாய்  

நன்மை தீமை சீர்தூக்கி பார்த்து

அனைவர் நலன் அறிந்து செயல்படு.

பெண்ணுக்குள் ஆண் தேடாதே.

உனக்குள் இருக்கும் உன் சக்தியை

உணர்ந்து செயல்படு.

அறிவை ஆயுதமாக  மாற்று.

தாய்மையை கவசமாக அணிந்து கொள்.

ஆதிக்கம் செலுத்துபவர்கள் மீது

ஆத்திரம் கொள்ளாதே!

துச்சமென புறம்தள்ளி உன்

கனவை நோக்கி சென்றிடு!

பெண்ணின் குணங்களாம்

அச்சம் நாணம் ,மடம், பயிர்ப்பு .

என அளவீடு செய்வர்.

துவண்டுவிடாதே அதையும்

அணிகலன்களாக மாற்றி கொள்.

அச்சம் கொள் தீயவைகளை கண்டு

நாணம் கொள் உன் அறியாமை கண்டு

மடமை கொள் உன் தனித்தன்மையை

பிறர் தூற்றும்போது.

பயிர்ப்பு கொள் உன்  பின்னால்

புறம் பேசுபவர்களை கண்டு.

அடைமொழியில் அடைபட்டு கொள்ளாதே  

தனித்து நின்றாலும் துணிந்து நில்.

வயது கூறி வாழ்வை சுருக்கி கொள்ளாதே!

சரித்திரம் படைக்காவிடினும் நமக்கான  

வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திடுவோம்

வா  பெண்ணே !!!!!!

 

 

 

 

என்னில் நீ !!!!

 

  என்னில் நீ !!!!!!

 

என்னில் நீ PAINTING க்கான பட முடிவு

 

காட்சிபிழையா,காரண பிழையா
அறியவில்லை நானும்!
புதிராய் நுழைந்து புயலாய்
சுழற்றிவிடும் உன் நேசம்!
பனித்துளி போல் மணித்துளியாய்
மனம் கரைய!
இது விதியா ? சதியா ?
யாசகம் கேட்கவில்லை…ஆனால்
சாசனமாய் என்னில் நீ !!!!!!!

 

 

நான் நானாக வாழ !!!!!!!!!!!!!!!

நான் நானாக வாழ !!!!!!!!!!!!!

இறைவன் படைப்பில் அனைத்து

உயிர்களும் ஒன்றே அதனால்

தெய்வம் என்று சொல்லி

தெருவின் முனையில் கோயில் வைத்து

எங்களை சிலையாக்க வேண்டாம்!.

அன்பும், கருணையும், தாய்மையும்

எங்களுக்கு மட்டுமே உரியது என

உயர்த்தி பேசி எங்கள் உணர்வுகளை

கட்டிபோடவேண்டாம்.!

உச்சி முதல் பாதம் வரை

நாங்கள் அணியும் உடமைகளை  

நீங்கள் மதிப்பிட்டு எங்களை

எடை போடவேண்டாம்!

மனதில் உள்ளதை வெளிப்படையாக

வெளியில் சொன்னால் அவள்

பெண்ணியம் பேசுகிறாள்  என்றும்

 அதுவே அமைதியாக  போனால்

மண்புழுவைபோல் மழுங்கி இருக்கிறீர்களே

என எங்களின் செயல்களுக்கு நீங்கள்

முகவுரை கொடுக்க வேண்டாம்!

பெண்ணாக பிறந்த நாங்கள் அதற்கான

 பெருமிதத்தோடு இம் மண்ணில்

மகிழ்வோடு வாழ்கிறோம்!

 எங்களுக்கு தேவையில்லை உங்களின்

 கனிவுடன் கூடிய இந்தகானல் நீர் பேச்சுகள்!!!!