மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!!

திருப்பூர் நகரம் எப்போதும் போல்சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்க அதற்கு ஈடு கொடுப்பது போல் சகானா சர்வீஸ் ஸ்டேஷன்ல வேலைகள் வேகமாக நடந்து கொண்டு இருந்தது.

அதை மேற்பார்வை  பார்த்தபடி வந்த சகானா அங்கு பணியாளரிடம் வேலை வாங்கி கொண்டிருந்த ஒருவரை பார்த்து

“மணி நான் சொன்ன வேலை எல்லாம் முடிச்சாச்சா ?வாடிக்கையாளர்கிட்ட இருந்து எந்த கம்ப்ளெயின்ட் வரகூடாது. அப்புறம் நம்ம புதுசா ஆரம்பிச்ச உன்னால் முடியும் பெண்ணே பயிற்சி பட்டறை எப்படி போய்கிட்டு இருக்கு ?எத்தனை பேர் பயிற்சிக்கு சேர்ந்து இருக்காங்க ? என கேட்டு கொண்டு இருக்கும்போதே

“மேடம் வேலை எல்லாம் சரியா தான் போய்கிட்டு  இருக்கு. மத்தது சபரீஷ் சார்க்குதான் தெரியும்” என்றார்.

“சபரீஷ் எங்க?” என கேட்க

“இன்னும் வரலை மேடம்” என்றார்.

“அவர் வரலைனா நீங்க பார்க்க கூடாதா ? என்ன பொறுப்பில்லாம பதில் சொல்றிங்க” என கோபமாக கேட்க

“பார்த்து பார்த்து கொஞ்சம் மூச்சு விட்டு பேசு. இப்படி வரிசையா கேள்வி கேட்டா அவர் எப்படி பதில் சொல்வார்” என்றபடி அங்கு வந்தான் சபரீஷ்.

“வா சபரீஷ் .இதெல்லாம் நீ கேட்டு இருக்கணும் .நான் கேட்டுகிட்டு இருக்கேன்” என அவன் மேல் பாய

“எதுக்கு இப்போ இவ்ளோ டென்ஷன் .வேலை எல்லாம் சரியாதான் போய்கிட்டு இருக்கு. நான் நம்ம மாஸ் கார் டீலர் கிட்ட பேச போயிருந்தேன் .அதான் வர கொஞ்சம் தாமதம்” என விளக்கம் சொன்னான்.

“ஓ ஆமாம் போன வாரம் பேசிகிட்டு இருந்தோம் இல்லை. நீ பேசிட்டியா ..அவங்க என்ன சொன்னாங்க? ..ஓகே சொல்லிட்டாங்களா….”

“எல்லாம் ஓகே தான் என்றவன் ஆனா பேமென்ட் விஷயம் தான்” என இழுத்தவன்

“சரி மணி நீங்க போய் உங்க வேலை பாருங்க என்றவள் வா உள்ள போய் பேசலாம்” என தனது அலுவலக அறைக்கு சென்றாள்.

“ம்ம் இப்போ சொல்லு என்ன சொன்னாங்க”….

“அவங்க நாற்பது பெர்சென்ட் கேட்கிறாங்க” என்றான்.

“என்னது நாற்பதா”… என்றவள் “அதெல்லாம் முடியாது. இருபது பேசி முடிங்க” என்றாள். “எனது இலாபத்தில் இருந்து ஒரு பைசா கூட விட்டு கொடுக்க மாட்டேன்” என  சொல்ல  

“கொஞ்சோம் யோசிச்சு பதில் சொல்லாலாம் சகானா” என்றான்.

“இதில் யோசிக்க என்ன இருக்கு.எனக்கு பயன் இல்லாத எந்த விஷியமும் தேவையில்லை” என முடிவாக சொல்ல

பதில் சொல்லாமல் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன்

அவள் என்ன…? என கேட்க

“சரி உன் முடிவு தான்” என்றான்.

“அப்புறம் அந்த பயிற்சி பட்டறை இப்போ அவசியம் தானா?” என்றபடி அவள் முகம் பார்க்க

அவளோ “இதற்கு பதில் நான் உனக்கு முன்பே  சொல்லிட்டேன்” என கூற

“அதான் நானும் கேட்கிறேன்.மாஸ் டீலர் எவ்ளோ பெரிய கம்பெனி தெரியுமா? அவங்க கிட்ட நம்ம பிசினஸ் டீல் வச்சுகிறதே பெருமை. அதற்கு அவ்ளோ கணக்கு பார்க்கிற.ஆனா இப்போ இந்த சோசியல் சர்வீஸ் வேலை எல்லாம்  தேவையா ? இன்னும் நம்ம தொழில மற்ற நகரங்களுக்கு விரிவு படுத்தனும்.. கொஞ்சம் மெஷின்ஸ் எல்லாம் வாங்கணும். அதற்க்கு பணம் முக்கியம் சகானா” என்றான்.

“ம்ம் எனக்கும் புரியுது சபரி. சீக்கிரம் முன்னேறனும்தான்  .உங்களுக்கு  என்ன தகுதி இருக்குன்னு கேட்டவங்க முன்னாடி தலை நிமிர்ந்து என்ன இல்லைன்னு நான் கேட்கணும்” என்றவள் முகத்தில் கண்களில் தெரிந்த அந்த வெறி அன்று போல் இன்றும் அவனை அதிரவைத்தது.

அதற்குள் அவள் அலைபேசி அழைக்க எடுத்தவள் “என்ன வண்டி சார்?எந்த இடம் ? கண்டிப்பா ஆள் அனுப்பி வைக்கிறேன் சார். இன்னும் இருபது நிமிடத்தில் அங்க இருப்பாங்க” என்றவள்

சபரி இதை பற்றி அப்புறம் பேசிக்கலாம்.  நம்ம சம்பத் நகர் பக்கத்தில் ஒரு  கார் நின்றிடுச்சு .வெளியூர் ஆட்கள் . நீ உடனே ஆள் அனுப்பி வண்டிய சரிபார்க்க சொல்லு” என சொல்லவும்

“ம்ம் சரி சரி நான் பார்த்துகிறேன். அம்மா போன் பண்ணாங்க. உன்னை சீக்கிரம் வீட்டுக்கு வர சொன்னாங்க” என்றான்.

“அப்படியா காலையில ஏதும் சொல்லலையே” என்றவள் எதற்கு என கேட்கும்போதே

அவன் முகத்தில் தெரிந்த சிறுநகை அவளை கோபம் கொள்ள செய்ய

“டேய் உண்மைய சொல்லு . உனக்கு தெரியாம எதுவும் எங்க வீட்ல நடக்காது. அதுக்குதானா…” என அவள் முறைக்க

அவனோ வேகமாக “எனக்கு எதுவும் தெரியாது. நீ அந்த கஸ்டமர் பார்க்க சொன்னில .இதோ நானே போறேன்” என வேகமாக அந்த இடத்தி விட்டு நகர்ந்தான்.

இங்கு வீட்டில் “அம்மா நான் பல முறை உங்ககிட்ட சொல்லிட்டேன்.என்னை கேட்காம இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணாதீங்கன்னு .உங்களுக்கு புரியுதா இல்லையா? நீங்களும் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா ? என இரவு நேரத்தில் அந்த அமைதியில் அவள் குரல் உயர்ந்து ஒலிக்க

அவள் அன்னையோ தலைகுனிந்து நிற்க

அவளது சித்தப்பாவோ “நல்ல குடும்பம்.நல்ல பையன் .நம்ம தொழில்ல இருக்கான், அவங்களா கேட்டு வந்தாங்க அதான்மா நாங்க சரின்னு சொன்னோம்” என்றார்.

ஆம் சகானாவிற்கு பெண் பார்க்கும் படலம் தான் அப்போது முடிந்திருந்தது.

“உங்களுக்குமா சித்தப்பா என்னோட நிலைமை புரியலை. நான் தான் எனக்கு திருமணமே வேண்டாம்னு சொல்லி இருக்கேன் தான அப்புறம் எதற்கு இந்த வீண் முயற்சி” என்றாள்..

கல்யாணம் பண்ணாம இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்க போற .உன் வயசு பொண்ணுங்களுக்கு எல்லாம் கல்யாணம் ஆகி குழந்தையே இருக்கு. ஆனா நீ இன்னும் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்க..எங்களுக்கு ஆசை இருக்காதா ? சின்னவளும் படிச்சு முடிக்க போறா..அவளும் வேலைக்கு போக போறா”…..  என சகுந்தலா சொல்லவும்

“அம்மா இப்போ நான் இப்படி இருக்கிறதால உங்களுக்கு என்ன பிரச்சனை?” என அவள் கோபமாக  கேட்க

சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.

“எங்கனால்தான உனக்கு இப்படி ஒரு நிலைமை சகானா…” என சொல்லும்போதே அவள் சித்தியின் குரல் கமற

“எதற்கும் தகுத்தி இல்லாதவனா நான் போயிட்டேன்” என அவள் சித்தப்பாவும் சொல்ல

“எங்களால்  தான உன்னோட வாழ்க்கை இப்படி ஆகிடுச்சு. அந்த மனுஷன் மட்டும் நல்லா இருந்தார்ன்னா இன்னைக்கு நமக்கு இந்த நிலைமை வந்து இருக்குமா? எப்படி எல்லாம் உன்னை வளர்த்தி கடைசியில இப்படி ஒரு நிலமைக்கு நம்மலை கொண்டு வந்து விட்டுட்டாறே இந்த மனுஷன். எங்க நான் சொன்னத கேட்டார். என் மகள் என் மகள்ன்னு ஆகயத்தில கோட்டை கட்டினார். இப்போ என்ன ஆச்சு ? இப்போ அவரும் படுத்த படுக்கையில் கஷ்டப்பட்டு ,  உன்னையும் கஷ்டபடுத்திகிட்டு இருக்கோம்” என சகுந்தலா சொல்லி அழவும்

“அம்மா என்னம்மா நீ ? என்ன அண்ணி நீங்க .” என வீட்டில் உள்ள அனைவரும் அவரை சூழ்ந்து கொள்ள

அவருக்கோ துக்கம் தாங்காமல் அழுகை வந்து கொண்டே இருக்க

சகானாவிற்க்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள்

அவள் அம்மாவின் அருகில் அமர்ந்து அவர் கையை பிடித்தவள் “அம்மா இப்போ எதற்கு இவ்ளோ வருத்தம். என்னையும் நீங்க புரிஞ்சிக்கணும் .சரி இப்போ என்ன கல்யாணத்திற்கு நான் சம்மதிக்கணும் அவ்ளோதான என்றவள் நீங்க என்ன செய்யதாலும்  எனக்கு சம்மதம் தான்” என்றாள்.

உடனே நிமிர்ந்து மகளின் முகத்தை அவர் பார்க்க

அவளோ தன் மன உணர்வுகளை மறைத்து கொண்டு “என் கல்யாணம் தான் இந்த குடும்பத்திற்கு சந்தோசம் கொடுக்கும்னு நீங்க சொன்னா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன். நீங்க அடுத்து ஆக வேண்டிய வேலைய பாருங்க” என்றவள் வேகமாக அந்த இடத்தி விட்டு நகர்ந்து தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

“என்னக்கா இப்படி சொல்லிட்டு போறா…” என கவலையுடன் அவள் சித்தி கேட்க

“அவ சின்ன பொண்ணு…அவளுக்கு என்ன தெரியும். ரொம்ப கஷ்டப்பட்டுட்டா அதனால பயப்பட்றா. கல்யாணம் முடிஞ்சா எல்லாம் சரி ஆகிடும் என்றவர் வாங்க நம்ம மாப்பிள்ளை வீட்டுக்கு தகவல் சொல்லிடலாம்” என்றார்,

அறைக்குள் சென்றவளோ கடந்து போனவைகளை  நினைத்து அழுது கரைந்து கொண்டு இருந்தாள். எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கணும்?என்று புலம்பியவளின் மனதில் பழைய நினைவுகள் பொங்கி எழும்ப எப்போதும் போல் அணைபோடாமல் நினைவுகளுள் கரைய தொடங்கினாள்.

மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!(5)

நடந்தவை யாவையும் தனது அறைக்கு வந்து பல மணி நேரங்கள் ஆனபின்பும் அவளால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.சில மணிநேரங்களுக்குள்  அவள் வாழ்வில் நினைத்து பார்த்திடாத பல காரியங்களை செய்து முடித்து விட்டான் அவன்.. அதை நினைக்கும்போதே அவளின் கோபம் அதிகமாக அதே நேரத்தில் அவன் செய்தது எல்லாமே இயல்பாக இருந்தது போலவே சூழ்நிலைகளும் அமைந்துவிட்டது.

ஆம் அவனது வரவேற்பில் முதலில் தடுமாறி போனவள் பின்னேர் சுதாரித்து அவனை தவிர்க்க முயல அதற்குள் கேமரா, வீடியோ என அவன் சுற்றி வளைத்து கொண்டான. மேடையில் முதன் முதலில் அவனை பார்த்த ஆத்திரத்தில் அவள் படபடவென பேசி இருந்தாலும் அதற்கு பின்னர் சபரீஷின் அறிவுரைகளும், தான் இப்போது அனைவரின் பார்வையில் வளரும் ஒரு தொழிலதிபர் என்ற எண்ணமும் அவளுக்குள் கொஞ்சம் பக்குவத்தையும் பொறுமையும் ஏற்படுத்தி இருந்தது.

அவனோ பூச்செண்டு கொடுத்து வரவேற்ப்பில் அவளுடன் இணைந்தவன் அதற்கு பின்னர் அவளைவிட்டு  சிறிதும் நகரவில்லை.

 அதற்குள்  கூட்டத்தில் அனைவரையும் விலக்கி விட்டு  சகானாவின் அருகில் சபரீஷ் வந்து நிற்கவும்  

அப்போது ‘ஹெலோ சபரீஷ்.. சார்  ஒரு பெரிய கார் நிறுவனத்தின் பெயர் சொல்லி அதன் சவுத் ஜோர்னல் ஹெட்நான் சுந்தர் என்றவன் ..  உங்களை எங்க எம் டி பார்க்கணும்னு சொன்னாங்க” என்றான்.  

முதலில் திகைத்தவன் பின்னர் “ஓ அப்படியா இருங்க சகானவிடம்…..” என சொல்லும் முன் 

“சார் அவங்க பிசியா இருக்காங்க …தொந்தரவு பண்ண வேண்டாம். ….எங்க சார் சகானா மேடம் கிட்ட தான் பேசணும்னு சொன்னார்….நான் தான் அவங்களுக்கு  எல்லாமே நீங்கதான் உங்ககிட்ட பேசினா போதும்னு சொல்லிட்டு வந்திருக்கேன்…….பதினைந்து நிமிடம் தான் உங்களுக்கு நேரம் ஒதுக்கி இருக்கார் … …..அதனால சீக்கிரம்  வாங்க என அவன் யோசிக்க கூட நேரம் கொடுக்காமல் இழுத்து கொண்டு சென்றார்.

இங்கு சகானாவை சுற்றி பலர் சூழ்ந்து நிற்க

அப்போது அங்கு இருக்கும் பெரிய தொழிலதிபர்களை ஒவ்வொருவராக பொறுமையாக சகானாவிற்கு  அறிமுகம் செய்து வைத்தான் சாண்டில்யன். .

அவளோ அதை தவிர்க்கும் வழி தெரியாமல் அவனை விட்டு நகரவும் முடியாமல் தடுமாறியபடி  அனைவர்க்கும் வணக்கம் தெரிவித்தாள்.

சிலரிடம் சகானாவை  வைத்துகொண்டே அவளை பற்றி உயர்வாக பேசி அவளை நெளிய வைத்தான்.

அதே நேரத்தில் சிலரிடத்தில் அவள் கைகுலுக்க முற்படும்போது  வேண்டாம் என அவள் கைகளை பின்னே இழுத்துவிட்டு வெறும் பெயர் அறிமுகத்தோடு முடித்தான்.

பின்னர் “வா சாப்பிடலாம் …உனக்கு என்ன பிடிக்கும்” என கேட்டுகொண்டே அவளை சாப்பிடும் இடத்திற்கு அழைத்து சென்று அனைத்தும் எடுத்தும் கொடுத்தான்.

அப்போது அங்கு வந்த ஒருவர் “என்ன மிஸ்டர் சாண்டி நாங்களும் சிறப்பு விருந்தினர் தான்.  இந்த இளம் தொழிலதிபரிடம் நாங்களும்  கொஞ்சம் பேசலாமா? என சிரித்து கொண்டே கேட்க

அவனோ சிரித்து கொண்டே “வித் ப்ளஷர்” என்றவன் சகானவிடம் “பயப்படாதே நான் இருக்கிறேன்” என மெதுவாக சொன்னான்.

அப்போது ஒருவர் “மிஸ் சகானா இவ்ளோ  சின்ன வயசில இந்த அளவு தொழில்ல முன்னேறி இருக்கிறது பாராட்டப்படவேண்டிய விஷயம் தான் .ஆனா  ஒரு பெண்ணா இருந்திட்டு  நீங்க இந்த தொழில தேர்ந்தெடுக்க என்ன காரணம்? என கேட்டார்.

சாண்டியின் அருகாமையும், சுற்றி நிற்கும் மனிதர்களின் சலசலப்பில் சற்று முகம் சுளித்து நின்றவள் இந்த கேள்வி வந்ததும் சட்டேன நிமிர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்க்க ஏனோ  அருகில் இருந்த அனைவரும் ஒரு அடி தானாக  தள்ளி நின்றனர்.

அந்த பார்வை வீச்சில் சாண்டியுமே சற்று அதிர்ந்து போனான்.

“இது எனது தந்தையின் தொழில். அதனால் இதை தேர்ந்தெடுத்தேன்”.என அவள் மிடுக்காக பதில் கூற .

“மேடம் இது ரொம்ப கடினமான வேலை ….நீங்க எப்படி இதை சமாளிச்சிங்க” என மற்றொரு கேள்வி வர

“செய்யற வேலையை விரும்பி செஞ்சா எதுவுமே பெருசா தெரியாது” என்றாள்.

“நீங்க என்ன படிச்சு இருக்கீங்க?” என இன்னொரு கேள்வி வர

“பிஎ ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்” என்றாள் சகானா.

ஆச்சரியத்தில் பலரின் கண்கள் விரிய சாண்டியோ இமைக்க மறந்து  அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

அதுவரை அவளின் பெருமைகளை பேசிக்கொண்டு இருந்தவர்கள் திடீரென  அதில் ஒருவர் “உங்கள் நிறுவனத்தின் சிறப்பே எப்போது எந்த நேரத்தில் அழைத்தாலும் வந்து சர்வீஸ் செய்து தருவீங்கன்னு சொன்னாங்க…..அது எந்த மாதிரி சர்வீஸ்னு தெரிஞ்சுக்கலாமா?” என குதர்க்கமாக கேள்வி கேட்கவும்  

கேள்வியின் அர்த்தம் புரிந்ததும் அருகில் இருந்த ஒரு சிலர்  முகம் சுளிக்க

ஆனால் பலரும் இதற்கு அவளின் பதில் என்னவாக இருக்கும் என எதிர்பார்ப்பது போல் அமைதியாக அவள் முகத்தையே பார்த்திருக்க

ஒரு சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.

அத்தனை ஆண்களின் மத்தியில் நின்று இருந்தவள் சிறிதும் பதட்டம் இல்லாமல்  மிகவும் சாதரணமாக முகத்தை வைத்துக் கொண்டு “அதை உங்கள் மோட்டார் வாகனத்தில் பழுது ஏற்படும்பொழுது நீங்கள் எங்கள் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்.அப்போது நாங்கள் எந்த விதமான சர்வீஸ் செய்கிறோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்” என பதிலளித்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர .

 பார்த்து கொண்டிருந்தவர்கள் அனைவரின் முகத்திலும் ஈ ஆடவில்லை. அவர்கள் ஏதோ அவள் கோபமாக ,புரட்சிகரமாக பேசபோகிறாள் என எதிர்பார்த்து இருக்க அவளின் இந்த எதார்த்தமான பதிலில் சற்று ஆடித்தான் போனார்கள்.

ஆனால் அதற்கு பின் அவள் அங்கு ஒரு நிமிடம் கூட நிற்க வில்லை. வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள் சபரீஷை அலைபேசியில் அழைக்க அவனின் அலைபேசி அணைக்க பட்டிருந்தது.  ஷிட் என்றபடி அதுவரை மனதில் அடக்கி இருந்த கோபத்தை அந்த அலைபேசியில் காட்டியபோது அது அவளை விட்டு தொலைவில் சென்று விழுந்தது.

அதற்குள் அவளின் அருகில் ஒரு கார் வந்து நின்று  “மேடம் கிளம்பலாமா..” என கேட்க

அவளோ அப்போது இருக்கும் மனநிலையில் எதையும் கூறாமல் வேகமாக காரில் ஏறி அமர்ந்தவள். எதில் இருந்தோ ஒளிந்து கொள்பவள் போல் கண்களை இறுக மூடிகொண்டாள். அதில் நடந்தவை எல்லாம் படமாக ஓட சாண்டியின் அந்த சிரித்த முகம் அவள் கண்முன் வரவும் மனதில் ஒரு படபடப்பு வர  சட்டென கண்களை திறந்தவள் அதற்கு பின் கண்களை மூடவில்லை.

அறைக்குள் வந்து படுத்தவளால்  அங்கு நடந்தவை எல்லாம் கனவாக இருக்க கூடாதா என்பது போல் இருந்ததது.

அவனால் இன்னும் நம்ப முடியவில்லை. இது எப்படி சாத்தியம் என அவனுக்குள் கேட்டு கொண்டவன் மீண்டும் தன் கைகளை கில்லி பார்த்து ஆ வென கத்தி ஆமாம் இது உண்மைதான் என தனக்கு தானே சொல்லிக்கொண்டு அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருக்க

 இரவு பன்னிரண்டு மணிக்கு  பெங்களூரின் நடுங்கும் குளிரில் சால்வை போர்த்தி கொண்டு குறுகியபடி அவனை மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்தான் சுதர்சன்.

“அடகடவுளே மதியம் வரைக்கும் நல்லாதானே இருந்தான். இப்போ  என்ன ஆச்சுன்னு தெரியலியே ..இப்படி நடுராத்திரி வரைக்கும் கோட்டான் மாதிரி முழிச்சுட்டு தனக்கு தானே பேசிட்டு இருக்கானே …இவனை என்ன பண்றது” என புலம்பி கொண்டே உலாத்தி கொண்டிருந்த நண்பனை கை பிடித்து நிறுத்தியவன்

“டேய் டேய் இங்க பாரு …என்னடா ஆச்சு உனக்கு …பார்ட்டி முடிஞ்சு வந்து  நல்லா தூங்கிட்டு இருக்க என்ன எழுப்பி இப்படி லான்ல கொண்டுவந்து உட்காரவச்சுட்டு நீ பாட்டுக்கு நடந்துகிட்டு இருக்க ….

டேய் சாண்டி நான் உங்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்” என தன் மீது  அப்போதும் கவனம் இல்லாமல் இருப்பதை  பார்த்து சுதர்சன் எரிச்சல் ஆக..

சாண்டிஈஈஈஈஈஈஈஈஈஈ என அவன் உச்ச ஸ்துதியில் கத்தவும்

அவனோ தனது நடையை நிறுத்தி  மெதுவாக திரும்பி பார்த்தான்.

அவன் கண்களில் தெரிந்த கனலில் அதிர்ந்து போனான் சுதர்சன் .

“டேய் என்னனடா” என வேகமாக எழுந்து அவன் அருகில் வந்தான் சுதர்சன்.

சான்டியோ “என்னால இப்பவும் ஏத்துக்க  முடியல மச்சி. முதன் முறையா ஒரு பெண் முன்னாடி நான் தோற்று நிற்க்கிறேன்” என அவன் சொல்லும்போதே அவன் உடல் விறைக்க ,கைகள் முறுக்கேற

 “சாண்டி நீ  என்ன பேசற ஒன்னும் புரியலை டா” என்றான்.    

அவனோ “விருது வழங்கும் நிகழ்ச்சிய தாண்டா சொல்றேன். ஒரு சின்ன பொண்ணு எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வந்து இருக்காங்க .அவங்க முன்னாடி என்னை அவமான படுத்திட்டா” என சொல்லும் போதே கோபத்தில் அவன் முகம் ஜொலிக்க

“மறுபடியும் குழப்பிறானே” என்றவன் அவன் முகத்தை பார்க்க    

“அதாண்டா அந்த திருப்பூர்காரி” என சொல்லும்போதே பற்களை நறநறவென கடித்தவன் “அவளை …அவள ஏதாவது பண்ணனும்டா ..என்னை அவமான படுத்தினதுக்கு  அவ கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும்” என்றான்.

“ஓ அந்த பொண்ணு சொல்றியா ..பாவண்டா ..சின்ன பொண்ணு…. எதோ தெரியாம பேசிடுச்சு …அது பேசினத யாருமே கவனிக்கவும் இல்லை. அதுக்குள்ள அந்த பையன் வந்து சரி பண்ணிட்டான்ல.. விடுடா …”என்றான்.

சான்டியோ அவனை முறைக்க

  சுதர்சனோ அவன் அருகில் வந்து முகத்தை பார்த்தவன் “ நீ என்ன தண்ணி அடிச்சி இருக்கியா ?” என்றான்.

“டேய் நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன கேட்கிற ?என கோபத்தில் அவன் கழுதை பிடித்து நெரிக்க

“விட்றா ..விட்ரா என என அவன் கையை கழுத்தில் இருந்து விலக்கியவன் “பின்ன என்னடா …இன்னைக்கு பார்ட்டில அந்த பொண்ணு கூடவே சுத்திகிட்டு இருந்த…நானே கேட்கணும்ன்னு நினச்சேன். இது என்ன புது அவதாரம் போலன்னு” என்றவன்

“ஆனாலும் மச்சான் உனக்குள்ள இப்படி ஒரு அம்பி இருப்பான்னு எனக்கே  இப்பதான் தெரியும்” என சொல்லி சிரிக்க   

சாண்டியோ கண்களை அழுத்தமாக மூடி திறந்தவன்  

“எதிரிய பலம் கொண்டு மோதறத விட பணிவு கொண்டு ஜெயிக்கிறது  தான் புத்திசாலித்தனம் . அத தான் அங்க செஞ்சேன்” என்றான்.

சுதர்சனோ அவன் சொல்வது புரியாமல் முழிக்க

சாண்டியோ அவன் தோள்களில் கை போட்டு  தன் அருகில் அமர்த்தியவன்

“உனக்கு தெரியும் தானே…நான் எப்படி இருந்தேன்னு? என் வாழ்கையில என்ன நடந்ததுன்னு …எந்த சூழ்நிலையில இந்த கம்பெனி என் கைக்கு வந்ததுன்னு..இந்த நிறுவனத்தோட சேர்ந்தது தான் என்னோட வளர்ச்சியும்.என்னோட கம்பெனி ஒரு இடத்தில கீழ இறங்கினாலும் நான் இறங்கின மாதிரிதான். நான் வேற என் நிறுவனம் வேற இல்லை.இப்போ வரை அது தான் இருந்தது..ஆனா…”  என நிறுத்தியவன்

“சாண்டி என்னடா இப்படி பேசற” .. என சுதர்சன் ஆறுதலாக அவன் கைப்பற்ற

“நீ கேட்ட தான …பார்ட்டில ஏன் அவ கூடவே இருந்தேன்னு….எல்லாம் காரணமாக தான்.அவ என்னை அவமான படுத்தினத அவளுக்கே  திருப்பி கொடுக்க தான்” என்றான்.

“புரியலடா… என்றான்.

“நான் இருக்கிற தொழில்ல நான் மட்டும்  தான் எல்லாமும்மாக  இருக்கணும். வேற  யார் இருந்தாலும் அவங்க அடையாளமாக நான் தான் இருக்கணும் என்றவன் இன்னும்  புரியலையா …லேசாக சிரித்து கொண்டே இப்போ போய் எல்லார்கிட்டயும் கேளு… காலையில இந்த பொண்ணு அப்படி சொல்லுச்சு. இப்போ இவர் கூட தான் இருக்குது. அவர் சொல்றத எல்லாம் கேட்குது. அப்போ எது உண்மை? ஒன்னுமே புரியலைன்னு சொல்வாங்க என்றவன் அதான் எனக்கு வேணும்.அதற்காக தான் பார்ட்டில அப்படி நடந்துகிட்டேன்” என்றான்.

 சுதர்சனோ “இதனால் நமக்கு என்னடா லாபம்?

“தொழில்ல லாபம்கிறது பணம் மட்டும் இல்லை. மரியாதை ,புகழ் இரண்டும் சேர்த்து தான்.  அத எப்பவும் நான் தவற விடமாட்டேன். நீ என்ன பண்ற நாள மதியத்துக்குள்ள சகானா சர்விஸ் சென்டர் பற்றின முழு விபரமும் எனக்கு வேணும்..தயார் பண்ணு .

சரிடா …ஏற்பாடு பண்றேன் என்றான்..

“சரி சரி நேரமாச்சு..எனக்கு தூக்கம் வருது. நான் படுக்க போறேன்” என சொல்லி விட்டு அவன் செல்ல

அச்சோ என்னை விட்டுட்டு போகதடா ..பேய் வர நேரத்தில விட்டு போறியே ..நானும் வறேன்டா..” என கத்தியபடியே பின்னே ஓடினான் சுதர்சன்.

.

ஹோட்டலில் அனைவரிடமும் பேசிவிட்டு சபரீஷ் வர வெகுநேரமாகி விட்டது.

சகானா கண்டிப்பாக கோபத்தில் இருப்பாள் என நினைத்து கொண்டே 

சகானாவின் அறை கதவை தட்டியவன்

வேகமாக கதவ திறக்கும்போதே சரி இன்னைக்கு சேதாராம் நிச்சயம் என்ற முடிவுடன் அவன் நிற்க

ஆனால் அவன் பார்த்ததோ அழுது முகம் சிவந்து கண்கள் வீங்கி நின்ற சகானாவை தான். 

அவனை பார்த்ததும் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட

சபரீஷ் இதை எதிர்பார்க்கவில்லை.

“அய்யோ சகானா…..” என வேகமாக அவளை இழுத்து கொண்டு அறைக்குள் சென்றவன்

“ஹே என்னாச்சு ….சொல்லுமா ..,, பிஸினெஸ் விஷியமா பேச கூபிட்ட்டாங்க. அதான் போய்ட்டேன்..

உனக்கு என்னாச்சு யாராவது ஏதாவது சொன்னாங்களா…  சொல்லுமா..” என  பதறி கேட்கவும்

அவளோ மீண்டும் தேம்பி அழ

சபரிஷ் பயந்து விட்டான்.

“ சகானா என்னாச்சு ? இப்போ சொல்றியா இல்லையா…” என அவன் கத்தவும்

அவளோ அதற்கு மேல் சத்தமாக அழுதவள் மனபாரம் தாங்காமல் அவன் தோல் சாய

சபரிஷ் உடல் நடுங்கியது . இது இரண்டாவது முறை இவள் அவன் தோள் சாய்வது.

அவன் மனமோ பதற “சகானா இங்க பாருமா …இங்க என்னை பாரு” என அவன் குரலும் கமரியாது.

அவளோ அவன் கைகளை பசு தேடும் கன்றாய் இருக்க பற்றி இருக்க

சிறிது நேரம் அங்கு ஒரு அமைதி.

சபரிஷும் தன்னை கொஞ்சம் நிலை படுத்தி கொண்டு  அவளை பார்த்தவன்

“சகானா இங்க என்னை பாரு…என்னை பாரும்மா …என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குள்ள …. நான் செய்யறது எல்லாம் உன் நன்மைக்காக தான் உனக்கு தெரியுது தான …அப்புறம் என்னாடா “ என பொறுமையாக கேட்கவும்

அவளோ “என்னால முடியல சபரி…. என்னால் முடியல” என மீண்டும் கதறி அழுதவள்

“நானும் மனுஷி தான …எல்லாமே முடிஞ்சிடுச்சு . மறந்திட்டேன்…அழிஞ்சிடுச்சு அப்டின்னு தான் இவளோ நாள் நினைச்சிருந்தேன்.

ஆனா இப்போ இப்போ…” வார்த்தைகள் தொண்டைக்குழிக்குள் சிக்கி நிற்க

நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள்

அதில் தெரிந்த வலியில் சபரீஷ் கண்களிலும் கண்ணீர் நிறைந்துவிட்டது.

அங்கு இருந்த சில வினாடி மௌனம் இருவருக்குமே கொடுமையானது. அந்த நிகழ்வு நடக்கும்போது அவனும் உடன்  இருந்தான் தானே.

மண்ணாக இருந்தவளை இறுகிய சிலையாக மாற்றியது அந்த நிகழ்வு தானே.

எப்படி மறப்பார்கள். கலை வண்ணம் தீட்டிய கைகள் இன்றி கம்பியும் ,ஸ்பேனர் பிடிப்பதும்,

கனவுகள் நிறைந்த கண்கள் இன்று கனலை மட்டும் கக்குவதும்,

எல்லாம் யாரால் ? விடை தெரிந்த இருவரும் அதன் வலி தாளாமல் அமர்ந்திருக்க

முதலில்  சுதாரித்தது  என்னவோ சகானா தான்.

அன்றும் சரி இன்றும் சரி துன்பம் வரும்போது துவண்டு போவது  சில நிமிடங்கள் மட்டுமே ..மீண்டும் துள்ளி எழுந்து விருட்சமாய் நிற்பதும்  அவள் தான்.   

நிலவு தொடரும் …….

மஞ்சள் நிலவே ,மையல் அழகியே !!!(4)

மேடையில் கம்பீரமும் புன்னகையுமாக விருதை கையில் வைத்து கொண்டு நின்று இருக்கும்  காட்சியை பார்த்த சபரியின் கண்கள் சற்று கலங்கிதான் போயின . பின்னர் இந்த இடத்தை அடைய அவள் இழந்தது அளவிடமுடியாதது இல்லையா …அதை உடன் இருந்து பார்த்தவன் ஆதலால் அவளின் வளர்ச்சியில் அவன் மனம் நிறைந்து இருந்தது.

அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் அறிவிப்பாளர் ஒரு அந்த செயலை செய்தார்.

 மற்றும் ஒரு  சிறப்பும் இந்த வெற்றியாளருக்கு உண்டு என்றவர் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்த துறையில் ஒரு இளம்பெண் உள்ளே நுழைந்து குறுகிய காலத்தில் மிக பெரிய வளர்ச்சிய பெற்று இருக்கும் மிஸ் சகானா நிறுவனம் மட்டும் முதலிடம் பெறவில்லை….இந்த ஆண்டின் நமது நிறுவனங்களுள் மிக  சிறந்த தொழிலதிபராகவும் மிஸ் சகானா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என அவர் சொல்லி முடிக்கவும் பலரின் கண்கள் வியப்பில்  உயர்ந்தன.

ஆம் நண்பர்களே …..நமது வாடிக்கையாளர்களிடம் எடுத்த கருத்து கணிப்பில் தொழிலில் நேர்மை , குறித்த நேரத்தில் கார் டெலிவரி, மற்றும் வாடிக்கையாளரிடம் கனிவான அணுகுமுறை  என்பதில்   சகானா சர்வீஸ் ஸ்டேஷன் தான் முதலிடத்தில் இருந்தது. மேலும் நமது தொழிலில் முதல் பெண்  தொழிலதிபரும் இவர்தான். அதனால் இந்த விருதுக்கு தகுதியானவரும் இவர்தான் என சொல்ல கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது.

சபரீயோ சந்தோஷத்தில் கண்களில் நீருடன் பார்த்திருக்க சகானாவும் அந்த நேரத்தில்  சபரிய பார்க்க அதில் நீயின்றி இந்த அடையாளம் இல்லை என்பது போல் இருந்தது.

அந்த நேரத்தில் அறிவிப்பாளர் “மேலும் இந்த விருதை பெறுபவருக்கு உள்ள தகுதியை போல் அந்த விருதை கொடுப்பவருக்கும் அந்த தகுதி இருக்க வேண்டும் அல்லவா?.

அந்த தகுதி இந்த அரங்கத்தில் சிறு வயதிலே தொழில் துறையில் நுழைந்து , நாட்டின் பல இடங்களில் தங்களது கிளைகளை பரப்பி, அனைத்தையும் நல்ல முறையில் நிர்வாகம் செய்து இதற்கு முன்னர் மூன்று முறை சிறந்த தொழிலதிபருக்கான விருதை பெற்ற SK மோட்டார்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர்  மிஸ்டர் சாண்டில்யன் அவர்களுக்கே உண்டு. அவரே இந்த விருதினை வழங்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்” என்றதும் அடுத்த கைதட்டல் அரங்கத்தை அதிர செய்ய அதை கேட்டு கொண்டிருந்தவளின் மனமோ அதிர்ச்சியில் சுக்கு நூறாக சிதறி கொண்டு இருந்தது.

அதைவிட அதிர்ச்சி கீழே அமர்ந்தவனிடம் இருந்து வெளிப்பட்டது. அவன் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. அதற்குள் மேடையில் இருந்தவர் சாண்டில்யனை மேடைக்கு அழைக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தவன் மெதுவாக எழ

அதற்குள் பின் வரிசையில் இருந்து  “ எப்போதும் எல்லா இடத்திலும் நாம் தான் முதலிடம்னு  நினைக்க கூடாது….. மோட்டார் மார்கெட்டிங் முழுதும் இவன் கண்ட்ரோல் வச்சிருந்தான்……. ஆனா இப்போ என்ன நடந்தது?….ஒரு பொண்ணு முன்னாடி தோற்று  நிக்கிறாங்க” என அவனை கேலி பேசுவது போல் ஒரு குரல் கேட்க

தொழிலில் வளர்நிலையில் உள்ளவர்களுக்கு இது போன்ற கேலி கிண்டல்கள் வருவது சகஜம் தான் என்றாலும் இப்போது அவனிருக்கும் மனநிலையில் அது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்தது. அவன் வேகமாக எழுந்து மேலே வர

இங்கு மேடையில் SK மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெயரை கேட்டதும் தலையில் இடி விழுந்தது போல் அதிர்ந்தவள் யாரால் இந்த நிலைக்கு தள்ளபட்டாளோ அவர்களின் கையால் தனது வெற்றி கோப்பையை பெறுவதா என கோபமும், ஆத்திரமும் வர அதற்குள்  அதற்கு காரணமானவன் மேடைக்கு வரவும் அவனை பார்த்ததும் சில நொடிகள் மனம்  தடுமாறி பின் சுதாரித்தவள் அவனை முறைக்க அவனும் சளைக்காமல் அதை எதிர்கொள்ள   இதை எல்லாம் தூரத்தில் இருந்து பார்த்து  கொண்டிருந்தான்  சபரி. அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகள் வந்து செல்ல கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டு தன்னை நிலைபடுத்தி கொண்டவள்  சுற்றும் முற்றும் பார்த்தவள் கண்கள் பளிச்சிட உடனே   மேடை மீது இருக்கும் மைக் நோக்கி நகரவும் 

அங்கு ஏன் போகிறாள் என யோசித்தவன் அவள் அடுத்து  செய்யபோகும் செயலின் வீரியத்தை உணர்ந்த சபரி வேகமாக எழுந்து அவளை நோக்கி ஓடி வந்தான்.

அவள் மைக் பிடித்து பேச ஆரம்பிக்கும் முன் மேடை ஏறி அவள் அருகில் சென்றவன் “சகானா என்ன காரியம் செய்ய போற  நீ….பேசாமா அமைதியா இரு” என அவள் காதில் மெதுவாக சொல்ல

அதற்குள்  “இந்த விருதினை பெற்று கொண்டு நீங்கள் சொல்ல விரும்புவதை சொல்லலாம் மிஸ் சகானா எங்கள் விருந்தனர் உங்களுக்காக காத்திருக்கிறார்” என அறிவிப்பாளர் சொல்லவும் 

அப்போது “எனக்கு இந்த விருதை இவரிடம் இருந்து பெறுவதற்கு சற்றும் விருப்பம் இல்லை…… அதனால் எனக்கு இந்த விருது வேண்டாம்”…. என சொல்லவும்  அங்கு இருந்தவர்கள் மட்டும் அல்ல சபரீயும் அதிர்ந்து நின்றான். அவள் ஏதாவது பேசுவாள் பிரச்சனை வரும் என்று தான் அவன் தடுக்க  நினைத்தான். ஆனால் இப்படி பட்டென்று எல்லார் முன்பும் அவனை அவமானபடுத்துவாள் என்று அவன் சற்றும் நினைத்து பார்க்கவில்லை.

 உடனே மேடையில் நின்று கொண்டிருந்த சாண்டியை அவன் பார்க்க அவனும் முதலில் அதிர்ந்து பின்னர் கூட்டத்தை பார்த்ததும் தனது முகமாற்றத்தை வெளியில் காட்டாமல் மறைத்து கொண்டு அமைதியாக நின்று இருக்க  அந்த அமைதியின் பின் இருக்கும் ஆக்ரோஷத்தை சபரி உணர்ந்ததால் பணிவாக  அவனருகில் சென்றவன் “மன்னித்து கொள்ளுங்கள் சார். அவள் சிறு பெண் …ஏதோ அறியாமல் பேசிவிட்டாள் …நீங்க தவறா  எடுத்துக்காதீங்க….. அவளுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றவன் கோபமாக சாகானாவிடம் சென்று சில வார்த்தைகள் பேச அதை கேட்டதும் அவள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக…… கடைசியில் நீயும் என்னை புரிந்து கொள்ளவில்லையே என்பதை போல் அவள் பார்க்க

அவனோ அவள் முகத்தை  பார்க்காமல் “இப்போ நீ அந்த விருதை அவர்கிட்ட இருந்து வாங்கிற” என அடிக்குரலில் சொன்னவன்   அவளை கைபிடித்து அழைத்து வந்து இல்லை இழுத்து வந்து  அந்த விருதினை  பெற வைத்தான் .

அவனிடம் இருந்து விருதை பெற்ற அந்த நொடி அப்படியே பூமிக்குள் புதைந்து போய்விடமாட்டோமா என அவள் மனம் துடிக்க  

அதை கொடுத்தவனோ இந்த நிமிடங்கள் எனது வாழ்வின் மிக மோசமான நிமிடங்கள் என நினைத்தவன் விருதினை  வழங்கிவிட்டு வாழ்த்து கூட சொல்லாமல் வேகமாக மேடையை விட்டு இறங்க அதற்குள் அவனை சுற்றி  துக்கம் விசாரிப்பது போல் ஒரு கும்பல் கூட அது மேலும் அவனுக்கு அவமானமாக போயிற்று.

அவன் வேகமாக அரங்கை விட்டு வெளியில் செல்லவும் அதற்குள் மேலும் அவளை காட்சி பொருளாக்காமல்  அழைத்து கொண்டு சபரீயும்  கிளம்பிவிட்டான்..

தங்கும் அறைக்கு சென்றபின்னும் அவளின் ஆத்திரம் அடங்கவில்லை. யாரால் அவள் தனது சுயத்தை இழந்து நின்றாளோ அவர்களின் கைகளால் அவளின் அடையாளம் நிருபிக்க பட்டது அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் எல்லாவற்றையும் இழந்து எப்படி நின்றாளோ அதே போன்று இப்போதும் அவள் உணர்ந்தாள்.

 மனம் ஆற்றாமையில்  துடிக்க அப்போது “சகானா பசிக்குது சாப்பிட போகலாமா” என்றபடி சபரி அவள் அறைக்குள் நுழைந்தான்.

அவனை பார்த்ததும் ஆத்திரத்தில் “போடா டேயீஈஈஈஈஈ” என்றபடி  கையில் இருக்கும் அலைபேசியை  அவன் மேல் எரிய அதை எதிர்பார்த்தவன் போல்  கேட்ச் பிடித்தான் அவன்.  அதில் மேலும் ஆத்திரம்  அடைந்தவள்  கண்டபடி திட்டி கொண்டே அவன் மேல்  அடுத்து தலையணை மற்றும் சில பொருட்கள் பறக்க அவனும்  பறந்து பறந்து  கேட்ச் பிடிக்க சில நிமிடங்கள் அங்கு ஒரு விளையாட்டு போட்டி நடந்து முடிந்தது.

பேசி அவள் களைப்படைய அவனோ ஓடி களைத்து போக இருவரும் அமைதியாக அறையில் இருக்கும் சோபாவில் அமர்ந்தனர். அவளின் கோபம் எல்லாம் கொஞ்சம் குறையட்டும் என்றுதான் சபரீயும் அவளின் கவனத்தை திசை திருப்ப இது போல் செய்தான். அவன் நினைத்தது போல் அவளும் கொஞ்சம் அமைதியானாள் .. சில நிமிடங்கள் மௌனத்தில் கரைய “சகானா சாப்பிட போகலாமா” என மெதுவாக ஆரம்பித்தான்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருக்க

இங்க பாரு சகானா உன்னோட கோபம் எனக்கு புரியுது …அந்த இடத்தில் உன்னோட மனநிலை எப்படி இருந்திருக்கும்னு எனக்கும் தெரியும். ஆனா அதை எல்லாம் வெளிபடுத்தும் இடம் அதுவல்ல சகானா. இந்த விழா உனக்கான விழா.. இந்த அடையாளம் உனக்கு கிடைக்க நீ எவ்ளோ கஷ்டபட்டிருப்பா….எத்தனையோ இழந்திருக்க ……எவ்ளோ அவமானத்தை கடந்து வந்திருக்க  என அவன் சொல்லி முடிக்கும் முன்

 “அதான் நானும் சொல்றேன்…..அதற்கு காரணமானவங்ககிட்ட நான் எப்படி…”   என அவள் சொல்லும்போதே குரல் தழுதழுக்க,  கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்ட

அவளின் அருகில் வந்து அமர்ந்து அவள் கைகளை பிடித்து தனது கைகளுக்குள் வைத்து கொண்டவன் “இங்க பாரு சகானா உன்னோட பீலிங்க்ஸ் எனக்கும் தெரியுது. ஆனா அத்தனை பேர் இருக்கிற சபையில நீ அப்படி நடந்துகிட்டது சரியா சொல்லு? மேலும் உன்னை பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க சொல்லு?  என அவன் கேட்கவும்

 உடனே அவள் கோபமாக “அன்னைக்கு மட்டும்  அத்தனை பேர் இருக்கும்போது  உங்களை மாதிரி ஏமாத்தற ஆளுங்களுக்கு எல்லாம் இது இடம் இல்லை….தகுதி பார்த்து நீங்க சம்பந்தம் வச்சிருக்கணும்….இப்போ வந்து புலம்புனா நான் என்ன பண்ண முடியும்  அப்படி இப்படின்னு கேவலமா பேசினாங்களே …அப்போ நீயும் தான கூட இருந்த …அப்போ எங்க போச்சு இந்த மரியாதை எல்லாம்….பணம் இருக்கிறவனுக்கு ஒரு நியாயம் இல்லாதவனுக்கு ஒரு நியாமா?”  என ஆத்திரத்தில் அவள் வெடிக்க

அவனோ  பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்தான்.

மறக்க கூடிய நிகழ்வா அது…..அந்த இடத்தில் அவள் பட்ட அவமானத்திற்கு அவன் தானே சாட்சி. வேறு பெண்ணாக இருந்திருந்தாள் அவர்கள் பேசியதற்கு  அங்கு நடந்திருக்கும் நிகழ்வே வேறாக இருந்திருக்கும். ஆனால் சகானாவோ அவர்கள் அவளவ்வு பேசிய பின்பும்  அமைதியாக “தன்னிடம் உள்ள ஆதாரங்களை அவர்களின்  கையில் திணித்து  இதை நான் உங்களுக்கு சன்மானமாக கொடுக்கிறேன்  பிழைத்து கொள்ளுங்கள்” என்றல்லாவா சொன்னாள் . இதனை எதிர்பார்க்காத  அவர்கள் விகிர்த்து போய் நிற்க இவளோ முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல்  கம்பீரமாக  அல்லவா நடந்து வந்தாள்.

அப்போது அவளிடம் தெரிந்த அந்த தைரியம் , துணிச்சலில் சபரீயே அசந்து போனான். பூ போல் மென்மையானவளின் பின் இப்படி ஒரு புயலின் வேகம் இருக்கும் என்பதை அவன் உணர்ந்த தருணம் அல்லவா அது. அதன் பின் தான் அவளின் எல்லா செயல்களுக்கும்  அவன் துணை நின்றான். 2

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே போன்ற முகபாவத்தை அவள் மேடையில் நிற்கும்போது பார்த்தவன் ஏதோ  நடக்க போகிறது என  உள்ளுணர்வு சொல்ல  வேகமாக வந்து அதை தடுக்க முயற்சிக்க ஆனால் அவளோ தான் நினைத்ததை பேசி விட்டாள்.

இவ்வாறு அவன் மனம் யோசித்து கொண்டிருக்க

“சொல்லு சபரி ……ஏன் அமைதியா இருக்க….அந்த பரிசை அவன் கையில் இருந்து வாங்கும்போது எனக்கு எவ்ளோ அசிங்கமா இருந்தது தெரியுமா? அவனுக்கு அந்த தகுதி இல்லை” …. என அவள்  சொல்லி கொண்டு இருக்கும்போது

சபரியின் அலைபேசி ஒலிக்க எடுத்தவன் “அப்படிங்களா சார்…” என்றவன் சகானவை திரும்பி பார்க்க

அவளோ கோபத்தில் எதோ வாயில் முனுமுனுத்து கொண்டிருக்க ஒரு நிமிடம் யோசித்தவன் “சரிங்க சார்…நாங்க வந்திடறோம்” என சொல்லி அலைபேசியை வைத்தான்.

அவன் பேசி முடித்ததும் மீண்டும் அவனிடம் அவள் சண்டை ஆரம்பிக்க

“இங்க பாரு சகானா இப்போ இதற்கான நேரமில்லை… இரவு வந்து பேசிக்கலாம்… நம்ம வெளியே கிளம்பனும்…சீக்கிரம் ரெடி ஆகு” என்றவன் உடனே அவள் வேகமாக ஏதோ சொல்ல வர

அவனோ அவளை பேசவிடாமல் தடுத்தவன் “ சகானா என் மேல் நம்பிக்கை இருக்கு அல்லவா…நான் எது செய்தாலும் உன் நல்லதுக்கு தானே செய்வேன் உனக்கும் தெரியும் தானே”   என கேட்க   

அவனின் முகபாவமே அவளுக்கு ஏதோ உணர்த்த உடனே பதில் ஏதும் சொல்லாமல் அவன் கைகளில் இருந்து தனது கைகளை வெடுகென்று எடுத்து கொண்டவள் எழுந்து செல்ல

“நான் கேட்கிறேன்…நீ பதில் சொல்லாம போற” என அவன் முடிக்கும் முன்

“ம்ம் நீதான கிளம்ப சொன்ன…நான் டிரஸ் மாற்ற வேண்டாமா? …..அதான் போறேன்….”என வேகமாக சொல்லவும்

அவளின் சிறுபிள்ளை தனத்தில் சிரிப்பு வர  சற்று இளகி பேசினால் மீண்டும் பழைய பல்லவியை ஆரம்பித்து விடுவாள் என நினைத்தவன் சரி சரி என்றபடி அறையை விட்டு வெளியே வந்தான்.

 சிறிது நேரத்தில்  அவன் சொன்னது போல் கிளம்பி வந்தாள். அவனும் வர இருவரும் கிளம்பினர். இவளும் எங்கு என்று கேட்க வில்லை.அவனும் சொல்லவில்லை.

இது தான் சகானா….அவள் எளிதில் யாரையும் நம்ப மாட்டாள். அப்படி நம்பியவர்களின் பேச்சிற்கு மறுபேச்சு பேசமாட்டாள். அதுவும் சபரியின் பேச்சிற்கு எப்போதும் சகானா கட்டுபடுவாள்.

அவர்களின் கார் ஐந்து நட்சத்திர ஹோட்டலின் முன் நிற்க அதில் இருந்து இறங்கியவள் “இங்க எதுக்கு வந்தோம் சபரி …நம்ம தங்கி இருக்க ஹோட்டல்ல சாப்பிட்டு இருக்கலாம்” என சொல்ல

அதற்குள் காலையில் நடந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர் வேகமாக வெளியில் வந்து “வாங்க வாங்க மேடம்…வாங்க சார்…”.என வரவேற்க

அவளோ திகைத்து அவனை பார்க்க

அவனோ மிக சாதரணமாக “ஆமா இது உனக்கான பார்ட்டி தான்….நான் தான் முன்பே சொல்லி இருந்தேனே” என அவன் சொல்ல

“நீ என்ன லூசா என்பது போல் அவனை பார்த்தவள் ….. பின்னர் நான் வரலை …நீ வேணா கலந்துகிட்டு  வா “ என சொல்லி முடிக்கும் முன்

 ஒரு பெரிய பூங்கொத்து அவளின் முன் நீட்ட அப்போது   வீடியோ கேமேரா அனைத்தும் அவளை சுற்றி  பளிச்சிட அவளோ சில நொடிகள் திகைத்து பின்னர் திரும்பி  சபரிய பார்க்க அவனோ அந்த கும்பலில் பின்னோக்கி தள்ளப்ட்டிருந்தான்.

அவள் என்ன செய்வது என தடுமாறி கொண்டிருக்க

அப்போது முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிதாக இருந்த  அந்த பூங்கொத்தின் பின்புறத்தில் இருந்து “ உங்களின் வெற்றிகளுக்கு எங்களது வாழ்த்துகள். இது போன்ற வெற்றிகளை நீங்கள் மேலும் மேலும் பெற மனதார வாழ்த்துகிறோம்” என்ற குரல் வர

வாழ்த்து செய்தியில் அவளின் முகம் மலர்ந்து சிரித்தகொண்டே “மிக்க நன்றி” என சொல்லியபடி அந்த மலர்கொத்தை அவள் பெறுவதற்கு கை நீட்ட  

“இந்த விருந்திற்கு SK மோட்டார்ஸ் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்” என்றபடி அந்த பூங்கொத்தின் மறைவில் இருந்து வெளியில் வந்தான் சாண்டி.

முகம் முழுவதும் புன்னகையும், கண்களில் குறும்புடன் அவன் நின்று இருக்க 

இதை  சற்றும்  எதிர்பார்க்காதவல் திகைப்பில் விழிகள் தானாக விரிய

அதற்குள் ஹலோ சாண்டி சார் மேடம் பக்கத்தில நில்லுங்க…உங்களையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துக்கிறோம் என கேமிரா மேன் சொல்லவும்

அவனோ அவளின் அருகில் வந்து நிற்க

பளிச் பளிச்சென கேமராக்கள் ஒளிர்ந்திட இதெல்லாம் சில நொடிக்குள் நடந்து முடிக்க அவளோ அதை எல்லாம் உணரும் நிலையிலே இல்லை.

நிலவு தொடரும் …