பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் -11

 

 

 

ஹாய் ப்ரிண்ட்ஸ்

அனைவர்க்கும் இனிய இரவு வணக்கம்

பாலைவனத்தின் பன்னீர் பூக்கள்

அத்தியாயம் -11

அத்தியாயம் –11

அடைத்து வைத்திருந்த மடையை திறந்து விட்டார் போல் மனதில் புதைந்து கிடந்த தன் வாழ்வின் ரகசியங்களை தடையின்றி கொட்டியவள் ….இனி என்னுடன் உங்களின் நட்பு தொடருமா ? என மனதின் வலி வார்த்தைகளாக வெளிவர என்னை வெறுத்து விடாதீங்க என்ற ஏக்கம் கண்ணில் வெளிப்பட அவர்களை பார்த்து கொண்டு இருந்தாள் மாலினி . ஆனால் அவர்களோ திகைத்து நிற்க தோழிகளின் அமைதி அவளை மேலும் கலவர படுத்த ஏமாற்றத்தோடு அங்கு நிற்க திறனில்லாமல் திரும்பி நடந்தாள்.

நினைத்து பார்க்க முடியாத ஒரு நிகழ்வு நெருங்கிய தோழிக்கு நடந்திருப்பதை அறிந்ததும் மூளையும் மனமும் உறைந்து போய்விட அதில் இருந்து வெளிவருவதற்க்கே சில மணி நேரங்கள் ஆகின. முதலில் சுயநிலைக்கு திரும்பியது ஜமுனா தான். திகில் அடித்தாற்போல வெறிக்க பார்த்திருந்த ஜெசியையும் நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள்.

“கடவுளே இவ மனசுக்குள்ள இவ்ளோ வேதனைகளா”….. என அவள் சொல்லவும்

“ஆமாம் ஜம்மு….என்னாலயும் நம்ப முடியல…புள்ளபூச்சி மாதிரி இருக்கா…..ஆனா அவளுக்கு பின்னாடி பூதம் மாதிரி இவ்ளோ பெரிய கதை இருக்கு………இப்படி எல்லாம் நடக்குமா….எனக்கு நாடி நரம்பு எல்லாம் சிலிர்க்குது..கடவுளே அண்ணனா இருந்தவன் இப்படி எல்லாம் மாறுவானா?” என அந்த அதிர்ச்சி குறையாமல் படபடவென கேள்விகளை அவள் அடுக்க

“எனக்கும் தான் புரியலை …..மாலினி வாழ்க்கையில இப்படி ஒரு கருப்பு பகுதி இருக்கும்னு இப்போ வரைக்கும் என்னால ஏத்துக்க முடியலை……ரொம்ப அப்பாவியா, அதிர்ந்து பேசாத, கோபபடகூட தெரியாத இவளுக்கு இப்படி இரு கொடுமையா…ஐயோ நினைச்சே பார்க்க முடியலையே” என தனது ஆதங்கத்தை வெளிபடுத்தினாள் ஜம்மு.

அப்போது “ஏம்மா காலேஜ் விட்டு எவ்ளோ நேரம் ஆகுது…இன்னும் கிளம்பாம என்ன பண்றிங்க” என சீனியர் மாணவி ஒருவர் கேட்க “இதோ கிளம்பிட்டோம் சிஸ்டர்” என்றபடி இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர். நடக்கும்போது ஜெசி ஏதோ கேட்க ஜமுனாவோ “இப்போ இதை பற்றி பேச வேண்டாம். நாளை கல்லூரி வந்த பிறகு பேசிக்கொள்ளலாம்” என சொல்ல ஜெஸியும் அதற்கு பிறகு அதை பற்றி பேசவில்லை.

மறுநாள் எப்போதும் போல் கல்லூரி வந்த தோழிகள் மாலினிக்காக
காத்திருந்தனர். ஆனால் அவளோ அவர்களை சந்திக்க வரவே இல்லை.

“என்ன ஜம்மு இவளை காணோம்…..நேத்து எவ்ளோ பெரிய குண்டை தூக்கி போட்டு இன்னைக்கு ஆள காணோம்…இவளை என்ன தான் பண்றது….இவ நல்லவளா கெட்டவளானே தெரியலியே” என ஜெசி கோபமும் புலம்பலுமாய் ஆரம்பிக்க

ஜமுனாவோ “மாலினி பாவம் ஜெசி ….. அவ நிலைமை யாருக்கும் வரகூடாது. நேத்து அவளுக்கு நம்ம எந்த பதிலும் சொல்லலை…அவ முகம் எப்படி மாறிபோச்சு தெரியுமா?” என மாலினிக்கு ஆதரவாக பேச

“என்ன ஜம்மு நீ……பார்க்கிறதுக்கு பச்சபுள்ள மாதிரி பசக்பசகுனு முழிச்சுகிட்டு இருந்திட்டு பண்ணிருக்க வேலை எல்லாம் ரிவால்வர் ரீட்டா ரேஞ்சுக்கு பண்ணிருக்கா …….அவளை நீ அப்பாவிங்கிற…….உன்னை எல்லாம் திருத்தவே முடியாது….எவ்ளோ கேடித்தனம் பண்ணிருக்கா பாரு…வீட்ல இருந்து காசு எல்லாம் எடுத்திருக்கா…..பத்தாவது படிக்கும்போதே ப்ரிண்ட்ஸ் கூட சேர்ந்து ஊர் சுத்திருக்கா………….. நான் எல்லாம் அப்படி போனதே இல்லை தெரியுமா ……..அய்யோ அவளை” என எரிச்சலுடன் ஜெசி பற்களை கடிக்க

ஜம்முவோ அவளை ஒரு மாதிரி பார்த்தவள் “ஜெசி உண்மைய சொல்லு…..நீ நிஜாமாவே கோபத்தில அவளை திட்றீயா…இல்லை அவளை மாதிரி ஊர் சுத்த முடியலைனு எரிச்சல்ல திட்றீயா” என குரலில் கேலியுடன் கேட்கவும்

அதுவரை புலம்பி கொண்டிருந்தவள் சட்டேன்று பேச்சை நிறுத்திவிட்டு அவளை பார்த்து முறைத்தவாறே “ஆமா இது எல்லாம் கரெக்டா கண்டுபிடிச்சிடுவியே” என வாய்க்குள் முனகியவள் “ம்ம்ம் அது வந்து வந்து எல்லாம் அவ நல்லதுக்குதான் சொல்றேன்” என பேச்சை மாற்றினாள்.

ஜம்முவோ சிரித்துகொண்டே “சரி சரி விடு விடு…..இப்போ விஷியத்துக்கு வருவோம்…இனி அடுத்தது என்ன பண்றதுன்னு யோசிக்கணும்” என்றாள்.

உடனே “இதில யோசிக்க ஒண்ணுமில்லை எனக்கு என்னமோ அவங்க அப்பா அம்மாகிட்ட சொல்றது தான் சரின்னு படுது…..ஏன்னா அவன் உரிமையோட வீட்டுக்குள்ள வந்து மிரட்றானா அதை தடுக்க அவங்களால தான் முடியும்” என்றாள் ஜெசி.

ஜம்முவோ பதில் சொல்லாமல் யோசித்து கொண்டிருக்க

“என்ன யோசிக்கிற …சரி பேசாம போலீஸ்ல சொல்லிடுவோமா …முட்டிக்கு முட்டி தட்டி அவனை உள்ள வச்சுடுவாங்க எனக்கு என்னமோ இதான் சரின்னு தோணுது ஜம்மு ” என சொல்லிகொண்டிருக்கம் போதே மாலினி வகுப்பு தோழி அவர்களை கடந்து செல்ல உடனே ஜம்மு அவளை அழைத்து மாலினி வகுப்பில் இருந்தால் இங்கு வர சொல்லி அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் மாலினி தலைகுனிந்தபடி அங்கு வர அவளை பார்த்ததும் “ஏண்டி லூசா நீ…..உனக்காக நாங்க இங்க வந்து காத்துகிட்டு இருக்கோம்…நீ என்னமோ படிச்சு ஆணிய பிடுங்கிரவ போல கிளாஸ் ரூம்ல உட்கார்ந்திருக்க…..இப்போ அது ரொம்ப முக்கியம் உனக்கு ம்ம்ம் “ என ஜம்மு கோபத்தில் படபடவென பேசவும்

மாலினி எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி நிற்க

அருகில் நின்ற ஜெசி மச்சி “ஒய் திஸ் எமோஷன்? ரிலாக்ஸ் ..ரிலாக்ஸ்” என அவளை சமாதனபடுத்தினாள்.

“இல்லை ஜெசி …இவ பாட்டுக்கு நேத்து எல்லாத்தையும் கொட்டிட்டு போய்ட்டா…. எனக்கு நைட் பூரா தூக்கமே இல்லை…..இவளுக்காக அனுதாப படறதா….இல்லை அடுத்தது என்னனு யோசிக்கிறதான்னு குழப்பி தலைவலி வந்தது தான் மிச்சம். இவ பொறுப்பே இல்லாம எப்படி வரான்னு பாரு…இன்னும் சின்ன பிள்ளை மாதிரி இப்படி இருந்தா எப்படி?” என தன் தோழி இன்னும் நிலைமையின் தீவீரத்தை உணராமல் இருக்கிறாளே என்ற கோபத்தில் ஜமுனா பேசவும்

“ அச்சோ அப்படி எல்லாம் இல்லை ஜம்மு என வேகமாக மறுத்த மாலினி நீங்க என் மேல கோபத்தில இருப்பீங்க…என் கூட பேச மாட்டீங்கனு நினைச்சுதான்” என தடுமாற்றத்துடன் சொல்லவும்

“அடியேய் எனக்கு வர கோபத்துக்கு” ஜெசி ஆத்திரத்துடன் தன்பல்லை கடித்தவள் “அதுக்காக அப்படியே அவன் கூட போயிடுவியா” என இப்போது ஜெசி வார்த்தைகளை விட

“ஐயோ என்ன ஜெசி இப்படி பேசற….இல்லை எனக்கு பயமா இருந்தது…அதான் ” என்றவள் வார்த்தைகளை முடிக்காமல் அப்படியே நின்றாள் மாலினி .

உடனே ஜெசி “இங்க பாரு ப்ரிண்ட்ஸ்னா என்ன நினச்ச ….ஜாலியா பேசறதுக்கும் ஊர் சுத்தறதுக்கு மட்டும் தான் நினைச்சியா……எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருந்தா இப்படிதான் விட்டு போயிருப்பியா நீ” … என கோபமாக கேட்டாள்.

“என்ன வார்த்தை சொல்ற ஜெசி…..இப்படி எல்லாம் பேசாத ……எந்த சூழ்நிலையிலும் உங்களை விட்டு போகமாட்டேன் ……இப்பவும் என் மேலதான் எனக்கு கோபம்……நான் மட்டும் நல்லவளா இருந்தா உங்க நட்பு எனக்கு கடைசி வரைக்கும் இருக்கும்ல” என மாலினி பதறி தன் மனநிலையை சொல்ல

உடனே ஜம்முவோ அவள் அருகில் வந்து அவளை தன் தோளோடு அணைத்தவாறு “இங்க பாரு மாலினி இந்த உலகத்துல தப்பு செய்யாதவங்க யாரும் கிடயாது. எல்லாத்துக்கும் சூழ்நிலை தான் காரணம். அதனால நீ மனச போட்டு குழப்பிக்காத…..நம்ம மூணு பேரும் எப்படிபட்டவங்களா இருந்தாலும் ப்ரிண்ட்ஸ் தான்…இதில எப்பவும் மாற்றம் இருக்காது” என அவளுக்கு நம்பிக்கை வார்த்தை அளிக்க, மாலினி முகத்தில் அதுவரை இருந்த கலக்கம் மறைந்து சற்று நிம்மதி பிறந்தது.

“சரி நீ சாப்ட்டியா” என அவள் கேட்க

மாலினியோ “இல்லை” என தலை ஆட்ட

உடனே ஜெசி வேகமாக தன்னிடம் இருந்து டிபன்பாக்ஸ் எடுத்தவள் “இந்தா சாப்பிடு” என்றாள்.

“இல்லை வேண்டாம் பசிக்கலை” என மாலினி சொல்லவும்

“இங்க பாரு மாலினி நீ சாப்பிடாம இருக்கிறதால எந்த பிரச்சனையும் தீர போறதில்லை…..நீ சாப்பிட்டு முடிச்சாதான் அடுத்தது என்னனு நம்ம யோசிக்க முடியும்…..இதில இருந்து வெளிவரது எப்படின்னு பார்க்கணும் ” என்றார்கள் இருவரும்..

உடனே “அது முடியுமா ஜம்மு……இதில இருந்து என்னால வெளிவர முடியுமா? அவன்தான் போட்டோ வச்சு மிரட்றானே…எப்படி ஜம்மு?” என நம்பிக்கையற்று மாலினி பேச

“முடியும் மாலினி…..ஆனா அதுக்கு எனக்கு அவனை பத்தின முழு விபரம் வேணும் என்றவள் நீ முதல்ல சாப்பிடு…அப்புறம் இன்னைக்கு நம்ம கிளாஸ் அட்டென்ட் பண்ண வேண்டாம். பக்கத்தில இருக்க பிள்ளையார் கோவிலுக்கு போலாம்….இதை பத்தி பேசி ஒரு முடிவு எடுக்கலாம்” என்றவர்கள் மாலினி சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து கிளம்பினர்.

கோவிலுக்கு வந்ததும் நேரிடியாக விஷியதிற்கு வந்தாள் ஜெசி. “சொல்லு ஜம்மு நம்ம அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அவனை அடிச்சு துவம்சம் பண்ணனுமா? அதுக்கு நம்ம கைவசம் ஆளுங்க இருக்காங்க……அதும் நம்மள மாதிரி பொண்ணுங்க தான்…. பெண்களுக்கு எங்க அநியாயம் நடந்தாலும் கிளம்பிடுவாங்க……அந்த கூட்டத்தோட தல, தளபதி ரண்டு பேரும் எனக்கு தெரிஞ்சவங்க தான்……சொன்னா போதும்….காயமே இல்லாம ஆனா புத்தூருக்கு போற மாதிரி ஊமை அடியாவே பின்னிடுவாங்க” என முகத்தை சீரியசாக வைத்துகொண்டு அவள் சொல்லி கொண்டிருக்க மாலினியோ கேட்டுகொண்டிருந்தவள் சற்று அதிர்ந்து “என்ன ஜெசி சொல்ற…அப்படி பொண்ணுங்க இருக்காங்களா?” எனஆச்சரியத்துடன் கேட்டாள்.

‘”பின்ன என்ன உன்னை மாதிரியா இருப்பாங்க…..அவங்க எல்லாம் பழகிரதுக்கு பண்பான ஆளுங்க…ஆனா சீண்டீனா அவ்ளோதான் சிதைச்சிடுவாங்க… அதுவும் இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் துவம்சம் பண்ணிடுவாங்க…அவங்களும் பொண்ணுங்கதான்…..பிரச்சனையை கண்டு ஓடி ஒழிய மாட்டாங்க ‘ என அவள் சொல்லவும்

மாலினியின் முகம் உடனே சுண்டிபோனது.

“விடு ஜெசி பழசை பேசி அவளை வேதனை படுத்தாதேனு சொல்றேன்ல” என அவளை அடக்கிய ஜம்மு “இதில உன்னோட தப்பு மட்டும் இல்லை மாலினி….உன் வீட்டு சூழ்நிலை, பணத்தை தேடி ஓடுற அப்பா, பெத்த பிள்ளையோட மனச புரிஞ்சுக்காம மத்தவங்க சொல்றத கேட்டு பயந்தே வாழ்க்கை நடத்திற அம்மா, ப்ரிண்ட்ஸ்ம் உனக்கு கிடையாது, இந்த மாதிரி சூழ்நிலையில எந்த பொண்ணா இருந்தாலும் நீ செஞ்சத தான் செய்வா” என நடந்த நிகழ்வுக்கான அடிப்படை காரணத்தை அவள் சொல்லவும்

உடனே மாலினி வேகமாக “இல்லை ஜம்மு எங்க அம்மாவும் அப்பாவும் ரொம்ப நல்லவங்க….நான் தான் அவங்களை புரிஞ்சுக்காம நடந்துகிட்டேன் ” என அவள் பெற்றோரை நியாயபடுத்த
.

உடனே ஜெசி “இப்போ நாங்களும் அவங்க தவறானவங்கனு சொல்லலை மாலினி…..பணம் மட்டுமே ஒரு குழந்தைக்கு சந்தோசம் கொடுக்காது….உன்னை நல்ல ஸ்கூல்ல சேர்த்து விட்ட உங்க அப்பா அங்க உன்னோட தேவைகள் என்னனு கேட்டு செஞ்சிருக்கணும் இல்லயா ….உங்க அம்மா கிராமத்து ஆளுங்கன்னு சொல்ற….அதனால அவங்களுக்கு அது தெரியாம இருக்கலாம்….ஆனா உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிருக்கும் இல்லியா….சரி நீ உங்க அப்பாவோட எத்தன முறை வெளிய போயிருப்ப” என கேட்க

மாலினியோ “நாங்க மூனுபேரும் சேர்ந்து எங்கும் போனதில்லை ஜெசி என்றவள் வருஷம் ஒரு முறை எங்க ஊருக்கு அம்மாகூட போவேன்…..அப்புறம் ஏதாவது முக்கியமான உறவுகாரங்க விசேஷத்திற்கு நானும் அம்மாவும் போபிடுவோம்….அப்பா அப்படியே வந்திடுவாரு…அதும் சில நேரம் அவர் வந்திட்டு போறது கூட எங்களுக்கு தெரியாது”…..என்றாள்.

ஜம்முவிற்கோ இதை கேட்டதும் கண்கள் கலங்க பழைய நினைவுகள் அவள் கண் முன்னே வந்து சென்றது. ஜெஸியும் அதிர்ச்சியுடன் “என்னடி இப்படி சொல்ற” என கேட்க அதற்குள் ஜம்மு “சரி விடு விடு நடந்து முடிஞ்சதை பத்தி இனி பேசவேண்டாம்…நடப்பதை பேசுவோம்” என பேச்சை நிகழ்வுக்கு கொண்டு வந்தாள்.

திடிரென மாலினி தோழிகள் இருவர் கைகளையும் பிடித்தவள் கண்களில் கண்ணீர் மடமடவென கொட்ட “என்னை இந்த பிரச்சனையில இருந்து நீங்க காப்பாற்றி விடுவீங்களா” என கேட்கவும்

அதுவரை சாதாரணமாக பேசிகொண்டிருந்தவர்கள் அவளது செயலில் சில நொடிகள் திகைத்து நின்றனர்.

மாலினியோ தனது இருண்ட வாழ்க்கையில் இவர்கள் ஒளியை ஏற்றுவார்களா? தன் வாழ்விலும் மாற்றம் வருமா ? அது முடியுமா? என பலவித குழப்பத்தோடு அவர்கள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தாள்.

அவள் கையேந்தி அவர்கள் முன் நிற்கும் அந்த கோலத்தை பார்க்க முடியாமல் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துகொண்ட ஜம்மு “நாங்க இருக்கிற வரை உனக்கு எந்த கஷ்டமும் வராது மாலினி” என்றவள் அப்போது அவர்களையே பார்த்து கொண்டிருந்த ஜெசியிடம் “சீக்கிரம் ஒரு தீர்வு சொல்லு” என கண்களால் சொன்னாள்.

“பேசாம போலீஸ்க்கு போய்டலாம் ஜம்மு …..இப்போ இருக்க சட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு சாதகமாகத்தான் இருக்கு….அதனால பிரச்சனை இல்லை…..ஏன்னா அவன்கிட்ட போய் நாம் கெஞ்சினா ஆகாது…மயிலே மயிலேனா இறகு போடாது……உள்ளவிட்டு முட்டிக்கு முட்டி தட்டினாதான் இதுக்கு தீர்வு” என தன் தோழியின் நிலை பார்த்து நெஞ்சு பொறுக்காமல் அவள் ஆத்திரமும் கோபமுமாக பேச

ஜமுனாவோ சிறிது நேரம் யோசித்தவள் “ ஜெசி நீ சொல்ற மாதிரி அதிரடி முடிவுகள் எல்லாம் எடுக்க முடியாது. ஏன்னா அவனை பத்தின முழுவிபரம் நமக்கு தெரியாது. அப்புறம் இவளோட போட்டோ வேற அவனிடம் இருக்கு….நம்ம ஏதாவது செஞ்சு அவன் கோபத்தில அதை ஷேர் பண்ணிட்டா அவ்ளோ தான்” என சொல்லி முடிக்கவும்

“ஐயோ கடவுளே இதற்கு நான் செத்தே போய்டலாம்” என நடுக்கத்துடன் மாலினி அலறினாள்.

“ஹே நீ கொஞ்சம் பேசாம இரு என அவளை அடக்கிய ஜெசி இப்போ நம்ம டிஸ்கஸ் தான் பண்றோம்…இன்னும் முடிவு பண்ணலை” என்றவள் ஜம்முவிடம் திரும்பி “இதை எப்படி சமாளிக்கிறது வேற வழி ஏதும் இல்லையா “ என்றாள்.

“.ம்ம்ம்ம் பேசாம அவங்க அப்பாகிட சொல்லி உதவி கேட்கலாமா” என ஜம்மு சொன்ன அடுத்த நொடி “வேண்டாம் ஜம்மு…..அவர் இப்போதான் உடல்நிலை கொஞ்சம் தேறி வரார்.இதையெல்லாம் தாங்கமாட்டார்” என தடுத்தாள் மாலினி.

“அப்போ இதுக்கு என்னதான் தீர்வு….எப்படித்தான் இதில இருந்து வெளியே வரது..எந்த பக்கம் போனாலும் இடிக்குது” கவலையுடன் கேட்டாள் ஜெசி.

தனக்காக தோழிகள் இருவரும் குழம்பிகொண்டிருப்பதை பார்த்துவள் “சரி விடுங்கப்பா…..நான் வாங்கி வந்த வரம் அப்படி…..எங்க அம்மா அப்பாவை ஏமாத்தனும்னு நினச்சு இப்போ நான் ஏமாந்து நிக்கிறேன்…..நான் செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிச்சே ஆகணும்….நீங்க இதை விட்ருங்க…முடிஞ்ச அளவு போராடறேன்…..அப்புறம் …அப்புறம் என அழுகையும் தோம்பலுமாய் நானே என்னை அழிச்சிக்கிறேன் ” என மாலினி சொல்லி முடிக்கும் முன்

“அறிவுகெட்டத்தனமா பேசாத …… நீ சாகனும்னு நினச்சா எப்பவே செத்து இருந்திருக்கணும்….இனி இப்படி பேசாத…..எந்த ஒரு கஷ்டத்திற்கும் தீர்வு உண்டு…..அதை நம்ம தான் கண்டுபிடிக்கணும்…..இனி இப்படி நம்பிக்கையில்லாம பேசாத” என ஜம்மு கோபமாக அவளை திட்ட

அதற்குள் ஜெசி அலைபேசி அலறவும் எடுத்து பார்த்தவள் அதில் நந்துவின் பெயர் தெரிய சட்டென அவள் மனதில் ஒரு எண்ணம் வர அலைபேசியை எடுத்துகொண்டு வேகமாக வெளியே சென்றவள் சில வினாடிகள் கழித்து உள்ளே வந்தவள் “ஹப்பா இனி ஒரு பிரச்சனையும் இல்லை” என சொல்லிகொண்டே அமர்ந்தாள.

“என்னடி பிரச்சனை இல்லை..யாரு போன்ல” என ஜம்மு கேட்க

“நந்து தான் ஜம்மு……எவ்ளோ விஷியங்களை யோசிச்சோம்…அவனை நினைக்களை பாரு…நீ கவலைபடாத மாலினி….நந்துகிட்ட சொல்லி அவனை ஒரு வழி பண்ணிடலாம்” என அவள் உற்சாகமாக பேச

அதை கேட்டதும் மாலினி ஜம்மு இருவரின் முகமும் மாறிவிட ஏனெனில் அப்போது தான் மாலினி ஜம்முவிடம் “நம்ம மூன்று பேரை தவிர இது யாருக்கும் தெரிய கூடாது……. பிறகு அவங்க என்னை பார்க்கும்போது எல்லாம் அவமானத்தில நான் செத்தே போய்டுவேன் …அதனால வெளியே யாருக்கும் சொல்லவேண்டாம்” என சொல்லி கொண்டிருந்தாள். இப்போது ஜெஸியின் அவசரபுத்தியை நினைத்து கோபமும் எரிச்சலும் வர “ஏண்டி உனக்கு ஏதாவது அறிவிருக்கா……வெளியே சொல்ற விஷியமா இது……உன்னை யாரு எங்களை கேட்காம நந்துகிட்ட பேச சொன்னா…..கடவுளே நந்துகிட்ட சொன்னா அடுத்தது கோட்டானுக்கு தெரியும் அப்படியே அது பசங்க நடுவுல பரவிடாதா….இது எல்லாம் நீ யோசிக்கவே மாட்டியா” என எரிச்சலுடன் ஜமுனா திட்ட

“ இல்லை ஜம்மு நான் மாலினிக்கு உதவி பண்ணலாம்னு நினச்சு தான் சொன்னேன்…அவன் ரொம்ப நல்லவன் …யார்கிட்டையும் சொல்ல மாட்டான்….உனக்கும் தெரியும் தான ” என்றாள் ஜெசி.

“அதுக்காக இது எல்லாம் போன்ல சொல்ற விஷியமா ஜெசி” என அவள் சலித்தபடி கேட்க

“நான் விபரம் ஏதும் சொல்லை …கோவிலுக்கு வானு மட்டும் தான் சொன்னேன்” என்றாள் அவள்.

உடனே மாலினி நிமிர்ந்து தோழியை பார்க்க புரிந்து கொண்ட ஜம்முவும் . “நீ அவங்களை வரவேண்டாம்னு சொல்லிடு” என்றாள்.

ஜெசி மாலினிய பார்க்க “அவளோ வேண்டாம் ஜெசி….வெளிய யாருக்கும் தெரிய வேண்டாம்…எப்படியும் பரவிடும்” என அழுவது போல சொல்ல ஜெசி நந்துவிடம் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

.
பின்னர் தோழிகள் மூவரும் வெகுநேரம் ஆலோசனை செய்து இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது முதலில் அந்த சதிஷை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும்….அவனது நட்பு வட்டாரம், மேலும் மாலினி பற்றிய தகவல்களை வேறு யாரிடமாவது சொல்லி இருக்கிறானா என்பதை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். அதற்கு பிறகு அவனிடம் இருந்து மாலினியை எப்படி மீட்பது என்பதை பற்றி யோசிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

வீட்டிற்கு சென்ற ஜமுனாவிற்கு எண்ணங்கள் முழுவதும் மாலினியை சுற்றியே இருந்தது. ராணியம்மா கூட “என்னாச்சு பாப்பா……என்ன யோசனையாவே இருக்க …வீட்ல ஏதாவது பிரச்சனையா” என கேட்டார். அவரிடம் பதில் சொல்லாமல் சிரித்தே சமாளித்தவள் மறுநாள் கல்லூரி வந்ததும் தான் யோசித்து எடுத்த முடிவை சொல்ல தோழிகள் இருவரும் திடுக்கிட்டனர்.

“வேண்டாம் ஜம்மு இது ஆபத்தான முயற்சி…..அந்தரத்தில் கயிற்றில் நடப்பது போல ….ஏதாவது குளறுபடி நடந்தால் அப்புறம் உன் நிலைமை நினைச்சு பாரு …வேண்டாவே வேண்டாம்” என ஜெசி பதற

மாலினியோ “இது போன்ற செயல்கள் எல்லாம் வேண்டாம் ஜம்மு….நானே தெரியாமல் ஒரு தவறு செய்திட்டு தவிச்சு நிக்கிறேன்…நீ தெரிஞ்சும் வேண்டாம்…வேண்டாம் ….நீங்க எனக்கு உதவி செய்யறேனு சொன்னதே சந்தோசம் தான். இந்த மாதிரி விபரீத முடிவு எல்லாம் வேண்டாம். இதில ஏதாவது குழப்பம் வந்திட்டா அப்புறம் அந்த குற்ற உணர்ச்சி என்னை வாழவே விடாது…வேண்டாவே வேண்டாம்” என வேகமாக மறுத்தவள் “இனி என்னோட வாழ்க்கையை நான் பார்த்துகிறேன்…..நீங்க படிக்கிற வேலையை மட்டும் பாருங்க …..இதோட இனி இந்த பேச்சை விட்டுருவோம்” என தனக்காக தன் தோழி எவ்ளோ பெரிய முடிவு எடுத்திருக்கிறாள் என மனதிற்குள் மகிழ்ச்சி இருந்தாலும் அதனால் அவளுக்கு ஏதாவது துன்பம் வந்துவிடுமோ என்ற பயத்தில் அவள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

மலராத மொட்டாய்
தொடுக்காத பூக்களாய்
கருகிவிடுமோ வாழ்வு
என நினைத்திருக்க
விக்கலுக்கு நீர்போல்
வேதனைக்கு
நட்பு தோள்கொடுக்க
சிக்கலுக்கு விடையும்
கிடைத்துவிடுமோ?
விழிகளில் சிரிப்பும்
நிலைத்திடுமோ?
தடம் மாறிய வாழ்வு
இடம் மாறுமோ?
என ஏக்கத்துடன் அவள்.!

பூக்களின் வாசம் தொடர்ந்து வீசும்

மக்களே தயவு செய்து மீண்டும் 1 TO 10 UD படிச்சுட்டு அப்புறம் இந்த UD படிங்கப்பா ப்ளீஸ்

அப்போதான் கதை ப்ளோ உங்களுக்கு புரியும்…

உங்களுகே தெரியும். எனது கதையின் சுவாசம் உங்களது விமர்சனம் தான்.

அதனால கதை படிச்சுட்டு அவசியம் உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க மக்கா …..அத பார்த்தும் தான் நான் இதை தொடரலாமா, வேண்டாமானு முடிவு பண்ண முடியும்.

உங்களுக்காக காத்திருக்கிறேன்

pls drop ur comnts below

 

2 thoughts on “பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் -11”

  1. thank you so much
    nice flow and story
    i was waiting to read the UD
    also i am waiting for the next UD
    congrats to write more
    thank you
    byeee

    2016-08-29 20:26 GMT+05:30 lashmiravi :

    > lashmiravi posted: ” ஹாய் ப்ரிண்ட்ஸ் அனைவர்க்கும் இனிய இரவு வணக்கம்
    > பாலைவனத்தின் பன்னீர் பூக்கள் அத்தியாயம் -11 அத்தியாயம் –11 அடைத்து
    > வைத்திருந்த மடையை திறந்து விட்டார் போல் மனதில் புதைந்து கிடந்த தன் வாழ்வின்
    > ரகசியங்களை தடையின்றி கொட்ட”
    >

Leave a comment