பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்

 

 

Image result for friendship images

 

அனைவர்க்கும் இனிய இரவு  வணக்கம் ப்ரிண்ட்ஸ்

எல்லாரும் எப்படி இருக்கீங்க.?

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்

நிறிய பேர் இந்த கதையே மறந்திருபிங்க ….. அவங்களுக்காக ஒரு அறிமுக பதிவு.

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்

விண்ணை எட்டிபிடிக்கும் வேகமும், காற்றை சிறைபிடிக்கும் துடிப்பும், உலகை ஒரு நொடியில் சுற்றிவிடும் ஆற்றலும் கொண்ட பருவம் பதின்பருவம். அதில கல்லூரி வாழ்க்கை என்பது பரந்த வானில் ஒற்றை நிலவாய் ஜொலித்து விடிவெள்ளியாய் ஒளிர்விடும் வாழ்க்கை.

அந்த கல்லூரி வானத்தில் சுடர்விடும் விண்மீன்கள் ஜீவா . நந்து ,ஜமுனா ,ஜெஸி, மாலினி இவர்கள் ஐவரும் ஒரே கல்லூரி…பாடபிரிவுகள் வேறு வேறு…

ஜீவா நந்து இருவரும் தோழர்கள்.கல்லூரி தலைவன் ஜீவா .கல்லூரியின் முதல் நாள் பேருந்தில் தொடங்கிய ஜமுனா ஜெஸி நட்பு அறிமுகத்தில் தொடங்கி அவர்களின் உயிராக மாறி போக எதிர்பாராத சந்திப்பில் மாலினி அவர்களுடன் இணைய இந்த மூன்று பூக்களின் நட்பு கல்லூரி நந்தவனத்திற்கு பெருமை சேர்த்தது.
பார்ப்பதற்கு அழககாகவும் மனதிற்கு இதமாகவும் இருக்கும் இந்த பூக்கள் சோலைவனத்தில் பூத்து குலுங்கும் மென்மையான வாசனை மலர் அல்ல ….இவைகள் பாலைவனத்தில் பதியம் போடப்பட்டு வாழ்வதற்காக தனது வேர்களை அந்த வெற்றிடத்தில் பரப்பி முட்டி மோதி செடியாக வெளிவந்து அதில் மலராக பூத்து குலுங்கும் பன்னீர் பூக்கள்.

முன்கதை சுருக்கம் :

ஜெஸியும் நந்துவும் காதலர்கள். ஜெஸி கேட்டு கொண்டதற்காக நந்து சிபாரிசு செய்ய ஜமுனா கல்லூரியில் சேருவதற்கு ஜீவா உதவி செய்தான். அதற்கு ஜமுனா நன்றி கூட சொல்லவில்லை . அவளின் துடுக்குதனமான சில செயல்கள் ஜீவாவிற்கு பிடிக்கவில்லை . மேலும் ஜீவாவின் மனம் ஒருசில பெண்களால் பாதிக்க பட்டு இருந்தமையால் பெண்களை பற்றிய நல்ல எண்ணம் அவனுக்கு கிடையாது. பெண்கள் ஏமாற்றுகாரர்கள் என்பான். ஜீவாவின் சிடுமூஞ்சி தனமும் நந்துவின் சகிப்புத்தன்மையுமே அவர்களின் நட்புக்கு ஆணிவேர்.

ஜம்முவிற்கும் ஜீவாவிற்கும் எப்போதும் வாய்சண்டை நடந்து கொண்டே இருக்கும். ஜெஸியும் நந்துவும் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தனர். மாலினி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள்.அந்த நேரத்தில் ஒரு அலைபேசி அழைப்பு தோழிகள் மூவரின் வாழ்க்கையில் பெரும் புயலை கொண்டு வந்தது.

அலைபேசியின் மூலம் மாலினியின் இருண்ட பக்கங்கள் தோழிகளுக்கு தெரியவர அதிர்ந்து போயினர் .. அது என்ன ? அதை கேட்டதும் தோழிகள் முடிவு என்ன ? என்பதை இனி பார்ப்போம்

2 thoughts on “பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்”

Leave a comment